ரத்தம் திரைப்பட விமர்சனம் : ரத்தம் புது தோற்றத்தில் பயணிக்கும் வெறுப்புணர்ச்சி குவியலின் சதி வலையில் சிக்கும் குற்றப் பின்னணி தாக்குதல் | ரேட்டிங்: 3/5

0
718

ரத்தம் திரைப்பட விமர்சனம் : ரத்தம் புது தோற்றத்தில் பயணிக்கும் வெறுப்புணர்ச்சி குவியலின் சதி வலையில் சிக்கும் குற்றப் பின்னணி தாக்குதல் | ரேட்டிங்: 3/5

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் கமல் போஹ்ரா, ஜி.தனஞ்சயன், பிரதீப் பி மற்றும் பங்கஜ் போஹ்ரா தயாரித்திருக்கும் ரத்தம் படத்தை இயக்கியிருக்கிறார் சி.எஸ்.அமுதன்.

இதில் விஜய் ஆண்டனி,மஹிமா நம்பியார்,நந்திதா ஸ்வேதா,ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:-இசை: கண்ணன் நாராயணன், ஒளிப்பதிவாளர்: கோபி அமர்நாத், எடிட்டிங்: டி.எஸ்.சுரேஷ், சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன்,ஒலி வடிவமைப்பாளர்: விஜய் ரத்தினம்,ஒலி கலவை: ஏ எம் ரஹ்மத்துல்லா, கலை: செந்தில் ராகவன்,எழுதும் குழு : அதிஷா, கார்க்கிபவா, தோழர் ஆதி, பாடல் வரிகள்: யுகபாரதி, அறிவு, உமா தேவி, கே.சந்துரு, ஆடை வடிவமைப்பாளர்: சிமோனா ஸ்டாலின், ஒப்பனை: ஹரி பிரசாத், ஸ்டில்ஸ்: மகேஷ் ஜெயச்சந்திரன், நிர்வாகத் தயாரிப்பாளர்: பிரதீப் சுப்ரமணியம், மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா, டிஒன்

முதல் காட்சியில் வானம் என்ற ஊடக நிறுவனத்தின் ஆசிரியர் செழியன் அவரது அலுவலகத்திலேயே ஒரு குடிபோதை ஆசாமியால் கொல்லப்படுகிறார். கொலையாளி ஒரு கட்சித் தலைவரின் தீவிர தொண்டன் தனது தலைவர் மீது பத்திரிகையில் வெளியிடப்பட்ட எதிர்மறையான கட்டுரையால் கோபமடைந்து இந்த கொலையை செய்கிறார். ஊடக அலுவலகர்கள் அவனை பிடித்து போலீசல் ஒப்படைக்கின்றனர். அதன் பின் விஜய் ஆண்டனி பற்றி கதைக்களம் பயணிக்கிறது. கொல்கொத்தாவில் வசிக்கும் வானம் பத்திரிகையின் முன்னாள் புலனாய்வு பத்திரிகையாளர் ரஞ்சித்குமார் (விஜய் ஆண்டனி). தனது மனைவியின் மரணத்திற்கு பிறகு வேலையை விட்டு விலகி, தனது இளம் மகள் அரும்பாவுடன் கொல்கத்தாவில் குதிரைகளை பராமரிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்.அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் சோகத்திலிருந்து விடுபடாமல் குடித்துக் கொண்டே இருக்கிறார். இந்த பழக்கம் இவருக்கும், இவரது மகளுக்கும் சிறு விபத்து ஏற்பட காரணமாகிறது. இந்த சமயத்தில் சென்னையில், பத்திரிகை அலுவலகத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செழியனின் தந்தையும், வளர்ப்புத் தந்தையும், பத்திரிகை நிறுவன முதலாளியான ரத்தின பாண்டியன் (நிழல்கள் ரவி) கொல்கத்தாவிற்கு வந்து ரஞ்சித் குமாரை சந்தித்து சென்னைக்கு வரும்படி வேண்டுகோள் வைக்கிறார். அந்த வேண்டுகோளை முதலில் ஏற்க மறுக்கும் ரஞ்சித் குமார் மனம் மாறி சென்னைக்கு வருகிறார்;. ரத்தின பாண்டியன் மற்றும் குற்றவியல் தலைமை நிருபர் மதுமிதா (நந்திதா ஸ்வேதா) ஆகியோருடன் இணைந்து வானம் பத்திரிகையில் தன் பணியை தொடர்கிறார். தனது நண்பன் செழியனின் கொலைக்கான பின்னணியை தீவிரமாக ஆராய தொடங்கும்போது, ஒரு மாவட்ட ஆட்சியரும் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைகளுக்கு பின்னால் ஒரு பெரிய சதி வேலைகள் செய்யும் கும்பல் ஒரு பெரிய அமைப்பாக இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த கும்பல் யார்? அவர்களின் முக்கிய நோக்கம் என்ன? கொலைகளை செய்ய எப்படி தூண்டுகிறார்கள்? கொலையாளியை எப்படி அணுகிறார்கள்? இவர்கள் மாட்டிக் கொள்ளாமல் எப்படி சதியை திட்டமிடுகின்றனர்? இதை எப்படி ரஞ்சித்குமார் கண்டுபிடித்து பிடிக்க உதவுகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

