ஆற்றல் விமர்சனம்: ஆற்றல் வித்தியாசமான கோணத்தில் துணிகரமாக கொள்ளையடிப்பது புது முயற்சி | ரேட்டிங்: 2.5/5

0
199

ஆற்றல் விமர்சனம்: ஆற்றல் வித்தியாசமான கோணத்தில் துணிகரமாக கொள்ளையடிப்பது புது முயற்சி | ரேட்டிங்: 2.5/5

செவ்வந்தி மூவிஸ் ஜே.மைக்கேல் தயாரிப்பில் ஆற்றல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறர் கே.எல்.கண்ணன்.
இதில் விதார்த், ஷிரிதாராவ், சார்லி, வம்சி கிருஷ்ணா,விக்கி, வித்யூ ராமன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-அஸ்வின் ஹேமந்த், எடிட்டர்-விஜய் வேலுக்குட்டி, கலை-வீர சமர், ஒளிப்பதிவு-கொளஞ்சி குமார், சண்டை-விக்கி, பாடல்கள்-விவேகா, ராம்கணேஷ், மக்கள் தொடர்பு- குணா.

விதார்த் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ள மெக்கானிக்கல் இன்ஜினியர், தானியங்கி காரை கண்டுபிடிக்க பத்து லட்சம் பணம் தேவைப்படுகிறது. கார் மெக்கானிக் கடை வைத்திருக்கும் தந்தை சார்லி தன் மகனின் ஆசையை நிறைவேற்ற பத்து லட்சம் கடன் வாங்கி பைக்கில் எடுத்து வரும் வழியில் அடிபட்டு இறக்கிறார். பத்து லட்சம் பணமும் காணாமல் போகிறது. அதே சமயம் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் வரும் நால்வர் பல வீடுகளில் புகுந்து கொள்ளை, கொலை என்று படுபாதக செயலை செய்கின்றனர். இதற்கு தலைவனாக வம்சி இருக்கிறார். சார்லிக்கு கடன் கொடுத்தவர் விதார்த்திடம் தந்தையின் கடனை சொல்ல, அதிர்ச்சியாகும் விதார்த்; தன் தந்தையும் பணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார். இதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் விதார்த். இறுதியில் தன் தந்தையின் தொலைந்த பணத்தை மீட்டாரா? கொலைகார கும்பலை பிடித்தாரா? பணத்தை எடுத்த உண்மையான குற்றவாளி யார்? என்பதே மீதிக்கதை.

விதார்த் விஞ்;;ஞானியாக, காதலனாக, மகனாக என்று பல பரிணாமங்கில் பங்களிப்பை கொடுத்திருந்தாலும், இவரின் புதிய தலைமுடி கெட்டப் பொருந்தவில்லை. மற்றபடி தன்னுடைய கதாபாத்திரத்திற்குகேற்ற உழைப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.

காதலியாக ஷிரிதாராவ், தந்தையாக சார்லி, வில்லனாக வம்சி கிருஷ்ணா,விக்கி, தோழியாக வித்யூ ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் பொருத்தமாக செய்துள்ளனர்.

இசை-அஸ்வின் ஹேமந்த், எடிட்டர்-விஜய் வேலுக்குட்டி, கலை-வீர சமர், ஒளிப்பதிவு-கொளஞ்சி குமார் ஆகியோர் யதார்த்தமான காட்சிகளுக்கு கை கொடுத்துள்ளனர்.
கொள்ளை, கொலை கும்பலின் வித்தியாசமான ஈ கேமிரா அணுகுமுறை புதிதாக இருக்க அதிநவீன தானியங்கி கார் கண்டுபிடிப்பை வைத்து கொலைகார கும்பலை பிடிக்கும் இளைஞனின் கதைக்களத்தை விறுவிறுப்பாக கொடுக்க நினைத்திருப்பதற்கு இயக்குனர் கே.எல்.கண்ணனுக்கு பாராட்டுக்கள்.

செவ்வந்தி மூவிஸ் ஜே.மைக்கேல் தயாரிப்பில் ஆற்றல் வித்தியாசமான கோணத்தில் துணிகரமாக கொள்ளையடிப்பது புது முயற்சி.