வித்தைக்காரன் சினிமா விமர்சனம் : வித்தைக்காரன் சாதுர்யமாக செயல்படும் கடத்தல் மன்னன் | ரேட்டிங்: 2.25/5

0
243

வித்தைக்காரன் சினிமா விமர்சனம் : வித்தைக்காரன் சாதுர்யமாக செயல்படும் கடத்தல் மன்னன் | ரேட்டிங்: 2.25/5

ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில் வித்தைக்காரன் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் வெங்கி

இதில் சதீஷ், சிம்ரன் குப்தா ஆனந்தராஜ், மதுசூதனன், ஜான் விஜய், சாம்ஸ், ஜப்பான் குமார், பவெல் நவகீதன், மாரிமுத்து, சுப்ரமணியம் சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை : விபிஆர், ஒளிப்பதிவு : யுவ கார்த்திக், எடிட்டர் : அருள் இளங்கோ சித்தார்த், கலை : ஜி.துரைராஜ், சண்டைக்காட்சிகள் : ஸ்டன்னர் சாம், ஆடை வடிவமைப்பாளர் : கிருத்திகா சேகர், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: எஸ்.என்.அஸ்ரப், தயாரிப்பு நிர்வாகி : ஹக்கீம் சுலைமான், ஸ்டில்ஸ்: எஸ்.பி.சுரேஷ், இணை தயாரிப்பாளர் : சு. முரளி கிருஷ்ணன், இணை இயக்குநர்கள்: ஏ.அபிலாஷ், அனீஷ் ரத்தினம், மாரிஸ், உதவி இயக்குநர்கள்: ஜி.ஹரிஹரன், ராஜேஷ்வரன்.ஜே, வி.பிரபாகரன், வி.கே.செந்தில் ராஜன், ஸ்ரீPராம் ஜி.வி., வசீகரன் தனவேல், சுபேத் சையத், மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)

தான் கற்ற வித்தையை வைத்து ஏமாற்றி களவாடும் தொழிலை செய்து வரும் வித்தைக்காரன் மேஜிக் நிபுணரான வெற்றி (சதீஷ்). கடத்தல்காரன் மாரி கோல்ட் (சுப்பிரமணிய சிவா) வைத்திருக்கும் தங்கத்தை கடத்த இன்னொரு கடத்தல்காரன் அழகுடன் (ஆனந்தராஜ்) இணைந்து களவாட முயலும் போது ஏற்படும் ஆபத்தால் வெற்றிக்கு தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது. அதன் பின் கல்கண்டு ரவி (மதுசூதனன் ராவ்) இடம் இருந்து வைரத்தை அடிக்க மாரிகோல்ட் மற்றும் அழகுடன் சேர்ந்து வெற்றி வியூகம் அமைக்கிறான். அதன் பிறகு கூட்டணி களவாணிகள் வைரத்தை கடத்தினார்களா? கல்கண்டு ரவி, மாரி கோல்ட், அழகு மூவரின் வாழ்க்கையிலும் வெற்றியின் வித்தைகள் எப்படி சிக்கலில் மாட்ட வைக்கிறது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

நண்பன், காமெடியன் என்ற பல கேரக்டர்களை தன் இயல்பான நடிப்பால் கவர்ந்த சதீஷ் கதாநாயகனாக காலூன்ற முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார். ஹீரோவாக நாய் சேகர், ஒ மை கோஸ்ட், கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தை தொடர்ந்து மேஜிக் நிபுணராக வித்தைக்காரன் படத்தில் களமிறங்கியிருக்கிறார். மாஸ் ஹீரோவிற்கு கொடுக்கும் பில்டப் எல்லாம் படத்தில் சரியாக கொடுத்திருந்தாலும் அதை உள்வாங்கி நடிக்கும் தருணங்களில் இன்னும் கவனம் செலுத்தி நடித்திருக்கலாம். வித்தைகள் குறைவாகவும், காமெடி அளவாகவும், கடத்தல்காரர்களை சுத்த விடுவதில் கில்லாடியாகவும், உதவி செய்வதை மறைமுகமாகவும் தன்னால் முடிந்த வரை படத்தை கரை சேர்த்திருக்கிறார்.

ஆரம்பம் நன்றாக இருந்தாலும் அதன் பின் சிம்ரன் குப்தா எங்கே எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

மற்றும் ஆனந்தராஜ், மதுசூதனன், ஜான் விஜய், சாம்ஸ், ஜப்பான் குமார், பவெல் நவகீதன், மாரிமுத்து, சுப்ரமணியம் சிவா ஆகியோர் செய்யும் காமெடி அளப்பறைகள் துரத்தல்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

யுவ கார்த்திக்கின் ஒளிப்பதிவு கடத்தல் காட்சிகளையும், ஏர்போர்ட் காட்சிகளையும் காட்சிக்கோணங்களில் தோய்வில்லாமல் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

எடிட்டர் அருள் இளங்கோ சித்தார்த் படத்தில் பல காட்சிகளில் உன்னிப்பாக கவனித்து செயல்படவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.

விபிஆர் இசை சராசரியாக உள்ளது. பாடல்கள் சுமார் ரகம்.

கடத்தல் வித்தைக்காரன் கொள்ளையடிக்கும் வைரத்தை துரத்தும் மாஃபியா கும்பல் கதையில் பிளாக்மெயில், நகைச்சுவை, ஞாபகமறதி, துரத்தல், சரீயஸ் எல்லாம் கலந்த கலவையாக திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் வெங்கி. முதல் பாதி காமெடியுடன், இரண்டாம் பாதி ஏர்போர்ட் வளாகத்தில் கொள்ளையடிக்க முயல்வது என்று படத்தை நான் லீனியராக தொடங்கி பின்னர் தடம் மாறி திருப்பத்துடன் அனைத்து கேள்விகளுக்கும் விடையை இறுதிக் காட்சியில் கொடுத்து அவசர அவசரமாக முடித்துள்ளார் இயக்குனர் வெங்கி.

மொத்தத்தில் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில் வித்தைக்காரன் சாதுர்யமாக செயல்படும் கடத்தல் மன்னன்.