அயலான் சினிமா விமர்சனம் : அயலான் குடும்பங்கள் கொண்டாடும் படமாக குறிப்பாக குழந்தைகள் குதூகலத்துடன் கொண்டாடும் படம் | ரேட்டிங்: 4/5

0
469

அயலான் சினிமா விமர்சனம் : அயலான் குடும்பங்கள் கொண்டாடும் படமாக குறிப்பாக குழந்தைகள் குதூகலத்துடன் கொண்டாடும் படம் | ரேட்டிங்: 4/5

கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

இதில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன், கோதண்டம், வெங்கட் செங்குட்டுவன், இஷா கோபிகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – நீரவ் ஷா, எடிட்டர் ரூபன், சண்டை- அன்பறிவு, மக்கள் தொடர்பு டிஒன் சுரேஷ் சந்திரா, ரேகா, நாசர்.

வேற்று கிரகத்திலிருந்து பூமியை வந்து தாக்கும் ஒரு விண்கல்லில் இருந்து சிதறிய ‘ஸ்பார்க்’ என்ற ஒரு சிறிய விண் கல் வில்லனின் கையில் கிடைக்கிறது. அதைக் கொண்டு வில்லன் உலகத்தை தன் வசப்படுத்தும் விதமாக சதி வேலைகள் செய்ய திட்;;டமிடுகிறார். பூமியின் மையப்பகுதி வரை தோண்டி, அதில் கிடைக்கும் நோவா வாயுவை உபயோகித்து வளங்களை அபகரிப்பதே வில்லனின் நோக்கம். இதனிடையே கிராமத்தில் தாயுடன் (பானுப்பிரியா) இயற்கை விவசாயம் செய்து வரும் நாயகன் தமிழ் (சிவகார்த்திகேயன்) இயற்கை உரங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தீவிர அக்கறை கொண்டவர் என்றாலும் கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் தாய்க்கு உதவ பிழைப்பு தேடி சென்னை வருகிறார். எதிர்பாராத விதமாக  பிறந்தநாள் சர்ப்ரைஸ் பார்ட்டிகள் ஏற்பாடு செய்யும் கருணாகரன், யோகிபாபு, கோதண்டம் டீமுடன் மோதல் ஏற்பட்டு பின்னர் சமாதானமடைந்து அவர்களுடன் செல்ல நேரிடுகிறது. இந்நிலையில் வேற்று கிரகத்தில் உள்ள வேற்று கிரகவாசிகள் பூமியில் ஸ்பார்க் கல்லால் உயிரினங்களுக்கு ஏற்படப்போகும் அழிவை தடுப்பதற்கும் பூமியைக் காப்பாற்றவும் அவர்கள் தங்களுடைய கிரகத்தில் இருந்து ஒரு கிரகவாசி ஏலியன் டாட்டூவை (வெங்கட் செங்குட்டுவன்) பூமிக்கு அனுப்புகிறார்கள். வில்லனிடம் இருக்கும் ஸ்பார்க்கை எடுக்க வில்லனின் இடத்துக்கு ஏலியன் செல்லும்போது, தாக்கப்பட்டு அவர்களிடம் தனது விண்கலத்தையும் இழக்கிறது. அங்கிருந்து தப்பித்து செல்லும் போது எதிர்பாராமல் ஏற்படும் தீ விபத்தில் மயங்கிய நிலையில் தமிழிடம் மாட்டிக் கொள்கிறது. ஒரு கட்டத்தில் ஏலியன் டாட்டூவின் பிரச்சனையை தெரிந்து கொண்ட தமிழ் அதற்கு உதவி செய்ய நினைக்க அவருடன் சேர்ந்து வில்லனின் நோக்கத்தை முறியடிக்க முடிந்ததா? ஏலியனின் விண்கலத்தை இருவரும் சேர்ந்து மீட்டனரா? ஸ்பார்க் கல் ஏலியனின் கையில் கிடைத்ததா? அதற்குள் அவர்களுக்கு நடக்கும் ஆபத்துக்களை முறியடித்து வெற்றிகரமாக மீண்டார்களா? என்பதே ‘அயலான்’ க்ளைமேக்ஸ்.

சிவகார்த்திகேயன் இயற்கை ஆர்வலராக முதல் காட்சியில் தொடங்கி ஏலியனை பார்ப்பது வரை கருணாகரன் டீமுடன் சேர்ந்து அடிக்கும் காமெடி கலாட்டாக்கள், அன்பு காட்டுகிற ஏலியனை அரவணைத்து வழி நடத்தும் இ;டத்திலும், ஏலியனுக்காக தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுகிற நேரத்திலும், ஏலியன்- சிவகார்த்தியேன் பாசக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. சிவகார்த்திகேயன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் படத்தையும், உயிரனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தையும் விதைத்துள்ளார்.

