லவ்வர் சினிமா விமர்சனம் : லவ்வர் இன்றைய காதலர்களின் இளமை நிறைந்த அனுபவத்தையும், நிலையில்லா முடிவுகளையும் தடுமாற்றங்களையும் கோடிட்டு சுட்டிக்காட்டும் படம் | ரேட்டிங்: 3.5/5

0
335

லவ்வர் சினிமா விமர்சனம் : லவ்வர் இன்றைய காதலர்களின் இளமை நிறைந்த அனுபவத்தையும், நிலையில்லா முடிவுகளையும் தடுமாற்றங்களையும் கோடிட்டு சுட்டிக்காட்டும் படம் | ரேட்டிங்: 3.5/5

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் சார்பில் நஸிரத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன், யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கும் லவ்வர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரபு ராம் வியாஸ்.

இதில் மணிகண்டன் – அருண், ஸ்ரீ கௌரி ப்ரியா -திவ்யா, கண்ணா ரவி – மதன், ‘கலைமாமணி’ சரவணன் – ராஜா, கீதா கைலாசம் – கலா, ஹரிஷ் குமார் – சுகைல், நிகிலா சங்கர் – ரம்யா, ரிணி -ஐஸ{, அருணாச்சலேஸ்வரன் – விஸ்வா ஆகியோர்  குறிபிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசை – ஷான் ரோல்டன், படத்தொகுப்பு – பரத் விக்ரமன், மக்கள் தொடர்பு யுவராஜ்

கடலில் சர்பிங்க் செய்ய பயிற்சி செய்து கொண்டிருக்கும் ஐடி ஊழியரான திவ்யா (ஸ்ரீகௌரி ப்ரியா), தன்னுடன் படித்த கல்லூரி தோழன் அருண் (மணிகண்டன்) உடன் எப்படி காதலில் விழுந்தாள் என்பதை கடற்கரையில் தனது அலுவலக சகாக்களிடம் விவரிக்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. ஆறு வருட காதலை சொல்ல நினைக்கும் நேரத்தில்; வரும் காதலன் அருணின் தொலைபேசி அழைப்பு திவ்யாவின் காதல் கதையை உடைக்கிறது. ஒரு நொடியில் அவள் முகத்தில் இருக்கும் புன்னகை மறைந்து அவள் ஒரு விழாவில் இருப்பதாக பொய் சொல்கிறாள். ஆனால் தற்போது அவளது தோழி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள ஒரு படத்தை பார்த்து விட்டுத்தான் கோபமடைந்து அருண் அழைக்கிறான் என்பதையறிந்து கொள்ளும் திவ்யா சமாளிக்கிறாள். பின்னர் அவளது குடியிருப்பில் எதிர்கொண்டு அருண் சண்டை போடுகிறான், அதனால் கோபமடையும் திவ்யா காதலை முறித்துக்கொள்வதாக சொல்லி பிரிய, பின்னர் அருண் கெஞ்சி மன்னிப்பு கேட்டு மீண்டும் இணைகிறார்கள். சொந்தமாக காபி ஷாப் அமைக்க அருண் முயற்சி செய்வதும், அதற்காக நண்பர்களுடன் பழக்கம் குடிக்கு அடிமையாக்குகிறது. வீட்டில் தந்தை (சரவணனின்) நடவடிக்கை சரியில்லாததால் தாய் கலா (கீதா கைலாசம்) சம்பாத்தியத்தில் செலவு செய்கிற குற்ற உணர்ச்சியில் வாழ்கிறார் அருண். சரியான சம்பாத்தியம் இல்லாததால், வீட்டின் சூழல்  ஆகியவற்றால் தாழ்வு மனப்பான்மையால் அருண்  தினமும் குடித்து விட்டு காதலி திவ்யாவுடன் சந்தேகப்பட்டு சண்டையிடுவது, பின்னர் சமாதானமாவது என்பது வாடிக்கையாகிவிடுகிறது. அருணின் நடவடிக்கை மாறாததால் பொறுத்து பார்க்கும் திவ்யா கடைசியாக காதலை முறித்துக் கொண்டு சென்று விடுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் அருண் தன் தவறை உணர்ந்து திவ்யாவிடம் மன்னிப்பு கேட்டாரா? காதலர்கள் இணைந்தார்களா? என்பதைச் சொல்லிருக்கும் கதையின் முடிவு.

தமிழ் சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் ஹீரோக்களில் ஒருவராக மணிகண்டன் பெண்ணை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அவள் வாழ்க்கையை அவலமாக்கும் சுயநலவாதியான, ஆண் பேரினவாதி அருணாக அவர் கச்சிதமாக இருக்கிறார். காலேஜ் பையனாக நடிக்கும் போதும், நிதானமாக இருக்கும் போதும், காதல் சந்தேகம், குடிப்பது, புகைப்பது, கஞ்சா அடிப்பது, சண்டையிடுவது, பிரிவது , மன்னிப்பு, சேர்வது என்று தன் மனம் போகும் போக்கில் வாழும் மணிகண்டன் காதலி மட்டும் சுதந்திரமாக செல்லக்கூடாது என்று முட்டுக்கட்டை போடும் கதாபாத்திரத்தில் உடல் மொழியிலும், டயலாக் டெலிவரியிலும் மணிகண்டன் காட்டும் மாறுபாடுகள், ஒரு நடிகராக அவரது திறமைக்கு சான்றாக நிற்கிறது.