விஜய் ஆண்டனி மிகச் சிறந்த இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட் ரஞ்சித்குமாராக வலம் வந்து தனிப்பட்ட சோகத்தின் இழப்பால் ஒய்வு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சூழலில் மீண்டும் பணிக்கு வந்து துரிதமாக தன்னுடைய நண்பனின் கொலையை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிக்கும் அதன் பின்னால் நடக்கும் சதி வேலைகளையும் அம்பலப்படுத்தும் உன்னதமான பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் அவருக்காக மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பது தான் படத்தின் குறை.

மஹிமா நம்பியார் சிரித்த முகத்துடன் இயல்பாக வலம் வரும் இவருக்கு பின்னால் மறைந்திருக்கும் மர்மம் அதற்காக மஹிமா எந்த அளவிற்கு மெனக்கெடலும், முயற்சியும் செய்து முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம் எடுத்து பல சாயல்கள் கொண்ட புதுவித அவதாரத்தில் சர்ப்பரைஸ் கொடுத்துள்ளார். வெல்டன்.

இவர்களுடன் நந்திதா ஸ்வேதா,ரம்யா நம்பீசன்,நிழல்கள் ரவி ஆகியோர் படத்தின் முதுகெலும்பாக இருந்து திரைக்கதைக்கு ஒத்துழைத்துள்ளார்கள்.

இசை: கண்ணன் நாராயணன், ஒளிப்பதிவாளர்: கோபி அமர்நாத், எடிட்டிங்: டி.எஸ்.சுரேஷ், சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன் ஆகியோர் குற்றவியல் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

அதிஷா, கார்க்கிபவா, தோழர் ஆதி ஆகியோர் கதையின் பங்களிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் படம் ரத்தம். பத்திரிகை துறை சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் இன்வஸ்டிகேடிவ் பத்திரிகையாளரின் பணியை துல்லியமாகவும், திறம்பட கொடுக்க பல மெனக்கெடல்கள் செய்து, ஒரு புதுவித டெக்னிக்கை கையாளும் கொடூர நெட்வொர்க்கின் பின்னணியை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்தும் கோணத்தில் கொடுத்திருந்தாலும் சில காட்சிகள் நம்பகத்தன்மையில்லாமல் மிகைப்படுத்தி எழுதியுள்ளார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். இதற்கான தகவல்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தி சொல்ல முனைந்திருக்கும் முயற்சிக்கும், உழைப்பிற்க்கும் பாராட்டுதல்கள்.

மொத்தத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் கமல் போஹ்ரா, ஜி.தனஞ்சயன், பிரதீப் பி மற்றும் பங்கஜ் போஹ்ரா தயாரித்திருக்கும் ரத்தம் புது தோற்றத்தில் பயணிக்கும் வெறுப்புணர்ச்சி குவியலின் சதி வலையில் சிக்கும் குற்றப் பின்னணி தாக்குதல்.