டிடி ரிடர்ன்ஸ் விமர்சனம் : படம் முழுவதும் காமெடி சூறாவளி சரவெடியில் திளைக்கலாம், கண்டு களித்து மகிழலாம் | ரேட்டிங்: 4/5

0
635

டிடி ரிடர்ன்ஸ் விமர்சனம் : படம் முழுவதும் காமெடி சூறாவளி சரவெடியில் திளைக்கலாம், கண்டு களித்து மகிழலாம் | ரேட்டிங்: 4/5

ஆர்கே எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.ரமேஷ்குமார் தயாரித்திருக்கும் டிடி ரிடர்ன்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சி.ரமேஷ் குமார்.

இதில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன், பிபின், தீனா, சேது,தங்கதுரை, ரீட்டா, மானஸி, தீபா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை –ஆப்ரோ , ஒளிப்பதிவு- தீபக் குமார், எடிட்டர்-என்.பி.ஸ்ரீகாந்த், கலை-ஏ.ஆர்.மோகன்,சண்டை-ஹரி தினேஷ்,நடனம்-சாண்டி, உடை- ஜாஸ்மின் ஜோசப், பிஆர்ஒ-நிகில்.

பாண்டிச்சேரியில் 1965 ஆம் ஆண்டு சூதாட்டத்தை தடை செய்த போது, சட்ட விரோதமாக ஒரு பிரன்ச் பங்களாவில் சூதாட்ட விளையாட்டு நடைபெறுகிறது. அதில் விளையாடும் 52 பேர் காணாமல் போகின்றனர். இதை கேள்விப்படும் ஊர் மக்கள் அந்த பிரன்ச் பங்களாவில் இருக்கும் குடும்பத்தை எரித்து கொன்று விடுகின்றனர். அதன் பின் கதைக்களம் நிகழ்காலத்தில் பயணிக்கிறது. பெரும் பணக்கார தொழிலதிபர் பெப்சிவிஜயன், தன் மகன் ரெடின் கிங்ஸ்லிக்கு கடன் கொடுத்து திருப்பி தராததால் சுரபியின் அக்காவை மணம் முடிக்க கட்டாயப்படுத்துகிறார்.  திருமணமும் நிச்சயப்பட்டு நடைபெறும் நாளில் பெப்சிவிஜயனின்; வீட்டில் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் போதை பொருள் விற்பனை செய்யும் பிபின் குழு. இவர்களின் பண நடமாட்டத்தை கண்டுபிடிக்கும் திருட்டு தொழில் செய்யும் மொட்டை ராஜேந்திரன் டீம் பிபினிடமிருந்து அந்த பணத்தை சமார்த்தியமாக களவாடுகிறது. இந்நிலையில் சுரபியின் அக்கா திருமண மண்டபத்திலிருந்து ஒடி விட திருமணம் தடை படுகிறது. அதனால் தங்கை சுரபியை தன் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் அல்லது 25 லட்சம் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கிடுக்குப்பிடி போடுகிறார் பெப்சிவிஜயன். சுரபியின் காதலன் சந்தானம் இதனை கேள்விப்பட்டு பணத்தை கொடுத்து மீட்க முயல்கிறார். கடன் கேட்டு கிடைக்காத நிலையில் சந்தானம் டீம்மிற்கு மொட்டை ராஜேந்தரன் கொள்ளையடித்த பணம் கிடைக்கிறது. அதனை வைத்து சுரபியை மீட்பதற்கு சந்தானம் டீம் அந்த பணத்தை ஆள் நடமாட்டமில்லாத பிரன்ச் பங்களாவில் ஒளித்து வைக்கின்றனர். அந்த பணத்தை எடுக்க முயலும் போது பிரன்ச் பங்களாவில் இருக்கும் பணத்தாசை பிடித்த பேய்கள் தாங்கள் நடத்தும் வின் ஆர் ரன் என்ற போட்டியில் ஜெயித்தால் தான் பணம் கிடைக்கும் என்று சொல்ல வேறு வழியின்றி சந்தானம் டீம் ;அவர்களுடன் விiளாடுகின்றனர். இதனிடையே பெப்சிவிஜயன் டீம், மொட்டை ராஜேந்தரன் டீம், பிபின் டீம் ஆகிய அனைவரும் அந்த பணத்திற்காக பங்களாவிற்கு வருகின்றனர். இதில் உள்ளே சென்ற அனைவரும் கேம்மில் விளையாடினார்களா? யாருக்கு பணம் கிடைத்தது? ஜெயிக்காதவர்கள் உயிரோடு திரும்பி வந்தார்களா? அவர்கள் நிலை என்ன? சந்தானம் சுரபியின் பணத்தை கொடுத்து திருமணம் செய்து கொண்டாரா? என்பதே படத்தின் கலகலக்கும் க்ளைமேக்ஸ்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு சிரிப்பு சரவெடியில் முழு சந்தானம் படம் பார்த்த திருப்தியை கொடுத்துள்ளார்.இந்தப் படத்தில் திருமண ஏற்பாடுகள் செய்து தரும் தொழில் செய்யும் சதீஷாக, காதலியை மீட்க பணத்திற்காக உயிரை பணயம் வைத்து பேய்களிடம் விளையாடும் இடத்தில் அமைதியுடன் புத்திசாலித்தனமாக யோசித்து செயல்பட்டு தன் டிரெட்மார்க் பன்ச் வசனத்துடன் சிறப்பாக நடித்து முத்திரை பதித்துள்ளார்.

