லாந்தர் சினிமா விமர்சனம் : லாந்தர் பிரகாசமாக பயமுறுத்தும் முயற்சியில் வெளிச்சம் போதவில்லை | ரேட்டிங்: 2/5

0
293

லாந்தர் சினிமா விமர்சனம் : லாந்தர் பிரகாசமாக பயமுறுத்தும் முயற்சியில் வெளிச்சம் போதவில்லை | ரேட்டிங்: 2/5

எம் சினிமா புரொடக்ஷன் சார்பில் ஸ்ரீ விஷ்ணு தயாரித்திருக்கும் லாந்தர் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சஜிசலீம்

இதில் விதார்த் – ஏசிபி அரவிந்த், ஸ்வேதா டோரத்தி – ஜானு, விபின் – நகுல், சஹானா – மஞ்சு, பசுபதி ராஜ் – சிதம்பரம், கஜராஜ் – டாக்டர் மேத்யூஸ், மீனா புஷ்பராஜ் – நீலவேணி, மதன் அர்ஜுனன் – முத்து ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் : எடிட்டர் – பரத் விக்ரமன், ஒளிப்பதிவு – ஞான சௌமதர், இசை – எம்.எஸ். பிரவீன், ஸ்டண்ட் – விக்கி, கலை இயக்குனர் – கல்லை தேவா ஜி, ஆடைகள் – முத்துவேல், ஃபிலிம் மிக்ஸ் – உதய் குமார் (நாக் ஸ்டுடியோஸ்), ஒலி வடிவமைப்பு – ஏ. சதீஸ் குமார், நிர்வாகத் தயாரிப்பு – பாஸ்கர் ஜி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

ஒரே இரவில் நடக்கும் கதைக்களத்தில் காவல் அதிகாரி ஏசிபி அரவிந்த் (விதார்த்) கோவை மாநகரில் கள்ளச்சாராயம் தயாரிக்கும் கும்பலை துணிச்சலாக கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு வீட்டிற்கு செல்கிறார். இவருடைய மனைவி ஜானுவிற்கு (ஸ்வேதா டோரத்தி ) அதிர்ச்சியால் பயம் ஏற்பட்டால் உடனே மயங்கி விழும் அரிய நோய் பாதிப்பு இருப்பதால் கவனமாக பார்த்துக் கொள்கிறார் அரவிந்த். மற்றொருபுறம் நகுல் (விபின்) மற்றும் மஞ்சு (சஹானா)தம்பதியர் ஒரு வீட்டில் தனியாக வாழ்கின்றனர். அன்று இரவு ரோந்து போலீசார் கருப்பு கோட் அணிந்த ஒரு சைக்கோ மனிதன் கையில் இரும்பு தடியுடன் கண்ணில் பட்டவர்களை அடித்து கொலை செய்ய அதை நேரில் பார்க்கும் கான்ஸ்டபிள் தன் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க, அவர்களும் அவனை பிடிக்க சென்று அடிபட்டு கிடக்க, இந்த தகவல் ஏசிபி அரவிந்திற்கு தெரிய வர உடனே அந்த இடத்திற்கு வந்து சைக்கோ மனிதனை பிடிக்க ஒரு தனிப்படையை அனுப்பி விட்டு தானும் பல இடங்களில் தேட தொடங்குகிறார். பல கொலைகள் அடுத்தடுத்து நடக்க, அந்த சீரியல் சைக்கோ கில்லரை ஏசிபி அரவிந்த் பிடித்தாரா? யார் அந்த சைக்கோ? எதற்காக இத்தனை கொலைகளை செய்கிறான்? அரவிந்த் மனைவி ஜானுவையும் சைக்கோ மனிதன் விட்டு வைத்தானா? என்பதே படத்தின் மீதிக்கதை.

விதார்த் போலீஸ் உயர் அதிகாரியாக மிடுக்குடன் காணப்பட்டாலும் ஏதோ தடுமாற்றத்துடன், நிதானமாக நடிப்பது போல செயற்கைத்தனம் தோன்றுகிறது. நல்ல போலீஸ்அதிகாரியாகவும், நல்ல கணவனாகவும் சரிசமமாக தன் பங்களிப்பை கொடுக்க முயற்சிசெய்துள்ளார்.

மனைவி ஜானுவாக ஸ்வேதா டோரத்தி அழுத்தம் குறைவான கதாபாத்திரம், ஆனால் மஞ்சுவாக வரும் சஹானா முதலில் முக்கியத்துவம் இல்லாதவராக தோன்றினாலும் பின்னர் இவரின் பெரும்பங்கு படத்தின் போக்கை மாற்றி விட சிறப்பாகவும் செய்துள்ளார்.

விபின் – நகுல் , பசுபதி ராஜ் – சிதம்பரம், கஜராஜ் – டாக்டர் மேத்யூஸ், மீனா புஷ்பராஜ் – நீலவேணி, மதன் அர்ஜுனன் – முத்து ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

ஒரே இரவில் நடக்கும் கதைக்களம், ஃபிளாஷ்பேக் காட்சிகளில் லாங் ஷாட் காட்சிகளில்  ஞானசௌந்தரின் ஒளிப்பதிவும், பிரவீனின் இசையும் பளிச்சிடுகிறது.

எடிட்டர் பரத் விக்ரமன் காட்சிகளை இன்னும் சிறப்பாக தொகுத்திருக்கலாம்.

இரண்டு தம்பதிகளின் வாழ்க்கையை பிரதிபலித்து, அதில் இரு பெண்களுக்கும் இருக்கும் அரிய நோயை வித்தியாசத்துடன் கொடுத்து ஒரே இரவில் நடக்கும் கதைக்களத்தையும், சைக்கோ மனிதனின் நடமாட்டத்தை கண்டுபிடிக்கும் போலீஸ் உயர் அதிகாரியின் திண்டாட்டத்தையும் த்ரில்லராக கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர்; சஜிசலீம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் எம் சினிமா புரொடக்ஷன் சார்பில் ஸ்ரீ விஷ்ணு தயாரித்துள்ள லாந்தர் பிரகாசமாக பயமுறுத்தும் முயற்சியில் வெளிச்சம் போதவில்லை.