வாரிசு விமர்சனம் : வாரிசு இரண்டு பணக்காரர்களின் தொழில் மோதலில் வெடிக்கும் வாரிசுப்போட்டி | ரேட்டிங்: 3/5
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜு, ஷிரிஷ் தயாரித்திருக்கும் எழுதி இயக்கியிருக்கிறார் வம்ஷி பைடிப்பள்ளி.
இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஆர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், சுமன், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா கிரிஷ், சம்யுக்தா, நந்தினி ராய், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீPமன், விடிவி கணேசன்,பரத் ரெட்டி, சஞ்சனா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – தமன் எஸ்,கதை, திரைக்கதை – வம்ஷி பைடிப்பள்ளி, ஹரி மற்றும் அஹிஷோர் சாலமன்,இணை தயாரிப்பாளர்கள் – ஸ்ரீஹர்ஷித் ரெட்டி, ஸ்ரீஹர்ஷிதா, வசனங்கள், கூடுதல் திரைக்கதை, பாடல்கள் – விவேக், ஒளிப்பதிவு – கார்த்திக் பழனி, எடிட்டர் – பிரவீன் கே.எல்,தயாரிப்பு வடிவமைப்பு – சுனில் பாபு மற்றும் வைஷ்ணவி ரெட்டி, விஎப்எக்ஸ் – யுகாந்தர்,ஸ்டண்ட் இயக்குனர் – ராம் லக்ஷ்மன், பீட்டர் ஹெயின் மற்றும் திலிப் சுப்பராயன், நடன இயக்குனர் – ஜானி, ஷோபி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அகமது
ஜெய் (ஸ்ரீகாந்த்) அஜய் (ஷாம்) மற்றும் விஜய் (விஜய்) ஆகிய 3 மகன்களுக்கு ராஜேந்திரன் (ஆர்.சரத்குமார்) கோடீஸ்வரர் அப்பா. தனி அடையாளத்துடன் தன்னுடைய வாழ்க்கையை தன் விருப்பத்திற்கு வாழ நினைக்கும் இளைய மகன் விஜய். அதனால் விஜய் தனது தந்தையின் ஆடம்பர சாம்ராஜ்யத்தை, தந்தை ஏற்பாடு செய்திருந்த அடுத்த வாரிசு போட்டி அறிவிப்பு குடும்ப விழாவில் நிராகரிக்கிறார். அதனால் கோபமடைந்த கோடீஸ்வரர் அப்பா மகன் விஜய்யை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அண்ணன் ஜெய் (ஸ்ரீகாந்த்) தம்பி அஜய்க்கு இடையில் வாரிசுக்கான போட்டியில் பிரச்சனை ஏற்படுகிறது. டாக்டர் நண்பர் பிரபு, ராஜேந்திரனுக்கு கேன்சர் நோய் இருப்பதை சொல்ல இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று டாக்டரிடம் கேட்டுக் கொள்கிறார். அப்பா, அம்மாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு அம்மா வற்புறுத்தலால் விஜய் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்கு வருகிறார். அவர் இல்லாமல் அவரது குடும்பம் எவ்வளவு சிதைந்துள்ளது என்பதை அங்கு அவர் அறிந்து கொள்கிறார். மணவிழாவில் அண்ணன் ஜெய் (ஸ்ரீகாந்த்) தம்பி அஜய்க்கு இடையே கருத்து வேறுபாட்டால் தந்தை அவமானம் அடைகிறார். அப்போது தான் இளைய மகன் விஜய் தனி அடையாளத்துடன் தன் உழைப்பால் உயாந்த செய்தியை செய்திதாளில் வந்த கட்டுரை பார்த்து தெரிந்து கொள்கிறார். குடும்ப விழா முடிந்ததும் விஜய் வீட்டை விட்டு வெளியேறும் போது தந்தை அவரை இங்கேயே தங்கும் படி கேட்கிறார். ஆனால் விஜய் வீட்டிலிருந்து புறப்படுகிறார். அப்பா சரத்குமார் கேன்சரால் பாதிப்படைந்திருப்பதை விஜய்யிடம் மட்டும் டாக்டர் சொல்ல மீண்டும் விஜய் வீட்டிற்கு திரும்புகிறார். அப்பாவுக்காக அவர்களது கம்பெனி நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறார் விஜய். அது பிடிக்காத அவரது அண்ணன்கள் ஸ்ரீகாந்த், ஷாம் வீட்டை விட்டு வெளியே போகிறார்கள். அதனால் குடும்பம் கலைகிறது. மறுபக்கம் பிசினஸ் எதிரியான பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம் இருவரையும் வைத்து சரத்குமார் பிசினஸை அழிக்க நினைக்கிறார். அவற்றை அந்த சதியிலிருந்து விஜய் எப்படி சமாளித்தார்? பிரிந்த கூட்டுக் குடும்பத்தை மீண்டும் சேர்த்து தந்தையின் கனவுகளை மகன் விஜய் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
விஜய் படத்தில் அவருக்கே உரித்தான அக்மார்க் நடன அசைவுகள், சண்டைக் காட்சி, ரொமான்ஸ், பஞ்ச் டயலாக், கேலி கிண்டலுமான வசன உச்சரிப்பு, அம்மா, அப்பான சென்டிமெண்ட் என நடிப்பில் தூள் பரத்தியுள்ளார்.
