ராவண கோட்டம் திரைவிமர்சனம்: இராவண  கோட்டம்  சாதியும் அரசியலும் கலந்த கிராமத்து சதிராட்டம் | ரேட்டிங்: 3.5/5

0
455

ராவண கோட்டம் திரைவிமர்சனம்: இராவண  கோட்டம்  சாதியும் அரசியலும் கலந்த கிராமத்து சதிராட்டம் | ரேட்டிங்: 3.5/5

கண்ணன் ரவி குழுமத்தின் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ள இராவண  கோட்டம் படத்தை விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கியிருக்கிறார்.

இதில் சாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு, இளவரசு, சுஜாதா, தீபா சங்கர், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன், சஞ்சய் சரவணன், முருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை : ஜஸ்டின் பிரபாகரன்,ஒளிப்பதிவு : வெற்றிவேல் மகேந்திரன், கலை இயக்குநர்கள் : நர்மதா வேணி மற்றும் ராஜுகின்,படத்தொகுப்பு : லாரன்ஸ் கிஷோர், மக்கள் தொடர்பு : ஏய்ம் சதஷ்

இராமநாதபுரம் ஏனாதி கிராமத்தில் மேலத்தெரு தலைவராக சந்திரபோஸ{ம் (பிரபு), கீழத்தெரு தலைவராக சித்ரவேலும் (இளவரசு) நெருங்கிய நண்பர்களாக வலம் வந்து ஊருக்குள் சாதி மத கலவரங்கள் ஏற்படாமல் இருதரப்புக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள் பேச்சு வார்த்தையிலேயே தீர்க்கப்பட்டு ஒற்றுமையுடன் வாழ வழி செய்கின்றனர். இவர்களைப் போலவே பிரபு மகன் செங்குட்டுவனும் (சாந்தனு) இளவரசு மகன் மதிமாறனும் (சஞ்சய் சரவணன்) நட்புடன் பழகி தந்தைக்கு ஏற்ற தனயன்களாக இருக்கின்றனர். மேலத்தெரு செங்குட்டுவன்- இந்திரா (ஆனந்தி) இருவரும் காதலிக்கின்றனர்.அதே சமயம் கார்ப்ரேட் நிறுவனமும் உள்@ர் எம்.எல்.ஏவும் (அருள்தாஸ்), அமைச்சர் ராசாகண்ணுவும் (பி.எல்.தேனப்பன்) சேர்ந்து கருவேல மரத்தால் காய்ந்து கிடக்கும் அந்த வறண்ட பூமியின் கனிம வளத்தைச் சுரண்ட ஊரைப் பிரிக்க நினைக்கிறார்கள். இந்த சதிவேலையில் இரண்டு தெருத்தலைவர்களும் இறந்து போகிறார்கள். இதனால் வேற்றுமை ஏற்பட்டு மோதல் உருவாகிறது. காதலும் நட்பின் முன் மோதலாக உருவெடுக்கிறது. இதனால் இரண்டு தெரு பிரிவுகளிலும் பெரும் கலவரமாக உருவெடுக்கிறது. அதன் பின் இரு பிரிவு மக்களுக்கும் என்ன நேர்ந்தது? கலவரம் அடங்கியதா? சூழ்ச்சி வென்றதா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சாந்தனு முரட்டு கிராமத்து இளைஞனாக அசலாக வந்து, கவனத்தை ஈர்க்கிறார். தந்தையிடம் அன்பு, நட்பு,காதல், மோதல், ஆக்ரோஷம் என அனைத்து காட்சிகளிலும் கடின உமைப்பு பளிச்சிடுகிறது. ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கிறது.

காதலுக்காக ஆனந்தி, ஊர்த்தலைவர்களாக பிரபு, இளவரசு, காதலை வைத்து ஊரைப் பிரிக்கும் வில்லன் மாரி (முருகன்), போலீஸ் வேலைக்குக் காத்திருக்கும் மதி, ஒரு தலைக்காதலால் நட்பை துறக்கும் நண்பனாக சஞ்சய் சரவணன், சுஜாதா, தீபா சங்கர், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன் என்று அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையும், பின்னணி இசையும் கவனம் பெறுமாறு திறம்பட அமைத்திருக்கிறார்.

வெற்றிவேல் மகேந்திரன் பார்த்து பார்த்து காட்சிக் கோணங்களை அமைத்து திறம்பட ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கலை இயக்குநர்கள் : நர்மதா வேணி மற்றும் ராஜுகின், படத்தொகுப்பு : லாரன்ஸ் கிஷோர் படத்திற்கு பலம்.

இராவண கோட்டம் சமத்துவத்தை ஊக்குவிக்கும் படமாகவும், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் நிலவும் சாதி அரசியலின் பிரதிநிதித்துவமாகவும் இருக்கும் என்று முன்னிறுத்தப்பட்டாலும், அது சமநிலையை காட்டவில்லை. இடைவிடாத முத்துராமலிங்கத் தேவர், தலித் தலைவர் குறிப்புகளும், பல வசனங்கள் இருந்தபோதிலும், ஜாதிக்கு இடையேயான திருமணங்கள் குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்திருப்பது என்று பல கோணங்களில் கதை பயணித்து யூகிக்கக்கூடிய கதையாக அமைந்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் விக்ரம் சுகுமாரன். அதே சமயம் இராமநாதபுர மாவட்டத்தின் கருவேல மரத்தின் பின்னணியில் அரசியல் கலந்திருப்பதையும், அம்மாவட்டத்தின் எதிர்கால சூழலையும் எச்சரிக்கையாக சூட்சமாக சொல்லியிருப்பதற்காக பாராட்டலாம்.

மொத்தத்தில் கண்ணன் ரவி குழுமத்தின் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ள இராவண  கோட்டம்  சாதியும் அரசியலும் கலந்த கிராமத்து சதிராட்டம்.