சரக்கு சினிமா விமர்சனம் : சரக்கு அரசியல் கலந்த நகைச்சுவை நெடியுடன் ரசிகர்கள் பார்த்து ரசித்து மகிழலாம் | ரேட்டிங்: 3/5

0
205

சரக்கு சினிமா விமர்சனம் : சரக்கு அரசியல் கலந்த நகைச்சுவை நெடியுடன் ரசிகர்கள் பார்த்து ரசித்து மகிழலாம் | ரேட்டிங்: 3/5

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் சரக்கு படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக வலினா பிரின்ஸ், பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பழ கருப்பையா, பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, சரவண சுப்பையா, சேசு, அனுமோகன், பாரதி கண்ணன், ஆடுகளம் நரேன், தீனா, லொள்ளு சபா மனோகர், கோதண்டம், வினோதினி, சசி லயா, டி.எஸ்.ஆர், மதுமிதா, மோகன்ராம், மூசா, ரெனீஸ், நிகிதா, கூல் சுரேஷ், நீதியின் குரல் சி.ஆர்.பாஸ்கர், கோமாளி சரவணன், பபிதா என 40-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு -அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி , இசை -சித்தார்த் விபின்,  திரைக்கதை, வசனம் எழிச்சூர் அரவிந்தன், படத்தொகுப்பு- எஸ்.தேவராஜ், சண்டை – கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா, மக்கள் தொடர்பாளர்- கோவிந்தராஜ்.

வழக்கறிஞர் மன்சூர் அலிகான் போதிய வருமானம் இல்லாததால் கிடைக்கும் வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றி பணம் வாங்கி தினமும் நன்றாக குடித்து விட்டு வீட்டில் ரகளை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவரின் மனைவி வலினா பொறுமையாக அறிவுரை கூறினாலும் அதை பொருட்படுத்தாமல் இருக்கிறார். காலை போதை தெளிந்ததும் மனைவி மற்றும் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்வார். நிரந்தர வருமானத்திற்காக மது பிரியர்கள் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பிக்க நாளடைவில் ஒன்றரை கோடி குடிமகன்கள் உறுப்பினர்களாக சேருகிறார்கள். அவர்களுக்காக அரசிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஊடகங்கள் மூலம் தெரிவிக்கிறார். எந்த ஒரு முன்னேற்றம் ஏற்படாத நிலையில் மது விலக்கு இலாக்காத்துறை அமைச்சர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துகிறார். இதனால் கோபமடையும் அமைச்சர் மன்சூர் அலிகானை கைது செய்து என்கவுண்டர் செய்யச் சொல்ல அதிலிருந்து தப்பிக்கும் மன்சூர் அலிகானை கொலை வழக்கில் மாட்டி விட்டு கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். குடியால் தான் தன் கணவன் கொலை பழிக்கு ஆளாகி சிறை தண்டனை அனுபவிக்கிறார் என்று மன்சூர் அலிகான் மனைவி மதுவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று மனு கொடுத்து, போராட்டம் நடத்தி அமைச்சர் வீட்டின் முன்பு தர்ணா செய்ய அதற்காக அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். இந்நிலையில் மன்சூர் அலிகான் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்கிறது. வெளியில் வரும் மன்சூர் அலிகான் தன் மனைவி, குழந்தைகள் அனுபவித்த துன்பத்தை பார்த்து குடியால் தன் குடும்பம் பட்ட கஷ்டத்தை உணர்ந்து அவர் நல்ல மனிதனாக மாறுகிறார். இந்த மதுவால் சீரழிந்த குடும்பங்களுக்காக தன் மனைவி தொடங்கிய போராட்டத்தை வழி நடத்தி சிறையில் இருக்கும் தன் மனைவியை மீட்கவும் போராடுகிறார். கணவன் மனைவி இருவரும் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றதா? அரசாங்கம் இவர்களுக்கு செவி சாய்த்ததா? அதன் பின் நடக்கும் மாற்றம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

குடிகார வழக்கறிஞராக மன்சூர் அலிகான் செய்யும் அலப்பறைகள், வண்டியில் சென்று தெருத்தெருவாக வாடிக்கையாளர்களை வழக்குக்காக அழைப்பதும், கிடைக்கும் பணத்தை வைத்து குடித்து விட்டு கலாட்டா பண்ணுவதும், மனைவியிடம் முட்டையை கொடுத்து பண்ணும் காமெடியும் பின்னர் மனைவியிடம் அடி வாங்குதும், போலீசை குடிபோதையில் வெளுத்து வாங்குவதும், திருந்திய பின்னர் முற்றிலும் மாறுபட்டு தன் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருப்பதிலும் இயல்பான, அவருக்கே உரித்தான பாடி லேங்க்வேஜ்ஜில் அதகளம் பண்ணியிருக்கிறார்.

