காடுவெட்டி விமர்சனம் : ‘காடுவெட்டி’ சமகால அரசியல் நெடி கலந்த கலப்பு நாடக காதல் | ரேட்டிங்: 2.5/5
மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என். மகேந்திரன், சி. பரமசிவம், ஜி. ராமு மற்றும் படத்தின் இயக்குனர் சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காடுவெட்டி’
இதில் ஆர். கே. சுரேஷ் – குரு, சங்கீர்த்தனா – தாட்சாயினி, விஷ்மியா – ஆர். கே. சுரேஷ் மனைவி, சுப்ரமணியசிவா - ராஜமாணிக்கம், அகிலன், ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – சோலை ஆறுமுகம், இசை – ஸ்ரீPகாந்த் தேவா, பாடல்கள் இசை – வணக்கம் தமிழா சாதிக் , ஒளிப்பதிவு – ஆ. புகழேந்தி, பாடல்கள் – மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல், கலை இயக்கம் – வீரசமர் , எடிட்டிங் – ஜான் ஆப்ரகாம், ஸ்டண்ட் – கனல் கண்ணன், நடனம் – தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன் கணபதி, மக்கள் தொடர்பு – மணவை புவன்
குருவாக ஆர்.கே.சுரேஷ் அரசியல் தலைவர்களுடன் கலந்து கொண்டு போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர் மக்களுக்கு உதவிகள், பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும், பெண்களிடம் காதலிக்க வற்புறுத்தும் ஆண்களை வெட்டச் சொல்லி தைரியம் கொடுப்பதும், அவ்வவ்போது கொலைகள் செய்து விட்டு சிறைக்கு சென்று வருவதுமாக தன் வாழ்க்கையை வாழ்கிறார். இதனிடையே தெருக்கூத்து கலைஞர்; சுப்பிரமணியம் சிவாவின் மகள் வேறு ஒரு சாதி இளைஞரை காதலிக்க பெற்றோர்கள், ஊர்மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகிறார்கள். ஊர் பஞ்சாயத்தில் சுப்பிரமணிய சிவா தன் மகளை ஒதுக்கி வைக்கவோ அல்லது கொலை செய்யவோ வேண்டும் என்று கட்டாய நிபந்தனை விதித்து வற்புறுத்துகிறார்கள். இதற்கு ஆர்.கே.சுரேஷ் அந்தப் பெண்ணுக்கு ஆதரவு தந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
ஆர்.கே.சுரேஷ் தன் முரட்டு தோற்றம், நடை, உடை, பாவனை என்று அனைத்திலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி பொங்கி எழும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.
மற்றும் ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா பாண்டிலட்சுமி, விஷ்மயா விஷ்வாந்த், சாந்தி மாறன், சுப்பிரமணியம், அகிலன், சுபாஷ் சந்திரபோஸ், ஜெயம் எஸ்.கே,கோபி, சங்கீர்த்தனா விபின் என மீதமுள்ள அனைவரும் எதிர்பார்த்தபடி தங்கள் வேலையைச் செய்கிறார்கள்.
மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல் ஆகியோரின் பாடல் வரிகளில் சாதிக்கின் இசை மற்றும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் கலந்து நன்றாக வந்துள்ளது.
புகழேந்தியின் ஒளிப்பதிவு ஓகே ரகத்துடன் அனைத்து காட்சிகளையும் குறிப்பிடும்படி நேர்த்தியாக கொடுத்துள்ளார். அதே சமயம் எடிட்டர் ஜான் ஆப்ரகாம் கடினமாக உழைத்திருக்கலாம்.
கலை இயக்கம் – வீரசமர், ஸ்டண்ட் – கனல் கண்ணன் படத்திற்கு சிறப்பு.
தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சியின் மறைந்த சக்திவாய்ந்த அரசியல்வாதியை மையமாக வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சோலை ஆறுமுகம். நாடகக் காதலை நகரத்து பெற்றோரின் அணுகுமுறையை விட கிராமத்து பெற்றோரின் அணுகுமுறையையும் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், விளைவுகள், சிரமங்களை சந்திக்கின்றனர், நெருக்கடி கொடுக்கப்படுகின்றனர் என்பதை சொல்ல முயன்று சமகால அரசியல் பின்னணியுடன் படத்தை முடித்துள்ளார் இயக்குனர் சோலை ஆறுமுகம்.
மொத்தத்தில் மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என். மகேந்திரன், சி. பரமசிவம், ஜி. ராமு மற்றும் படத்தின் இயக்குனர் சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காடுவெட்டி’ சமகால அரசியல் நெடி கலந்த கலப்பு நாடக காதல்.