கார்டியன் சினிமா விமர்சனம் : கார்டியன் அமானுஷ்ய திகிலை சரியாக பராமரிக்கவில்லை | ரேட்டிங்: 2.5/5

0
200

கார்டியன் சினிமா விமர்சனம் : கார்டியன் அமானுஷ்ய திகிலை சரியாக பராமரிக்கவில்லை | ரேட்டிங்: 2.5/5

ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில் விஜய் சந்தர் தயாரித்திருக்கும் கார்டியன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குரு சரவணன் மற்றும் சபரி.

இதில் ஹன்சிகா மோத்வானி, சுரேஷ் மேனன், ஸ்ரீPமன், அபிஷேக் வினோத், ஸ்ரீPராம் பார்த்தசாரதி, ‘மொட்டை ‘ராஜேந்திரன், பிரதீப் ராயன், தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா (அறிமுகம்), ‘பேபி’ க்ரிஷிதா (அறிமுகம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- கதை, திரைக்கதை, வசனம் – குரு சரவணன், இசை – சாம் சி.எஸ், படத்தொகுப்பு – எம்.தியாகராஜன், ஒளிப்பதிவு – கே.ஏ.சக்திவேல், கலை – ‘லால்குடி’ என்.இளையராஜா, சண்டைப் பயிற்சி – ‘டான்’ அசோக், பாடல்கள் – விவேகா, சாம் சி.எஸ், உமாதேவி, மக்கள் தொடர்பு – ரியாஸ்.

திறமையான இன்டீரியர் டிசைனர் அபர்ணா (ஹன்சிகா மோத்வானி). ஆனால் திறமைக்கு மதிப்பு இல்லாமல் பல முறை இன்டர்வியூவில் தோல்வியை சந்திக்கிறார். சிறுவயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவராக கருதப்பட்டாலும் தன் முயற்சியை கைவிடாமல் வேலை தேடுகிறார். இந்நிலையில் ஒரு இன்டர்வியூவில் சரியாக பதில் சொல்ல முடியாமல் திணறினாலும் அபர்ணாவுக்கு வேலை கிடைக்கிறது, அதன்பின் அவர் நினைப்பதெல்லாம் நடக்கிறது. அவருடைய வாழ்க்கையில் நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடந்தாலும்,கூடவே கெட்டதும் நடைபெற்று பல துரதிஷ்ட சம்பங்களும் நிகழ்கிறது. ஏன் இந்த திடீர் மாற்றம் எப்படி இதெல்லாம் நடக்கிறது என்பது அவருக்கு ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருந்து வரும் வேளையில் அபர்ணாவுக்கு ஒரு கட்டத்தில் ஒரு பெண்ணின் ஆவிதான் இதற்கு காரணம் என்பது அதிர்ச்சிகரமான விஷயம் தெரிய வருகிறது. மேலும் அந்த ஆவியின் உதவியிலிருந்து விடுபட முயற்சிக்கும் போது, அந்த ஆவி சிலரைப் பழி வாங்க வேண்டும் என்று கூறி தனக்கு நடந்த கொடுமையை விவரிக்கிறது. அதற்கு பிறகு அபர்ணா என்ன முடிவு செய்தார்? அந்த ஆவிக்கு உதவி செய்ய சம்மதிக்கிறாரா? அதன் பின் நடப்பது என்ன? என்பதே படத்தின் மீதிக் கதை.

அபர்ணா கதாபாத்திரத்தில் ஹன்சிகா மோத்வானி குறிப்பிடும்படியான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக செய்துள்ளார்.

நாயகன் பிரதீப் ராயன், புதுமுக நடிகை தியா  ஆடிட்டராக, குழந்தை நட்சத்திரம் ‘பேபி’ க்ரிஷிதாவாக (அறிமுகம்) முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில், சுரேஷ் மேனன், ஸ்ரீPமன், அபிஷேக் வினோத், ஸ்ரீPராம் பார்த்தசாரதி ஆகியோர் வில்லத்தனத்துடன் நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.

மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை இருவரின் காமெடி காட்சிகள் ரசிக்கும்படி இல்லை.

விவேகா, சாம் சி.எஸ், உமாதேவி ஆகியோரின் பாடல் வரிகளுக்கு  சாம் சி.எஸ் இசை மற்றும் பின்னணி இசை பரவாயில்லை.

எம்.தியாகராஜன் படத்தொகுப்பு, கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு ‘டான்’ அசோக் சண்டைப் பயிற்சி மற்றும் ‘லால்குடி’ என்.இளையராஜா கலை ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் அபரிதமான பங்களிப்பு படத்திற்கு பலம்.

பேய் இருக்கு ஆனால் இல்லை என்பது போல் முதல் பாதியில் சொல்லி அதிர்ஷ்டம், பழி வாங்குதல், விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் பயமுறுத்தி திகில் கலந்த பேய் கதையை எதிர்பார்த்த காட்சிகளுடன் புதுமையாக இல்லாமல் இயக்கியிருக்கிறார்கள் குரு சரவணன் மற்றும் சபரி.

மொத்தத்தில் பிலிம் ஒர்க்ஸ் சார்பில் விஜய் சந்தர் தயாரித்திருக்கும் கார்டியன் அமானுஷ்ய திகிலை சரியாக பராமரிக்கவில்லை.