மனைவியாக வலினா பிரின்ஸ் படத்திற்கு முதுகெலும்பு. அவரின் அமைதியான ஆனால் ஆக்ரோஷமான நடிப்பும், அம்மன் பாட்டிலும், நடனத்திலும் சிறப்பாக செய்துள்ளார். கணவன் வெளியே அழைத்துச் சென்று  மறந்து விட்டு குடிக்க சென்றவுடன், வீட்டிற்கு நடந்தபடியே குழந்தைகளை அழைத்து வரும் போது பரிதாபத்தை அள்ளுகிறார். ஒவ்வொரு காட்சியிலும் வசனத்திலும் அழுத்தமான பதிவை கொடுத்துள்ளார்.

இவர்களுடன் பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பழ கருப்பையா, பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, சரவண சுப்பையா, சேசு, அனுமோகன், பாரதி கண்ணன், ஆடுகளம் நரேன், தீனா, லொள்ளு சபா மனோகர், கோதண்டம், வினோதினி, சசி லயா, டி.எஸ்.ஆர், மதுமிதா, மோகன்ராம், மூசா, ரெனீஸ், நிகிதா, கூல் சுரேஷ், நீதியின் குரல் சி.ஆர்.பாஸ்கர், கோமாளி சரவணன், பபிதா என எண்ணிடங்காத 40-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நகைச்சுவையிலும் சரி சமூக அக்கறையோடு ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் தனித்துவத்தை கதையில் கொண்டு வந்து, மறக்கமுடியாத அனுபவத்தை உருவாக்குகிறார்கள்.

அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிளுக்கும், அரசியல் பின்னணி கொண்ட கதைக்களத்திற்கும் காட்சிக்கோணங்களால் உறுதியான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் ரசிக்கும் ரகம், குறிப்பாக அம்மன் பாடல் பக்தி பரவசத்தில் பெண்களை எழுந்து ஆடச் செய்யும் அளவிற்கு அதிரடியாக கொடுத்துள்ளார்.

படத்தொகுப்பு- எஸ்.தேவராஜ், சண்டை – கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா இவர்களின் பங்களிப்பு படத்திற்கு கச்சிதம்.

எழிச்சூர் அரவிந்தனின் திரைக்கதை, வசனத்தில் அரசியல் சூழ்ச்சியின் சிக்கலான பரிமாணங்களை பெரும்பாலும் நகைச்சுவையான இயல்பைத் திறமையாக படம் பிடிக்கிறது. புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள், நகைச்சுவையான உரையாடல்கள்; மற்றும் சாதுர்யமான சதித் திருப்பங்கள் மூலம், திரைப்படம் அரசியல்வாதிகளின் தனித்துவத்தை அம்பலப்படுத்துகிறது, அவர்களின் மகத்தான வாக்குறுதிகள் மற்றும் அரசியல் துறையின் குணாதிசயங்களை எப்போதும் மாற்றும் கூட்டணிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கதையின் ஓட்டம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பைப் பிரித்தெடுக்கும் இயக்குனர் ஜெயக்குமாரின் திறன் ஆகியவை அதன் ஒட்டுமொத்த வெற்றிக்கு பங்களிக்கின்றன. திறமையான நடிகர்கள், திறமையான இயக்கம் மற்றும் பொருத்தமான செய்தியுடன், இந்தத் திரைப்படம் அரசியல் நிலப்பரப்பின் பொழுதுபோக்கு மற்றும் சிந்தனையைத் தூண்டும் பங்களிப்பை வழங்குகிறது.

மொத்தத்தில் ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் சரக்கு அரசியல் கலந்த நகைச்சுவை நெடியுடன் ரசிகர்கள் பார்த்து ரசித்து மகிழலாம்.