விஜய்யின் கோடீஸ்வர அப்பாவாக ஆர்.சரத்குமார், தொழிலில் ஈடுபாடு, மகன்களிடம் கண்டிப்பு, மனைவியிடம் அதட்டல் என்று முதல் பாதியில் கெத்தாக வலம் வந்து, அதன் பின் உடல்நிலை மோசமானதும் அதற்கு நேர்மறையாக அமைதியான, பாசமான அப்பாவாக மாறும் தோற்றத்தில் தனித்து நிற்கிறார்.
ஜெயசுதா அம்மாவாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி குடும்பத்தை பாசத்தால் கட்டிப்போடும் இணைப்பு பாலமாக சிறப்பாக நடித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனாவுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் பாடலுக்கும், கவர்ச்சிக்கும் மட்டுமே பயன் படுத்தியுள்ளனர்.
பிரகாஷ் ராஜ் வில்லனாகவும், டாக்டர் நண்பராக பிரபு, விஜய்யின் சகோதரர்களாக ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் பரவாயில்லை.
யோகி பாபு விஜய்க்கு ஈடு கொடுத்து தோன்றும் சில காட்சிகளில் நகைச்சுவையோடு சிரிக்கும்படி உள்ளது.
மற்றும் சுமன், சங்கீதா கிரிஷ், சம்யுக்தா, நந்தினி ராய், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், விடிவி கணேசன், பரத் ரெட்டி, சஞ்சனா, சதீஷ் கதையில் பல நட்சித்திர பட்டாளங்கள் வந்து போகின்றனர்.
தமன் இசை, பிஜிஎம் மற்றும் பாடல்கள் ரசிகர்களை அதிர வைத்து தாளத்துடன், துள்ளலுடன் வைரல் ஆக்கிவிட்டார்.
ஜானி, ஷோபி நடனத்தில் விஜய் டான்ஸ் கம்போசிங் மிரள செய்துள்ளார்.
கார்த்திக் பழனியின் பிரம்மாண்ட திரையில் காணும் காட்சிகள் பிரமிக்க வைப்பதுடன், படத்தின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.
எடிட்டர் பிரவீன் கே.எல் தன்னால் முடிந்த வரை காட்சிகளை சரி செய்துள்ளார்.
தொழில் பகை, மகன்களுக்கிடையே நடக்கும் சண்டை என்று ஆக்ஷன் காட்சிகளில் விறுவிறுப்பாக அமைத்துள்ளனர் ராம் லக்ஷ்மன், பீட்டர் ஹெயின் மற்றும் திலிப் சுப்பராயன்.
ரிச் லுக்கில் குடும்ப கதையில், பிள்ளைகளுக்கிடையே நடக்கும் வாரிசு பனிப்போரை, பாசம், காதல், சூழ்ச்சி கலந்து பிரம்மாண்ட மெகா தெலுங்கு படத்தை பார்ப்பது போல் தமிழில் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி.
மொத்தத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜு, ஷிரிஷ் சேர்ந்து தயாரித்துள்ள வாரிசு இரண்டு பணக்காரர்களின் தொழில் மோதலில் வெடிக்கும் வாரிசுப்போட்டி.