சபா நாயகன் சினிமா விமர்சனம் (SABA NAYAGAN MOVIE REVIEW) : சபா நாயகன் அனைவரையும் ஈர்க்கும் நகைச்சுவையில் நாயகன் | ரேட்டிங்: 2.5/5

0
234

சபா நாயகன் சினிமா விமர்சனம் (SABA NAYAGAN MOVIE REVIEW) : சபா நாயகன் அனைவரையும் ஈர்க்கும் நகைச்சுவையில் நாயகன் | ரேட்டிங்: 2.5/5

க்ளியர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா சார்பில் கேப்டன் மேகவாணன், இசைவாணன் தயாரிப்பில் சபா நாயகன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சி.எஸ்.கார்த்திகேயன்.

இதில் அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ், அருண், ஜெய்சீலன், ஸ்ரீPராம், விவ்யாசாந்த், ஷெர்லின்சேத், அனீஷ், மைக்கேல் தங்கதுரை, உடுமலைப்பேட்டை ரவி, அக்ஷயா ஹரிஹரன்,  பிக்பாஸ் பாலா,  ராஸ்,  மனோகர், துளசி,  பாலமுருகன், ஷ்ரவந்தி, ரேஷ்மி நம்பியார், பாஸ்கரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை – லியோன் ஜேம்ஸ் , டிஓபி – பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் , எடிட்டர் – கணேஷ் சிவா , ஒலி வடிவமைப்பு – உதய் குமார் கலரிஸ்ட்-சண்முக பாண்டியன், ஸ்டண்ட் – பில்லா ஜகன் ,ஆர்ட் – ஜி.சி.ஆனந்தன், உடை-செல்வம் , மேக் அப் – மாரியப்பன், தயாரிப்பு மேலாளர் – செல்லதுரை,சிவகுமார், ரமேஷ்குமார், தேவேந்திரன், தயாரிப்பு மேற்பார்வை – லோகநாதன். பிஆர்ஓ – சதீஷ்குமார்

நண்பர்களுடன் இரவில் போதையில் வரும் அரவிந்த் என்கிற சபாவை காவல்துறையினர் கைது செய்து, வ​ண்டியில் அழைத்துச் செல்கின்றனர்.அதே சமயத்தில் சரக்கு வாங்கி வரும் ஒரு இளைஞரை காதல் தோல்வி என்று சொல்லும் போது அவரை விட்டுவிட, அதனால் கடுப்பாகும் சபா தன் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் நடந்த காதல் தோல்விகளை போலீஸ்காரர்களுக்கு விவரிக்கிறார். பள்ளியில் படிக்கும் போது சபாவின் வாழ்க்கையில் காதல் முதலில் துளிர்க்கிறது. அவர் ஈஷா (கார்த்திகா முரளிதரன்) என்ற பெண்ணிடம் விழுகிறார், ஆனால் அவளிடம் சென்று தனது உணர்வுகளை சொல்ல மிகவும் பயப்படுகிறார். பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வர, காதலை சொல்ல முடியாமலேயே போகிறது. பின்னர் இன்ஜினியரிங் கல்லூரியில் சேரும் சபாவிற்கு  ஐடி துறையில் படிக்கும் ஸ்ரீரியாவுடன் (சாந்தினி சௌத்ரி) நட்பு கிடைக்க, காதல் தொடங்கும் முன்பே, நண்பனிடம் காதலியை பறி கொடுக்கிறார்.இதன் பின்னர்  நெருங்கிய உறவினரான அக்கா நடத்தும் நவநாகரீக உடைகள் விற்கும் கடையில் தன் பள்ளி தோழி ஈஷாவை பார்க்க, மீண்டும் பேசும் வாய்ப்பு கிடைத்து, காதலை சொல்லும் போது, ஈஷா தனக்கு ஏற்கனவே காதலன் இருப்பதாக கூறிவிட்டு பிரிந்து செல்கிறார். அதன் பின் உயர் கல்வி கற்க சேரும் போது மேகா ஆகாஷ் (மெகா)நட்பு மலர்கிறது. இந்த நட்பு பின் காதலாக கை கூடியதா? இல்லையா? ஈஷா மீண்டும் சபாவின் வாழ்க்கையில் வந்தாரா? அதற்கு சபா என்ன செய்தார்? என்பதே படத்தின் திருப்பம் நிறைந்த க்ளைமேக்ஸ்.

