கட்டில் சினிமா விமர்சனம் : கட்டில் என்றும் நினைவில் நீங்காமல் இடம் பிடிக்கும் பாதுகாக்கும் பாரம்பர்யத்தின் அடையாளம்  | ரேட்டிங்: 3/5

0
338

கட்டில் சினிமா விமர்சனம் : கட்டில் என்றும் நினைவில் நீங்காமல் இடம் பிடிக்கும் பாதுகாக்கும் பாரம்பர்யத்தின் அடையாளம்  | ரேட்டிங்: 3/5

மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஈ.வி.கணேஷ் பாபு எழுதி இயக்கி தயாரித்து மூன்று தலைமுறை ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கட்டில்’.

இதில் சிருஷ்டி டாங்கே, சிறப்பு தோற்றத்தில் விதார்த், கன்னிகா சினேகன், கீதா கைலாசம், அன்னம் அரசு, இந்திரா சௌந்தர்ராஜன், மாஸ்டர் நிதிஷ், சம்பத்ராம், செம்மலர் அன்னம், கலைஞர் ஷ்யாம், மெட்டி ஒளி சாந்தி, காதல் கந்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்:- ஒளிப்பதிவு : வைட் ஆங்கிள் ரவிசங்கர், இசை : ஸ்ரீPகாந்த் தேவா, பாடியவர் : சித் ஸ்ரீPராம், ஸ்கிரிப்ட் மற்றும் எடிட்டிங் : பி.லெனின், பாடல் வரிகள் : கவிப்பேரரசு வைரமுத்து, கலை : பி.கிருஷ்ணமூர்த்தி, மனோ, நடன இயக்குனர் : மெட்டி ஒலி சாந்தி, தயாரிப்பு நிர்வாகி : ராஜன், இல.வாசுதேவன், மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)

கணேஷ்பாபு தனது மனைவி ஸ்ருஷ்டி டாங்கே, தாய் கீதா கைலாசம் மற்றும் மகன் நிதீஷ{டன் மூன்று தலைமுறை பழமையான பெரிய வீட்டில் வசித்து வருகிறார்.வீட்டில் 250 ஆண்டுகள் பழமையான காலங்காலமாக இருக்கும் கட்டில் தன் தந்தையின் நினைவாக கணேஷ்பாபு பாதுகாத்து வருகிறார். கணேஷின் சகோதரனும் சகோதரியும் வீட்டை விற்க விரும்புகிறார்கள். முதலில் மறுப்பு தெரிவிக்கும் கணேஷ்பாபு பிறகு சம்மதிக்கிறார். உடன் பிறந்தவர்கள் அந்த கட்டிலையும் சேர்த்து விற்க ஆசைப்பட கணேஷ் அந்த கட்டிலை விலை கொடுத்து அவர்களிடமிருந்து வாங்குகிறார். வீட்டை விற்ற பின் வேறு வீட்டிற்கு செல்வதற்கு கட்டிலுக்கேற்ற வீட்டை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் மில் ஊழியராக வேலை செய்யும் கணேஷ் பாபுவிற்கு பெரிய வீட்டை வாங்கும் அளவிற்கு வசதி இல்லை என்றாலும் கிடைக்கும் 75 லட்சத்திற்குகேற்ற வீட்டை பார்க்க முயல்கிறார். அதற்குள் வீட்டை காலி செய்ய வேண்டியிருக்க, வேறு வழியின்றி பாரம்பரிய பொருள் பாதுகாத்து வைத்திருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் இடத்தில் கட்டிலை வைத்து விட்டு ஒரு சிறிய வீட்டில் குடிபோகிறார் கணேஷ்பாபு. அதன் பின் கணேஷ்பாபுவால் கட்டிலுக்கேற்ற புதிய வீட்டை வாங்க முடிந்ததா? அதற்குள் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? கட்டில் யாரிடம் கைமாறியது? இறுதியில் கட்டில் கணேஷிற்கு எட்டாத கனவானதா? என்பது மீதிக்கதை.

தாத்தா அய்யாறு, தந்தை இளங்கோவன், மகன் கணேசன் என மூன்று தோற்றங்களில் தோன்;றினாலும் தாத்தா, தந்தை இரு கெட்டப்கள் ஃபிளாஷ்பேக்கிலும், பாடல்களிலும் பங்களிப்பை கொடுத்து சென்று விட, கணேசன் கதாபாத்திரம் படம் முழுவதும் கட்டிலை பாதுகாப்பதிலும், அதற்காக சந்திக்கும் இடர்பாடுகளையும் அழகாக சமாளித்து படம் முழுவதும் உணர்ச்சிகரமான பங்களிப்பை கொடுத்து சிறப்பாக செய்துள்ளார்.

சிருஷ்டி டாங்கே கர்ப்பிணி மனைவி தனலட்சுமியாக கணவனின் இன்ப துன்பங்களில் பங்கேற்று, மாமியாருடன் ஒற்றுமையாக அன்பாக பழகும் குணமுடைய பெண்ணாக இறுதிக் காட்சியில் மனதை நெகிழ செய்து விடுகிறார்.

தன் பராம்பர்ய குடும்பத்தைப்பற்றி விவரிக்கும் பேரன் சுரேஷாக விதார்த் சிறப்பு N;தாற்றத்தில் வந்து முதல் காட்சியிலும், இறுதிக் காட்சியிலும் படத்தை விவரிக்கும் கதாபாத்திரம்.

கீதா கைலாசம் மற்றும் இந்திரா சௌந்தர்ராஜன், கன்னிகா சினேகன், அன்னம் அரசு, மாஸ்டர் நிதிஷ், சம்பத்ராம், செம்மலர் அன்னம், கலைஞர் ஷ்யாம், மெட்டி ஒளி சாந்தி, காதல் கந்தாஸ்; யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளில் சித் ஸ்ரீராமின் காந்த குரலில் ஸ்ரீPகாந்த் தேவாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய இன்னிசைiயும் பலத்தையும் கொடுத்து படத்திற்கு மெருகேற்றியுள்ளது.

வைட் ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. மீதமுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன.

இந்த கதையினை எடிட்டர் லெனின் எழுத ஈ.வி.கணேஷ் பாபு இயக்கியுள்ளார்.கட்டிலைச் சுற்றியே கதைக்களம் முழுவதையும் உருவாக்கி உயிரற்ற பொருளை மையமாக வைத்து உயிருள்ள உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகளை நிறைத்து மூன்று தலைமுறைகளை இணைத்து அதில் காதல், சோகம், பாசம், ஆசை, சென்டிமெண்ட் கலந்து மெதுவாக செல்லும் கதைக்களத்தில் நிறைவாக குடும்பங்கள் கொண்டாடும் படத்தை கொடுத்து பாரம்பர்யத்தை மறக்காதீர்கள் என்று சொல்லி இயக்கியுள்ளார் ஈ.வி.கணேஷ்பாபு. இறுதியில் கட்டிலை சிறு வயதில் விரும்பும் பேரனுக்கு கொடுக்காமல் மாற்றி முடித்திருப்பது தான் சோகம்.

மொத்தத்தில் மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஈ.வி.கணேஷ் பாபு எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கட்டில் என்றும் நினைவில் நீங்காமல் இடம் பிடிக்கும் பாதுகாக்கும் பாரம்பர்யத்தின் அடையாளம்.