பிரேமலு சினிமா விமர்சனம் : பிரேமலு ஒரு அற்புதமான, வேடிக்கையான மற்றும் இளமை நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுவாரஸ்யம் கலந்த ஹைக்கூ காதல் கவிதை | ரேட்டிங்: 3/5

0
379

பிரேமலு சினிமா விமர்சனம் : பிரேமலு ஒரு அற்புதமான, வேடிக்கையான மற்றும் இளமை நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுவாரஸ்யம் கலந்த ஹைக்கூ காதல் கவிதை | ரேட்டிங்: 3/5

பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் தயாரித்திருக்கும் பிரேமலு படத்தை இயக்கியிருக்கிறார் கிரிஷ் ஏ டி.

இதில் நாஸ்லென, மமிதா பைஜு, அல்தாப் சலீம், ஷியாம் மோகன் எம், அகில பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர் கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் :- எழுதியவர்கள்: கிரிஷ் ஏ டி, கிரண் ஜோசி, இசை: விஷ்ணு விஜய், ஒளிப்பதிவு: அஜ்மல் சாபு, எடிட்டர்: ஆகாஷ் ஜோசப் வர்கீஸ், தயாரிப்பு வடிவமைப்பு: வினோத் ரவீந்திரன், பாடலாசிரியர்: சுஹைல் கோயா, ஒலி வடிவமைப்பு: சங்கரன் ஏ எஸ், கே சி சித்தார்த்தன், ஒலி கலவை: விஷ்ணு சுஜாதன், ஸ்டில்ஸ்: ஜான் ஜோசப் ஜார்ஜ், நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: பென்னி கட்டப்பனா, ஜோஸ் விஜய்,தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: ரிச்சர்ட், தமிழ் திரையரங்கம் வெளியீடு  : ரெட் ஜெயண்ட் மூவிஸ், மக்கள் தொடர்பு – சதீஷ் (ஏய்ம்)

சேலத்தில் பொறியியல் பட்டதாரியான 24 வயது சச்சின் (நஸ்லென்), வேலைக்கு செல்ல இங்கிலாந்திற்கான விசா நிராகரிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத்தில் தனது நண்பர் அமல் டேவிஸ{டன் (சங்கீத் பிரதாப்) நுழைவு தேர்வுக்கு பயிற்சிக்காக ஹைதராபாத் செல்;கிறார். அங்கே ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரீனுவும் (மமிதா பைஜு) சச்சினும் ஒரு திருமணத்தில் முதல் முறையாக சந்திக்கிறார்கள். தொடர்ச்சியான நிகழ்வுகளுக்குப் பிறகு, ரீனுவிடம் நட்பாக பழகும் சச்சின் பின் ஒரு தலையாக காதலிக்க தொடங்குகிறார்.  ரீனுவின் ஐடி நிறுவனத்தின் மேலதிகாரி ஆதி(ஷ்யாம் மோகன்) ரீனுவுடன் நெருக்கமாக பழகுகிறார். இதனால் ரீனுவிடம் சச்சின் பழகினாலே ஆதிக்கு பிடிக்காமல் போகிறது. சச்சின் ஆதி இருவரும் ரீனுவின் காதலை பெற என்ன செய்தார்கள்? ரீனு காதலிக்க என்ன தகுதிகள் வேண்டும் என்று நினைக்கிறார்? ரீனு யாரை காதலித்தார்? காதலுக்கு சம்மதம் சொல்லாத ரீனுவிடமிருந்து சச்சின் பிரிந்து சென்றாரா? இறுதியில் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்காதல் கதை.நஸ்லென் மற்றும் சங்கீத் பிரதாப் நண்பர்களாக தங்கள் நகைச்சுவையான நடிப்பாலும் நச்சென்ற வசனங்களாலும் கவர்கிறார்கள். இருவரின் பங்களிப்பு படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்கிறது. அதிலும் துறுதுறுப்பான நஸ்லென் காதலி கிடைக்காமல் ஏங்குவதும், தேர்ந்தெடுக்கும் காதலி தன்னை விட்டு செல்வதை பொறுத்துக்; கொள்ள முடியாமல் தவிக்கும் தருணங்களிலும், இறுதியில் அவர்களை வைத்து சிரிப்பை அடக்க முடியாமல் கேலி செய்யும் காட்சிகளில் தனித்து நிற்கிறார்.

மமிதா பைஜு தனது தத்ரூபமான நடிப்பின் மூலம் மிகவும் ரசிக்க வைத்து வசீகரித்துள்ளார். ஷியாம் மோகன் ஆதியாக படத்திற்கு தனது வலுவான ஆதரவை தந்துள்ளார். பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், ஷமீர் கான் மீதமுள்ள கதாபாத்திரங்கள் தங்களால் முடிந்ததைச் செய்து படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு, படத்தின் பெரும்பகுதி ஹைதராபாத்தில் நடக்கும் காட்சிகள், திருமண வீடு, ரயில் பயணம், ரீனு மற்றும் சச்சின் வீடுகள், ரீனுவின் அலுவலகம் என்று ஒரு அற்புதமான காதலின் இனிமையாக பயணத்தை கொண்டு வருவதில் வெற்றி பெறுகிறார்.

விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தின் சீரான ஓட்டத்தை பராமரிக்க பெரிதும் உதவி செய்து படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறார். நகைச்சுவை காட்சிகளில் எடிட்டிங்கிற்கு முக்கியத்துவம் தந்திருக்கும் வேகம் நன்றாகவே இருக்கிறது.

படத்தில் வரும்  ஒன் லைனர்கள் சில இடங்களில் மீண்டும் மீண்டும் தோன்றினாலும், பெரும்பாலான காட்சிகளில் அவை வேலை செய்கின்றன. நஸ்லென் மற்றும் சங்கீத் பிரதாப் இடையேயான ப்ரோ-மான்ஸ் திரையில் பார்க்க ஒரு விருந்தாக உள்ளது. அதன் எழுத்தில் உள்ள ரிலேட்டபிலிட்டி காரணிதான் இந்தப் படத்தை அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிரீஷ் ஏடி.  நட்பு, காதல், காமெடி கலந்து தோய்வில்லாமல்; 153 நிமிட கால திரைப்படத்தை அனைவரும் ரசிக்கும் வண்ணம் உருவாக்குவது எளிதானது அல்ல. படத்தின் க்ளைமாக்ஸ் சற்று அவசரமாக முடித்து விட்டதன் போன்ற உணர்வு ஏற்படுத்துகிறது. படத்தின் மெகாவெற்றிக்கு இயக்குனர் கிரீஷ் ஏடியின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில், பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் தயாரித்திருக்கும் பிரேமலு ஒரு அற்புதமான, வேடிக்கையான மற்றும் இளமை நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுவாரஸ்யம் கலந்த ஹைக்கூ காதல் கவிதை.