காதலி திவ்யாவாக ஸ்ரீ கௌரி ப்ரியா காதலனின் அதிகாரத்தை தாக்கு பிடிக்க முடியாமல் உடைந்து அழும் நேரத்திலும், விட்டு விலக முடியாமல் சூழ்நிலை கைதியாக தவிப்பதும், காதலனை மாற்ற நினைத்து ஏமாறுவதும், வேறு வழியில்லாமல் மனக்குமறுலுடன் விட்டு பிரியும் தருணங்களில் யதார்த்தமான அழுத்தமான உணர்ச்சிகளின் குவியலும் கலந்த அற்புதமான நடிப்பால் கவர்கிறார். துன்புறுத்தப்பட்ட காதலி திவ்யாவாக வலி மற்றும் உள்ளக் கொந்தளிப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் ஸ்ரீP கௌரி பிரியா ஆதிக்கம் செலுத்தியுள்ளார். கீதா கைலாசத்திடம் தொலைபேசியில் பேசுவதை நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது, அந்த வருடத்திற்கான விருது பட்டியலில் அவரது பெயரை கட்டாயப்படுத்தும். வெல்டன்.

கதாநாயகியின் சகாவாக கண்ணா ரவி தனது கதாப்பாத்திரத்த்pல் கதையின் போக்கு மாறுபடுவதற்கான சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர்களுடன் துணை கதாபாத்திரங்களாக வரும் சரவணன் – ராஜா, கீதா கைலாசம் – கலா, ஹரிஷ் குமார் – சுகைல், நிகிலா சங்கர் – ரம்யா, ரிணி -ஐஸ{, அருணாச்சலேஸ்வரன் – விஸ்வா உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அனைவரும் மிக இயல்பாக இருப்பதால் படத்தின் சலசலப்பு கடைசி வரை நீடிக்கிறது.

சீன் ரோல்டன், காதல் கதையின் உயர்ந்த மற்றும் தாழ்வான தருணங்களை நிலைநிறுத்தும் பின்னணி இசையை மீண்டும் வழங்கி அவரது ஆத்மார்த்தமான பாடல்களில் மெய்மறக்கச் செய்திருக்கிறார்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தை முடிந்தவரை யதார்த்தமாக படமாக்கியுள்ளார், காலேஜ் நாட்கள், காதலர்களின் வாழ்க்கை, இயற்கை எழில் கொஞ்சும் பயண அனுபவங்கள் என்பது மற்றொரு பெரிய பிளஸ் ஆகும், அதே நேரத்தில் பாரத் விக்ரமனின் மென்மையான எடிட்டிங் ஓட்டத்தை தடையின்றி வைத்திருக்கிறது. ரீபிட்டான காட்சிகள் அரைமணி நேரத்திற்கு கத்திரி போட்டிருக்கலாம்.

இளம் அறிமுக இயக்குனரான பிரபுராம் வியாஸ், ஒரு நச்சுக் காதலனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை உண்மையாகக் கொண்டு வருவதில் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். அவரது திடமான எழுத்து மற்றும் திறமையான படமாக்கல் அவரை எதிர்காலத்தில் கவனிக்க வேண்டிய ஒருவராக மாற்ற உள்ளது. படத்தில் சிறப்பாகச் செயல்படுவது தொடர்புடைய கதாபாத்திரங்கள் மற்றும் சுவாரஸ்யத்தை முழுவதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் கதைக்களம். திரையில் காட்டப்படுவதை விட மறைமுகமாக எழுதப்பட்டவை மிகவும் நன்றாக இருக்கிறது உதாரணமாக ஹீரோவின் பெற்றோரின் உறவு மற்றும் காதலர்கள் மீதான அதன் தாக்கம் மற்றும் ஹீரோ மனந்திருந்தும் விதம். சந்தர்ப்ப சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் பெண் இந்தப் படத்தில் பலிகாடாக்காமல், சுதந்திரமாக முடிவு எடுக்கும் திறனுடன் இறுதிக் காட்சியை அமைத்துள்ளது சிறப்பு. அதே சமயம் ஆரம்பத்தில் கடல் சர்ஃபிங்கில் தத்தளிக்கும் நாயகி, இறுதிக்காட்சியில் தெளிவான முடிவு எடுத்த பிறகு, பயிற்சியில் நிலையாக நின்று கடலில் செல்வதை காட்டும் இடத்தில் இயக்குனர் பிரபுராம் வியாஸ் டச் தெரிகிறது. சில இடங்களில் நகைச்சுவையுடன் மற்றும் சுற்றுலா செல்லும் இடத்தில் நாயகனின் இருப்பு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் காட்சிகள் எதிர்பாராத விதத்தில் நிகழும் மனமாற்றம் மிகவும் திருப்திகரமான க்ளைமாக்ஸை உருவாக்குகிறது.

மொத்தத்தில் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் சார்பில் நஸிரத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன், யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கும் லவ்வர் இன்றைய காதலர்களின் இளமை நிறைந்த அனுபவத்தையும், நிலையில்லா முடிவுகளையும் தடுமாற்றங்களையும் கோடிட்டு சுட்டிக்காட்டும் படம்.