சபரி சினிமா விமர்சனம் : சபரி தாய் மகள் பாசத்தை பிரிக்க முடியாத உளவியல் சார்ந்த சுவாரஸ்ய அனுபவம் குறைவு | ரேட்டிங்: 2.5/5

0
252

சபரி சினிமா விமர்சனம் : சபரி தாய் மகள் பாசத்தை பிரிக்க முடியாத உளவியல் சார்ந்த சுவாரஸ்ய அனுபவம் குறைவு | ரேட்டிங்: 2.5/5

மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்திருக்கும் சபரி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அனில் காட்ஸ்

இதில் சஞ்சனாவாக வரலட்சுமி சரத்குமார், சூர்யாவாக மைம் கோபி,அரவிந்தாக கணேஷ் வெங்கட்ராமன், ராகுலாக ஷஷாங்க்,ரியாவாக பேபி நிவேக்ஷா,ஏசிபி ரமேஷ் – மதுநந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட்டர் – தர்மேந்திர ககரலா, இசை – கோபி சுந்தர் ,ஒளிப்பதிவு – ராகுல் ஸ்ரீPவத்சவ்,மக்கள் தொடர்பு – டிஒன்

சிறு வயதில் தன் தாயை இழந்த சஞ்சனா (வரலக்ஷ்மி சரத்குமார்) மனஉளைச்சலில் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அரவிந்த் (கணேஷ் வெங்கட்ராமன்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதில் விருப்பம் இல்லாத தந்தை மற்றும் சித்தியை விட்டு பிரிந்து செல்கிறார். இவர்களுக்கு பெண் குழந்தை ரியா (பேபி நிவேக்ஷா) பிறக்கிறது. வருடங்கள் செல்ல, கணேஷ் வெங்கட்ராமன் வேலை செய்யும் இடத்திpல் நெருங்கி பழகும் பெண் நட்பால்  சஞ்சனா தன் மகள் ரியாவை அழைத்துக் கொண்டு விசாகப்பட்டினம் சென்று வேலை தேடுகிறார்.சஞ்சனா தனது வழக்கறிஞர் நண்பர் ராகுல் (சஷாங்க்) உதவியுடன் ஒரு வேலையைப் பெறுகிறார். அதே சமயத்தில் மனநல காப்பகத்தில் இருந்து தப்பிக்கும் சூர்யா குழந்தை  ரியாவை தேடி வந்து கடத்த முற்படுகிறார். சஞ்சனா தன் குழந்தை ரியாவை காப்பாற்ற போராடுகிறார். அதன் பின் தன் குழந்தை பற்றி திடுக்கிடும் உண்மையை கண்டுபிடிக்கிறார் சஞ்சனா. இறுதியில் சூர்யா ஏன் குழந்தை ரியாவை கடத்த நினைக்கிறார்? சூர்யாவின் நோக்கம் என்ன? சஞ்சனா குழந்தை ரியாவை பத்திரமாக மீட்டாரா? குழந்தை ரியா மறைக்கப்பட்ட உண்மையான காரணம் என்ன? சஞ்சனா ரியா வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

வரலட்சுமி சரத்குமார் தாய் சஞ்சனாவாக தனக்கு கிடைக்காத தாய் பாசத்தை தன் மகள் மீது பாசம் செலுத்துவதும், கணவனின் துரோகத்தை எதிர்த்து துணித்து வெளியே வருவதும், அதன் பின் ஒற்றைத் தாயாக மகளை காப்பாற்றப் போராடும் தருணத்திலும், உயிரை பணயம் வைத்து மைம் கோபியிடமிருந்து தப்பிப்பதும், மகளின் உண்மை  நிலையை தெரிந்தும் இணை பிரியாமல் வாழும் மனநிலையுடன் சிறப்பாக செய்துள்ளார்.

சூர்யாவாக மைம் கோபி, அரவிந்தாக கணேஷ் வெங்கட்ராமன், ராகுலாக சஷாங்க், ரியாவாக பேபி நிவேக்ஷா, ஏசிபி ரமேஷாக  மதுநந்தன் ஆகிய சில கதாபாத்திரங்கள் தான் என்றாலும் மனதில் நிற்கிறார்கள்.

கோபி சுந்தர் இசை மற்றும் பின்னணி இசையும், ராகுல் ஸ்ரீவஸ்தவ் ஒளிப்பதிவும் கவனிக்க வைத்துள்ளது. எடிட்டர்  தர்மேந்திர ககரலா சில காட்சிகளை எடிட் செய்து இருக்கலாம்.

தாயின் தூய அன்பு எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் சமாளித்து காப்பாற்றும் வல்லமை பெற்றது என்பதை உளவியல் சம்பந்தப்பட்ட கதைக்களனுடன் இணைத்து திருப்திகரமாக அனுபவத்தை வழங்க  முயற்சித்திருப்பதில் தடுமாறி இயக்கியிருக்கிறார் அனில் காட்ஸ். சுpல காட்சிகளில் தோய்வு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில், மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்திருக்கும் சபரி தாய் மகள் பாசத்தை பிரிக்க முடியாத உளவியல் சார்ந்த சுவாரஸ்ய அனுபவம் குறைவு.