தூக்குதுரை சினிமா விமர்சனம் : தூக்குதுரை காதலும் சாபமும் துரத்தும் பயணத்தில் தடுமாறும் முள் கிரீடம் | ரேட்டிங்: 2.5/5

0
130

தூக்குதுரை சினிமா விமர்சனம் : தூக்குதுரை காதலும் சாபமும் துரத்தும் பயணத்தில் தடுமாறும் முள் கிரீடம் | ரேட்டிங்: 2.5/5

ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோரின் தயாரித்துள்ள தூக்குதுரை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத்.

இந்த படத்தில் இனியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தலைப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு -ரவிவர்மா , இசை-கே.எஸ். மனோஜ், எடிட்டிங்- தீபக் எஸ் துவாரகநாத், கலை-ஜெய் முருகன் மற்றும் பாக்யராஜ், சண்டை-மான்ஸ்டர் முகேஷ் மற்றும் ராம்குமார், பாடல்கள்-அறிவு மற்றும் மோகனராஜன், உடை-நிவேதா ஜோசப் மற்றும் பாலாஜி, ஒப்பனை-முகம்மது, நடனம்-ஸ்ரீதர், தயாரிப்பு மேற்பார்வை-மனோஜ்குமார், தயாரிப்பு நிர்வாகி-பாலாஜி பாபு, எக்சிகியுடிவ் புரொட்யூசர்- ஜெயசீலன், மக்கள் தொடர்பு டி ஒன், சுரேஷ் சந்திரா.

படம் 2000ஆம் ஆண்டு காலகட்டத்தில் தொடங்குகிறது அதாவது மன்னர் வம்சத்தில் பிறந்த மாரிமுத்து, நமோ நாராயணன் இருவரும் செல்வாக்கு மிகுந்த சகோதர்களாக கைலாசம் கிராமத்தில் வசிக்கின்றனர். ஊரின் முதல் மரியாதையும், தங்க கிரீடமும் மாரிமுத்துவிற்கே எப்பொழுதும் கிடைக்க, இதனால் நமோ நாராயணன் வெறுப்பிலும் பொறாமையிலும் கோபத்திலும் இருக்கிறார். இந்த சமயத்தில் சினிமா படங்களை திருவிழாவிக்களுக்கு சென்று ஒளிபரப்பும் யோகிபாபுவை இனியா விரும்புகிறார். கைலாசம் கிராமத்திற்கு திருவிழாவிற்கு வரும் யோகிபாபுடன் இனியா ஊரை விட்டே ஒடும் போது கிராமத்து மக்கள் பார்த்து இவர்களை துரத்துகிறார்கள். அதன் பின் திருவிழாவே அந்த கிராமத்தில் கொண்டாட முடியாமல்  தடைகள் பல வருகிறது. இந்த காட்சியுடன் ஆரம்பிக்கும் கதைக்களம் இருபது வருடங்களுக்கு பிறகு பயணிக்கிறது. மகேஷ் சுப்ரமணியம், பால சரவணன், சென்றாயன் மூவரும் வேலை கிடைக்காமல் கொள்ளையடிப்பதை தொழிலாக செய்யும் மொட்டை ராஜேந்திரனிடம் பயிற்சி பெற உதவியாளராக சேர அவர்களை கைலாசம் கிராமத்திற்கு சென்று தங்க கிரீடத்தை கொள்ளையடிக்க அனுப்பப்படுகின்றனர். இவர்கள் மூவரும் கைலாச கிராமத்தில் திருவிழாவை வீடியோ எடுக்க வந்ததாக பொய் சொல்லி தங்கி, தங்க கிரீடம் யாரிடம் இருக்கிறது என்பதை அறிந்து, மாரிமுத்து வீட்டிற்கு சென்று கொள்ளையடிக்க முயற்சிக்க  வீட்டில் இருக்கும் நபர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். இந்த துரத்தலில் கிரீடம் கீழே விழுந்து உடைந்து விட, போலியாக கிரீடம் என்பதை ஊர்மக்கள் அறிகின்றனர். அந்த சமயத்தில் திருவிழாவிற்காக இருபது வருடங்களுக்கு பிறகு இனியா தன் கணவருடன் ஊருக்குள் வருகிறார். இறுதியில் தங்க கிரீடம் என்ன ஆனது? யோகிபாபு என்ன ஆனார்? இனியா யாரை திருமணம் செய்து கொண்டார்? ஊர் மக்களை பயமுறுத்தும் பேய் யார்? தொலைந்து போன தங்க கிரீடம் எங்கே இருக்கிறது? உண்மையான தங்க கிரீடத்தை யார் கண்டுபிடித்தார்கள்? எங்கே? என்பதே படத்தின் முடிவு.

இனியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தலைப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு ஆகியோர் படத்தின் முக்கிய தருணங்களை தங்களின் பங்களிப்பால் திறம்பட கையாண்டு நடிப்பில் ஈடு செய்துள்ளனர்.

ஒளிப்பதிவு -ரவிவர்மா , இசை-கே.எஸ். மனோஜ், எடிட்டிங்- தீபக் எஸ் துவாரகநாத், கலை-ஜெய் முருகன் மற்றும் பாக்யராஜ், சண்டை-மான்ஸ்டர் முகேஷ் மற்றும் ராம்குமார், பாடல்கள்-அறிவு மற்றும் மோகனராஜன்  ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தின் விறுவிறுப்பை கூட்ட முயற்சிகள் செய்திருப்பதை சரியாக பயன்படுத்த தவறியுள்ளார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.

தூக்குதுரை கௌரவ கொலையால் பழங்கால சாபத்தால் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் நடக்க அதன் பின்னணியில்  திருடப்பட்ட கிரீடத்தின் ஃபிளாஷ்பேக் மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டு கொஞ்சம் காதல், தொலைந்து போனதை தேடும் கூட்டணியோடு நகைச்சுவை நெருடலுடன்  படத்தை இயக்கியிருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத். முக்கிய நடிகர்களின் தேர்ந்த நடிப்பை பயன்படுத்த இன்னும் சிரத்தையோடு திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.

ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோரின் தயாரித்துள்ள தூக்குதுரை காதலும் சாபமும் துரத்தும் பயணத்தில் தடுமாறும் முள் கிரீடம்.