அசோக் செல்வன் அர்விந்த் என்கிற சபாவாக கதையின் நாயகனாக தன் பள்ளி, கல்லூரி நாட்களில் நடந்த காதல் தோல்விகளை விவரிப்பதில் படம் முழுவதும் நகைச்சுவை கலந்து, நட்பு, நண்பனின் காதல், பிரிவு, சோகம் என்று ஜாலியான இளைஞனாகவும், பள்ளி மாணவனாகவும் இருவேறு கெட்டப்களில் அசத்தலுடன் செய்து இருக்கிறார். படம் முழுவதும்  பேசிக் கொண்டே இருந்தாலும் அலுப்பு ஏற்படாதவாறு திறம்பட செய்துள்ளார். அசோக் செல்வன் நகைச்சுவையைக் கையாள்வதில் இயல்பானவர் என்தால்; சபாவின் கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்துள்ளார்.

கார்த்திகா முரளிதரன் (ஈஷா), சாந்தினி (ரியா), மேகா ஆகாஷ் (மெகா),அருண் (எஸ்எஸ் கார்த்திக்), ஜெய்சீலன் (தினேஷ்), ஸ்ரீPராம் (சிவ பிரகாஷ்), விவ்யாசாந்த் (திவ்யா), ஷெர்லின்சேத் (காயத்ரி), அனீஷ் (நவீன்), மைக்கேல் தங்கதுரை (விஷ்ணு), உடுமலைப்பேட்டை ரவி, அக்ஷயா ஹரிஹரன் (ப்ரீத்தி), பிக்பாஸ் பாலா (அஷ்வின்), ராஸ்(ரீது), மனோகர், துளசி (சபா அம்மா), பாலமுருகன் (சபா அப்பா), ஷ்ரவந்தி, ரேஷ்மி நம்பியார், பாஸ்கரன் என்று நண்பர்களாக, காதலிகளாக நடித்தவர்களும் மற்றும் பலர் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நகைச்சுவையை கலந்து நேர்த்தியாக அழகாக செய்துள்ளனர்.

சபா நாயகனுக்கு பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் என்று மூன்று ஒளிப்பதிவாளர்கள் உள்ளனர். மேலும் மூவரும் படத்தின் தன்மையையும், கதையையும் புரிந்து கொண்டு பல்வேறு பகுதிகளை படமாக்கியுள்ளனர் அனைத்து காட்சிகளும் நன்றாக உள்ளன. இதை ஒரு ஒளிப்பதிவாளர் கையாண்டது போல் இருப்பதில் அவர்களின் உழைப்பு பளிச்சிடுகிறது.

லியோன் ஜேம்ஸ் இந்த படத்தின் மூலம் தான் எவ்வளவு திறமையான இசையமைப்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஈரோடு,கோயம்பத்தூர் சுற்றி நடக்கும் கதைக்களத்தில் ஒரு இளைஞனின் பள்ளி, கல்லூரி காலத்து நட்பு, காதல் தோல்விகளை சுவாரஸ்யத்துடன் விவரிக்கும் இடங்களிலும், படம் முழுவதும் ஆங்காங்கே ஒன் லைன் காமெடி பஞ்ச்கள் எட்டிப் பார்க்கும் வண்ணம் திறம்பட திரைக்கதையமைத்துள்ளார் இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன். இதையெல்லாம் எதற்காக காவல்துறையினரிடம் விவரிக்கிறார் என்பதுதான் படத்தின் திருப்பமான முடிவால் க்ளைமேக்சில் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன்.

மொத்தத்தில் க்ளியர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா சார்பில் கேப்டன் மேகவாணன், இசைவாணன் தயாரிப்பில் சபா நாயகன் அனைவரையும் ஈர்க்கும் நகைச்சுவையில் நாயகன்.