நாயகனுக்கு துணையாக வந்து உதவி செய்யும் காதலியாக ரகுல் ப்ரீத் சிங், முதல் காட்சியில் மட்டுமே வரும் தாயாக பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், கோதண்டம் இவர்கள் மூவரும் சேர்ந்து செய்யும் கலாட்டக்கள், ஏலியனாக வெங்கட் செங்குட்டுவன் இவரின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் படத்திற்கு பலம், வில்லியாக இஷா கோபிகர்; என்று படம் முழுவதும் அனைவரின் பங்களிப்பு கவனிக்க வைக்கிறது.

ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

செர்பியா, மடகாஸ்கர், சென்னை, ஏலியன் உலகம், விண்கலம், விண்கல், வில்லனின் சோதனைக்கூடம் என்று காட்சிக் கோணங்களால் தரமாக செதுக்கி கொடுத்துள்ளார் நீரவ்ஷா.

தமிழ் படத்தில் உலக தரத்தில் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் சிறப்பாக கையாண்டுள்ளது இந்தப் படத்தில் தான். இவர்களின் பங்களிப்பால் அனைவரும் கொண்டாடும் விதமாக படத்தை வேறு லேவலுக்கு எடுத்துச் சென்றுயிருக்கிறார்கள்.

எடிட்டர் ரூபன் இன்னும் சில காட்சிகளை கிரிஸ்பாக கொடுத்திருக்கலாம்.

இந்த பிரபஞ்சத்திலேயே மோசமான உயிரனம் மனித குலம் தான், இந்த பூமியில் புழு புச்சிக்கும் சேர்த்து தான், இன்னொரு வாட்டி என்னை ஏலியன் சொன்னா மனிஷனா மாறிடுவேன், இந்த உலகத்திலே நீயும் ஒரு உயிரனம் தான் என்று ஏலியன் பேசற வசனம் சூப்பர் அது மட்டுமில்லாமல் வேற எந்த உயிரனத்துக்கும் இல்லாத குணம் மனிஷன் கிட்ட இருக்கு என்று ஏலியன் மனிதனை புகழும் வசனமும் இடம் பெற்றிருப்பது வசனகர்த்தாவின் டச் பளிச்சிடுகிறது.

ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்த சித்தார்த்தை பாராட்ட வேண்டும், வேற எவருடைய வாய்ஸ{ம் இதற்கு பொருத்தமாக இருக்கும் என்பது சந்தேகம் தான். அந்தளவு ஏலியனின் குரலாக ஒலிக்கிறார்.

அன்பறிவு சண்டைக்காட்சிகள் அதிரடியாக உள்ளது.

ஏலியன் பூமியை அழிக்க வருவது போல் தான் படத்தை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த ஏலியன் உயிரனங்களை காக்க வருவது போல் இன்று நேற்று நாளை  என்ற வெற்றி படத்தை இயக்கிய ரவிக்குமார் அறிவியல் புனைக்கதையை வித்தியாசமாக யோசித்து திரைக்கதையை அமைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.அன்பும் பண்பும் நிறைந்த ஏலியன், இயற்கையை அரவணைக்கும் நாயகன், இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் கலாட்டா, வில்லன் செய்யும் சதித்திட்டம் என்று முதல் பாதி கலகலப்பாக இருக்க, நாயகனும் ஏலியனும் சேர்ந்து எப்படி வில்லனை முறியடிக்கிறார்கள் என்பதை ஆக்ஷன், சென்டிமெண்ட், பாசம் கலந்து சிறந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அசத்தலாக இயக்கியுள்ளார் ரவிக்குமார். சில படங்களில் ஹீரோவிற்கு மட்டும் தான் சூப்பர் பவர் கிடைக்கும், இதில் வில்லனுக்கும் சூப்பர் பவர் ஏலியன் மூலம் கிடைப்பதும், புற்றுநோய் பாதித்த சிறுமிக்கும் அந்த சூப்பர் பவர் கிடைக்க க்ளைமேக்ஸில் அதை பயன்படுத்தியிருக்கிற விதம் என்று விறுவிறுப்பாகவும் நம்பகத்தன்மையுடன் இயக்கியிருக்கிறார் ரவிக்குமார். கடின உழைப்பு என்றும் பலன் தரும் என்பதற்கேற்ப தடைகள் பல கடந்து சிக்கல்களை சமாளித்து வெற்றி கொடி நாட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ தேர்ந்த நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக குறிப்பாக குழந்தைகள் குதூகலத்துடன் கொண்டாடும் படமாக வெளிவந்திருக்கிறது.