இவருடன் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன், பிபின், தீனா, சேது,தங்கதுரை, தீபா என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் பேயுடன் சேர்ந்து அதகளம் செய்து படத்தின் விறுவிறுப்பை கூட்டி நகைச்சுவைக்கு கியரண்டியான உத்தரவாதம் கொடுத்துள்ளனர். பேய்களாக வந்து அமளி துமளி செய்யும் பிரதீப் ராவத், மசூம் சர்க்கார், ரீட்டா, மானஸி ஆகியோரின் பயமுறுத்தல் என்ற பெயரில் செய்யும் தாக்குதல்கள் அட்டகாசத்தின் வேற லெவல்.

இந்த படத்தில் இசை –ஆப்ரோ , ஒளிப்பதிவு- தீபக் குமார், எடிட்டர்-என்.பி.ஸ்ரீகாந்த், கலை-ஏ.ஆர்.மோகன்,சண்டை-ஹரி தினேஷ்,நடனம்-சாண்டி, உடை- ஜாஸ்மின் ஜோசப், ஆர்.ஹரிஹர சுதன் நம்பகத் தோற்றத்துடன் உருவாக்கிய வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் ஒரு பேய் படத்திற்கு உண்டான டெம்லெட்டை சிறப்பாக கொடுத்து சிரிப்பு சரவெடியில் நனைய வைத்துள்ளனர்.

சிறந்த நகைச்சுவை கதாபாத்திரங்களின் தேர்வு, தொடக்கம் முதல் இறுதி வரை பரபரவென நகரும் திரைக்கதை, விறுவிறுப்பான படத்தொகுப்பு ஆகிய அம்சங்கள், படத்தின் பொழுதுபோக்குச் சுவையை முழுமையாக பெற கைகொடுத்திருக்கின்றன. டிடி ரிட்டர்ன்ஸ் சந்தானத்தின் டிரெண்டிங் காமெடி, முடிவில்லாத பஞ்ச் லைன்கள், சில நகைச்சுவையான கேலிக்கூத்துகளின் புத்திசாலித்தனமான ஒன்-லைனர்கள், இத்துடன் சில படத்தின் பாடல்கள், விளம்பர பாட்டுக்கள், யு டியூப் மற்றும் சுகிட் கேம், வில்லனின் அடடடேய் கலாய்ப்பு போன்ற பலவகை நவரசங்களையும் கலந்து படத்தில் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யம் கலந்து பேய்களின் அட்டகாசத்துடன் மனிதர்கள் விளையாடும் விளையாட்டாக கலாட்டா காமெடியாக அதிர வைத்துள்ளார் இயக்குனர் ரமேஷ் குமார்.பேய் பட காமெடி வரிசையில் நின்று ஜெயித்திருக்கும் டிடி ரிடர்ன்ஸ் இவரின் அயராக முயற்சி,உழைப்பில் வெற்றி வாகை சூடி வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

மொத்தத்தில் ஆர்கே எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.ரமேஷ்குமார் தயாரித்திருக்கும் டிடி ரிடர்ன்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் முழுவதும் காமெடி சூறாவளி சரவெடியில் திளைக்கலாம், கண்டு களித்து மகிழலாம்.