‘என் இனிய தனிமையே முதல் பாடல் வெளியீடு’

0
190

‘என் இனிய தனிமையே முதல் பாடல் வெளியீடு’

வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் இனிய தனிமையே” என்கிற அவருடைய அடுத்த படத்திற்காக ஆட்டோ புலி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்துடன் கைகோர்க்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். நாயகியாக ரீஷா நடிக்கிறார்.

ஸ்ரீபதி 2023ல் வெளியாக உள்ள சில தமிழ் படங்களில் டைட்டில் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சதீஷ் சரண் இயக்கத்தில் சைமன் கிங் இசையில் உருவாகியுள்ள ‘பெண்டுலம்’ திரைப்படத்தில் ‘அசுரன்’ படப் புகழ் அம்மு அபிராமி மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் மோகன் டச்சு இயக்கத்தில் கே.யு கார்த்திக் இசையில் உருவாகியுள்ள ‘அங்காரகன்’ என்கிற படத்தில் சத்யராஜ் மற்றும் மலையாள நடிகை நியா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீபதி.

‘என் இனிய தனிமையே’ படம் மூலம் சகு பாண்டியன் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.

இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு கனமான செய்தியுடன் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கர்பச்சான் படங்களில் பணியாற்றிய சிவபாஸ்கரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை இசையமைத்துள்ளார்.

‘சீதாராமம்’ படத்தின் மலையாள வெர்சனில் இடம்பெற்ற ‘ஒரு கரையாரிகே’ பாடல் புகழ் சிபி ஸ்ரீனிவாசன் ஒரு அருமையான லவ் பீட் பாடலை பாடியுள்ளார்.

அதேசமயம் கேரளாவை சேர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி இதயத்தை உருக வைக்கும் அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இந்த படத்தின் முதல் பாடல் இன்று (ஜனவரி 26) வெளியாகிறது

தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்

தயாரிப்பாளர் ; S.P மாலதி

நிர்வாக தயாரிப்பாளர் ; ஆட்டோ புலி முருகன்

இயக்குனர் ; சகு பாண்டியன்

இசையமைப்பாளர் ; ஜேம்ஸ் வசந்தன்

ஒளிப்பதிவு ; சிவபாஸ்கரன்

படத்தொகுப்பு ; திருச்செல்வம்

நடனம் ; வாசு நவதீபன்

உதவி இயக்குனர்கள் ‘ சத்ரியன் சத்யராஜ், அருள் நித்தியானந்தம், சபரீஸ்வரன், கே குருநாத் சேகர்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

திட்ட வடிவமைப்பாளர் ; L,விவேக் (பிரிம்ரோஸ் என்டர்டெயின்மென்ட்)