மாமனிதன் விமர்சனம்: அனைவரின் மனதை கொள்ளை கொள்ளும் உயர்ந்த மனிதன் இந்த மாமனிதன் | ரேட்டிங் 3/5
யுவன் ஷங்கர் ராஜாவின் ஒஎஸ்ஆர் தயாரிப்பில் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் வெளியீட்டில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சீனு ராமசாமி.
இதில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், சாஜி சென், ஜெவெல் மேரி, கே.பி.ஏ.சி.லலிதா, அனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு-சுகுமார், பிஆர்ஒ-நிகில்
தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்தில் ஆட்டோ ஒட்டுனராக காதல் மனைவி காயத்ரிஇ மகன்இ மகள் என்று பாசப் பிணைப்புடன் விஜய் சேதுபதி வாழ்ந்து வருகிறார். இவருக்கு நெருங்கிய நண்பர் குரு சோமசுந்தரம். விஜய் சேதுபதி குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டு பணம் சம்பாதிக்க நினைக்கிறார். அங்கே மலையாள நிலஅதிபர் தன்னுடைய நிலங்களை பிளாட்டாக விற்பதை பார்க்கிறார். அவரிடம் சென்று நிலங்களை விற்று தரும் நிலபுரோக்கர் வேலையில் சேருகிறார். விஜய் சேதுபதியை நம்பி 25 பேர் பணம் கொடுக்க மொத்தமாக வாங்கிய பத்து லட்சம் பணத்தை நில அதிபரிடம் கொடுக்கிறார். மறுநாள் பத்திரப்பதிவு நடைபெறும் நிலையில் நில அதிபர் பணத்தை எடுத்துக் கொண்டு ஒடி விடுகிறார். இதனால் விஜய்சேதுபதியை மக்களும்இ போலீசும் வலை வீசி தேட ஆரம்பிக்கிறார்கள். இவர்களுக்கு பயந்து மனைவிஇ குழந்தைகளிடம் சொல்லிவிட்டு வீட்டு பத்திரத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டே ஒடி விடுகிறார். அங்கிருந்து கேரளா ஆலப்புழாவில் இருக்கும் நிலஅதிபர் வீட்டிற்கு செல்கிறார். ஆனால் நிலஅதிபரின் வயதான தாய் மட்டும் இருக்க, ஏமாற்றமடைகிறார். அங்கே வேறு இடத்தில் வேலை செய்து கொண்டு நிலஅதிபருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இன்னொருபுரம் காயத்ரி குழந்தைகளை குரு சோமசுந்தரம் உதவியால் கஷ்டப்பட்டு கல்லூரி வரை படிக்க வைக்கிறார். படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்லும் மகனின் முதல் சம்பளத்தை காயத்ரி எடுத்துக்கொண்டு குரு சோமசுந்தரத்திடம் கொடுக்க செல்கிறார். ஆனால் குரு சோமசுந்திரம் அதை வாங்க மறுத்து விஜய் சேதுபதி இருக்கும் இடத்தையும்இ இதுநாள் வரை விஜய் சேதுபதி அனுப்பிய பணத்தில் தான் படிக்க வைத்ததையும் கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியாகும் காயத்ரி அவரது மகன் மற்றும் குரு சோமசுந்தரத்துடன் கேரளா செல்கிறார். அங்கே விஜய் சேதுபதி ஊரை விட்டே சென்று விட்டதை அறிந்து செய்வதறியாது தவிக்கிறார். இறுதியில் விஜய் சேதுபதியை கண்டுபிடித்தனரா? பண்ணைபுரத்திற்கு அழைத்து வந்தார்களா? அவர் மேல் இருந்த வழக்கு என்னவானது? என்பதே மீதிக்கதை.
விஜய் சேதுபதி சாதாரண நடுத்தர மனிதராக அனைவருக்கும் அறிந்தவராக சகஜமாக பழகி எளிதாக மனதில் இடம் பிடிக்கும் குணம் கொண்டவராக முதலில் இருந்து பின்னர் ஏமாற்றப்பட்டதை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் பழி சொல்லுக்கு பயந்து வேறு வழியின்றி ஊரை விட்டே செல்லும் நிலைக்கு தள்ளப்படுவதை எண்ணி மனஉளைச்சலில் அழுது புலம்புவதாகட்டும் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.
காதலித்து கைவிட்ட கணவரை எண்ணி மனமுடைந்து புழுங்குவதாகட்டும், குழந்தைகளின் படிப்பிற்காக ஊர் மக்களின் ஏச்சு பேச்சுளை பொறுத்துக் கொண்டு வாழ்வதாகட்டும்இ கணவரை தேடி அலைவதாகட்டும் அச்சு அசலாக கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.
நல்ல பரந்த குணமுடைய இஸ்லாமிய நண்பராக குரு சோமசுந்தரம், நில அதிபராக சாஜி சென், ஜெவெல் மேரி, கே.பி.ஏ.சி.லலிதா, அனிகா ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர்.
இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இசை படத்தின் ஒட்டத்திற்கு கை கொடுத்துள்ளது.
சுகுமார் காட்சிக்கோணங்களில் கிராமத்து சூழ்நிலைகளை அழகாக விவரித்துள்ளார்.
சந்தோஷமான வாழ்க்கை வாழும் மனிதன் சிறிய தவறால் சிக்கலில் மாட்டி குடும்பத்தை இழந்து விட்டு சென்று அவர்களுக்காக அயராக உழைத்து மாமனிதாக மாறும் நிலைமையை இயல்பான கதைக்களத்துடன் மிக பொருமையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. அவரின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.
மொத்தத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒஎஸ்ஆர் தயாரிப்பில் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் வெளியீட்டில் அனைவரின் மனதை கொள்ளை கொள்ளும் உயர்ந்த மனிதன் இந்த மாமனிதன்.