ஷூ விமர்சனம்: ஷூ குழந்தைகள் கால்களுக்கு பொருந்தவில்லை | ரேட்டிங்: 2/5

0
141

ஷூ விமர்சனம்: ஷூ குழந்தைகள் கால்களுக்கு பொருந்தவில்லை | ரேட்டிங்: 2/5

நிட்கோ ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்தி மற்றும் நியாஸ் இணைந்து தயாரிக்க இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார்.
இதில் யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய, விஜய் டிவி பாலா, பிரியாகல்யாண், ஆண்டனி தாசன், டோனி, செம்மலர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-ஜெகப் ரத்தினராஜ், ஜெமின்ஜாம் ஐயனேத், இசை-சாம்.சி.எஸ்.எடிட்டர்-விஜய் வேலுக்குட்டி, கலை-சுரேஷ், பாடல்கள்-முத்தையா, சண்டை- ராக் பிரபு, பிஆர்ஒ- நிகில்.

திலீபன் டைம் டிராவல் ஷூவை கண்டுபிடிக்கிறார். ஒரு காலை உதைத்தால் பத்து நிமிடம் பின்னாலும் மற்றொரு காலை உதைத்தால் பத்து நாட்கள் பின்னாலும் செல்லக்கூடிய வகையில் உருவாக்க, அப்படிப்பட்ட ஷூ தொலைந்து போக, யோகிபாபுவிற்கு கிடைக்கிறது. அதே சமயம் குழந்தை கடத்தல் கும்பல் பல குழந்தைகளை கடத்தி பாலியல் ரீதியாக துன்பங்களை கொடுக்கிறார்கள். இதில் பிரியா என்ற சிறுமியை தந்தையே கடத்தல் கும்பலிடம் விற்று விடுகிறார். அந்த சிறுமி மற்ற குழந்தைகளை காப்பாற்றினாரா? டைம் டிராவல் ஷூ திலீபன் கைகளுக்கு கிடைத்ததா? அதனால் நடந்த நன்மை என்ன? என்பதே மீதிக்கதை.
யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா, பிரியாகல்யாண், ஆண்டனி தாசன், டோனி, செம்மலர் அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவு-ஜெகப் ரத்தினராஜ், ஜெமின்ஜாம் ஐயனேத், இசை-சாம்.சி.எஸ் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்து கொடுத்துள்ளனர்.

எடிட்டர்-விஜய் வேலுக்குட்டி, கலை-சுரேஷ் படத்தை இன்னும் விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம்.

இயக்குனர் கல்யாண் டைம் டிராவல் ஷூ, குழந்தைகள் என்ற கதைக்களத்தை வைத்து அருமையாக குழந்தைகள் படமாக கொடுத்திருக்கலாம். ஆனால் குழந்தை கடத்தல் அதன் பின் குழந்தைகள் பாலியல் கொடுமை செய்வது என்று காட்சிப்படுத்தியிருப்பது, தந்தையே குழந்தையை விற்பது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். குழந்தைகள் படமாகவும் இல்லை, ரசிக்கக்கூடிய படமாகவும் இல்லை, விழிப்புணர்வை ஏற்படுத்த இப்படியெல்லாம் காட்ட தேவையே இல்லை. இறுதிக்காட்சியை கூச்சலும், குழப்புமாக முடித்திருக்கிறார்.

மொத்தத்தில் நிட்கோ ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்தி மற்றும் நியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஷூ குழந்தைகள் கால்களுக்கு பொருந்தவில்லை.