ஃ (அக்கு) திரைப்பட விமர்சனம் : ஃ (அக்கு) திரைப்படம் பழி வாங்கும் ஆமானுஷ்யத்தின் துரத்தல் | ரேட்டிங்: 2/5

0
209

ஃ (அக்கு) திரைப்பட விமர்சனம் : ஃ (அக்கு) திரைப்படம் பழி வாங்கும் ஆமானுஷ்யத்தின் துரத்தல் | ரேட்டிங்: 2/5

அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஃ (அக்கு) திரைப்படத்தை தயாரித்து வெ.ஸ்டாலின் இயக்கியிருக்கிறார்.

இதில் பிரஜன், காயத்ரி ரெமா, கலக்கப் போவது யாரு’ சரத், ராமநாதன் வடக்குவாசல் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- , பிஆர்ஒ-நித்தீஷ் ஸ்ரீராம்.

திரைப்பட எடிட்டராக பணியாற்றும் பிரஜன் மாடலும், நடிப்பில் ஆர்வமாக இருக்கும் காயத்ரி ரெமாவை காதலிக்கிறார். இவரின் நண்பர்கள் பிரபல இயக்குனர் ஸ்டாலினிடம் உதவி இயக்குனர்களாக புதிதாக சேர்கின்றனர். அதனால பின்னணி இசை – சதீஷ் செல்வம், ஒளிப்பதிவு- தேவசூர்யா, படத்தொகுப்பு-அரவிந்தன் ஆறுமுகம்; தன் காதலி காயத்ரிக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தருமாறு பிரஜன் நண்பர்களிடம் கூறுகிறார். நண்பர்களின் சிபாரிசின் பேரில் காயத்ரி இயக்குனரை பார்க்க செல்கிறார். அதன் பின் காதலி காயத்ரி கற்பழித்து கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் பார்க்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் பிரஜன், தன் நண்பர்களை தேடுகிறார். இயக்குனரும், நண்பர்களும் தலைமறைமாகிவிட்டதை கண்டு, அவர்களை கண்டுபிடிக்கச் செல்கிறார். அதே சமயம் மனநல மருத்தவர் கண்காணிப்பில் இருக்கும் நோயாளி ஒருவர் வரையும் ஒவியம்; அடுத்து யாரை பழி வாங்கப் போகின்றனர் என்பதை தெரிந்து போலீஸ் அதற்கு முன் கொலையை தடுக்க செல்கின்றனர். இந்நிலையில் ஒருவர் பின் ஒருவராக அவர்கள் கொல்லப்படுவதும் பிரஜன் அந்த இடத்தில் இருப்பதும் உறுதியாகிறது. இந்த கொலைப்பழி பிரஜன் மேல் விழுகிறது. இதனாhல் போலீஸ் பிரஜனை தீவிரமாக தேடுகிறது. இறுதியில் கொலை செய்வது யார்? எதனால்? கொலையாளியா? அல்லது ஆமானுஷ்ய சக்தியா? என்பதே மீதிக்கதை.

பிரஜன் காதலனாக தன் காதலியின் இழப்பை தாங்க முடியாமல் கதறும் இடங்களிலும், கொலை செய்தவர்களை பழி வாங்க செல்ல, அங்கே எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களின் மர்மத்தை கண்டு பிடிக்க முடியாமல் தப்பி ஒடுவதும், தன் காதலியின் பரிதாப நிலையையும், கதறலையும் பார்த்து இறுதியில் என்ன செய்வதென்று தெரியாமல் பிரமை பிடித்தது போல் இருக்கும் சூழ்நிலையை சிறப்பாக செய்துள்ளார்.

இவரின் காதலியாக வரும் காயத்ரி ரெமா இவரைச் சுற்றித் தான் கதை பயணிப்பதால் சிறப்பாக செய்துள்ளார். இன்னொரு உதவி இயக்குநராக வருகிற ‘கலக்கப் போவது யாரு’ சரத், மனநல நிபுணராக வருகிற ராமநாதன், ஓவியராக வருகிற வடக்குவாசல் ரமேஷ் என படத்தின் மற்ற நடிகர்களின் பங்களிப்பில் நிறைவாக செய்வதால் குறையில்லை.

பின்னணி இசை – சதீஷ் செல்வம், ஒளிப்பதிவு- தேவசூர்யா, படத்தொகுப்பு-அரவிந்தன் ஆறுமுகம் ஆகிய தொழில் நுட்ப கலைஞர்;களின் பங்களிப்பு படத்தின் விறுவிறுப்பை தக்க வைத்துள்ளது.

திரைத்துறையில் நடக்கும் சம்பவங்களாக திரைக்கதையமைத்து இதனை மையமாக வைத்து கிரைம் திரில்லராக இறுதி காட்சி வரை நகர்த்தி கிளைமாக்ஸ் நெருங்கும்போது எதிர்பாராத பென்னை வைத்து பெண்ணின் ஹாரர் கதையை இன்னும் அழுத்தத்தோடு கொடுக்க  முயற்சித்திருக்கலாம் இயக்குனர் வெ.ஸ்டாலின்.

அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஃ (அக்கு) திரைப்படம் பழி வாங்கும் ஆமானுஷ்யத்தின் துரத்தல்