பாசக்கார பய திரைப்பட விமர்சனம் : பாசக்கார பய பிடிவாதம் பிடிக்கும் நேசக்காரன் | ரேட்டிங்: 2.5/5

0
268

பாசக்கார பய திரைப்பட விமர்சனம் : பாசக்கார பய பிடிவாதம் பிடிக்கும் நேசக்காரன் | ரேட்டிங்: 2.5/5

காயன் மிக்சர்ஸ் நற்கவி டாக்கீஸ் சார்பில் பாசக்கார பய படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் விவேகபாரதி.
இதில் விக்னேஷ் (குணா), காயத்ரி (தேன்மொழி), பிரதாப் (சுப்ரமணி), கஞ்சா கருப்பு (மதுரபாண்டி), தேனி முருகன் (மந்திரவாதி), விவேக பாரதி (பெருமாள்), ராஜசேதி. ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு – கே.வி.மணி, இசை – சௌந்தர்யன், எடிட்டிங் – எஸ்.பி.அகமது,நடனம் – சாய் சரவணன், ஸ்டண்ட் – சாய் சாரா, வசனம்- பி.சேதுபதி, மக்கள் தொடர்பு – வெங்கட்.

தையல் தொழில் செய்து வரும் தேன்மொழியை சுப்ரமணி ஒரு தலையாக காதலிக்கிறான். காதலை ஏற்க மறுக்கும் தேன்மொழி சிறு வயதிலேயே ஜெயிலுக்கு சென்று விட்ட தன் தாய் மாமன் குணாவை நினைத்து அவனுக்காகவே வாழ்வதாகவும் ரிலீசிற்காக காத்திருப்பதாகவும் சுப்ரமணியிடம் தெரிவிக்கிறார். ஜெயிலிலிருந்து வெளியே வரும் குணா, தேன்மொழியின் அன்பை நினைத்து உருகினாலும், திருமணம் மட்டும் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாகவும், திட்டவட்டமாகவும் கூறி விடுகிறான். ஊரில் வட்டிக்கு கடன் கொடுத்து திருப்பித் தராதவர்களின் வீட்டிற்கு சென்று பெண்களிடம் அத்து மீறி நடந்து கொள்ளும் ஊர் தலைவரின் அடாவடித்தனத்தை தேன் மொழி கண்டிக்கிறாள். அதன் பின் நடந்தது என்ன? குணா ஏன் தேன்மொழியை திருமணம் செய்து கொள்ளவில்லை? சிறு வயதில் குணா சிறைக்கு செல்ல காரணம் என்ன? மீண்டும் குணாவிற்கு வந்த சோதனை என்ன? வில்லனை என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கிராமத்து முரட்டு இளைஞனாக, அக்காவிடம் பாசம் மிகுந்த தம்பியாக, அக்கா மகளை கட்ட மறுத்து காரணத்தை சொல்லும் விதத்தில் நல்ல மனிதனாக விக்னேஷ் (குணா) கை தட்டல் பெறுகிறார்.

காதலனை நிராகரிக்கும் காயத்ரி (தேன்மொழி) மாமனால் நிராகரிக்கப்பட அதனால் ஏற்படுத்தும் சோகம், காரணம் தெரியாமல் தவிக்கும் தவிப்பு, அச்சு அசலாக கிராமத்து பெண்ணாக நச்சென்று மனதில் பதிந்து விடுகிறார். காதலனாக பிரதாப் (சுப்ரமணி), கஞ்சா கருப்பு (மதுரபாண்டி), தேனி முருகன் (மந்திரவாதி), விவேக பாரதி (பெருமாள்), ராஜசேதி. ஆகியோர் கிராமத்து மனிதர்களாக வலம் வருகின்றனர்.

ஒளிப்பதிவு – கே.வி.மணி, இசை – சௌந்தர்யன், எடிட்டிங் – எஸ்.பி.அகமது ஆகியோரின் பங்களிப்பு படத்தின் கிராமத்து எழில்மிகு காட்சிகளுக்குகேற்றவாறு நிறைவுடன் கொடுத்துள்ளனர்.

அக்காவை அம்மாவாக பாவிக்கும் கிராமத்து இளைஞன், அவளின் சாயலில் இருக்கும் மகளை தாயாக நினைக்க முடியுமே தவிர தாரமாக நினைக்க முடியாது என்பதை குடும்ப செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்து தன்னால் முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விவேகபாரதி.

மொத்தத்தில் காயன் மிக்சர்ஸ் நற்கவி டாக்கீஸ் பாசக்கார பய பிடிவாதம் பிடிக்கும் நேசக்காரன்.