இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டீரியர் டிசைனர்ஸின் (IIID) வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பத்மஶ்ரீ தோட்டாதரணியின் கலைப்படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன

0
151
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டீரியர் டிசைனர்ஸின் (IIID) வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பத்மஶ்ரீ தோட்டாதரணியின் கலைப்படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டீரியர் டிசைனர்ஸ் (IIID) வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் தொடர்பான வணிகம் உள்ளிட்டவற்றை குறிக்கும் நிறுவனம்.
மேலும் IIID வெள்ளி விழாவின் சிறப்பம்சமாக  புகழ்பெற்ற கலை இயக்குனரான பத்மஸ்ரீ தோட்ட தரணியின் அபாரமான படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது.
 துடிப்பான வண்ணங்களின் கலவை முதல் மோனோக்ரோம் வரையிலான நிறங்களின் தனித்துவமான பயன்பாடு, அவரது கூரிய கவனிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் இணைந்து, அவரது அரிய திறமையை இந்த கண்காட்சி  எடுத்துக்காட்டும். நான்கு தலைமுறை அனுபவங்களைக் கொண்ட தோட்டா தரணி,  கலைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.  குறிப்பாக சினிமா செட் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை சுவரோவியங்களில், சென்னையை தாண்டி அகில இந்திய அளவில் ஒரு அழியாத முத்திரையை பதித்தவர் தோட்டா தரணி.
இந்த கண்காட்சி தொடக்க விழாவில், ஜிஆர்டி ஹோட்டல்ஸ் சிஇஓ விக்ரம் கோட்டா, ஹம்சத்வனி துணைத் தலைவர், முன்னாள் செயலாளர் FICCI FLO,கவுன்சில் உறுப்பினர் WICCI ரச்சனா குமார், கட்டிடக்கலை வடிவமைப்பாளர்  மற்றும் ரெயின்-ஸ்டுடியோ ஆஃப் டிசைனின் இணை நிறுவனர் வம்சி கிருஷ்ணா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக IIID- CRC  தலைவர் Ar. Pa. ரவி,IIID- CRC கௌரவ செயலாளர் தர்மேஷ் மேத்தா, அலையன்ஸ் ஃபிரான்சைஸ் மெட்ராஸின் இயக்குனர் பாட்ரிசியா தெரி ஹார்ட் ஆகியோர் பங்கேற்றனர்.
 இந்த கண்காட்சி  பிப்ரவரி 24 முதல்  பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் எனவும் இதற்கு கட்டணம் இல்லை என்றும்  IIID நிறுவனம் அறிவித்துள்ளது.
IIID இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 10,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு முப்பத்தி நான்கு சேப்டர்கள் மற்றும் மையங்களுடன், சமகால சவால்களுக்கு  ஏற்ப, நாட்டின் பரப்பை வடிவமைப்பதில் IIID முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த IIID வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,   சென்னை சேப்டர் வடிவமைப்பு சங்கமங்கள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் நேரடி பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்துள்ளது.கூடுதலாக,தனித்தன்மை வாய்ந்த ‘நம்ம சென்னை’ என்கிற தலைப்பில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பொது இடங்களை வடிவமைக்க உள்ளது.