தமிழ் ராக்கர்ஸ் விமர்சனம் : ஓடிடி ரசிகர்களை தமிழ் ராக்கர்ஸ் கவரும் | ரேட்டிங்: 3\5

0
375

தமிழ் ராக்கர்ஸ் விமர்சனம் : ஓடிடி ரசிகர்களை தமிழ் ராக்கர்ஸ் கவரும் | ரேட்டிங்: 3\5

நடிகர்கள்:

அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், எம்.எஸ். பாஸ்கர், வினோதினி, ஜி.மாரிமுத்து, தருண் குமார், வினோத் சாகர், ஷரத் ரவி, ஜானி, காக்கா முட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ், அஜித் ஜோஷி.

ஏவிஎம் தயாரிப்புகள்

தயாரிப்பு: அருணா குகன், அபர்ணா குகன் ஷியாம்.

கிரியேட்டிவ் டைரக்டர்: அருணா குகன்

இசை : விகாஸ்

ஒளிப்பதிவு : பி.ராஜசேகர்

கலை இயக்குனர பி.பி.சரவணன்

எடிட்டர்: வி.ஜே.சாபு ஜோசப்

கதை: மனோஜ் குமார் கலைவாணன்

இயக்கம்: அறிவழகன்

ஏ.வி.எம் புரொடக்‌ஷன்ஸ் தனது கனவு உலகின் நுழைவு வாயிலாக தமிழ் ராக்கர்ஸ் தொடரை தயாரித்து சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ் இருப்பை புறக்கணிக்க முடியாது. அவை சாதாரண குடிமக்களுக்கு வரப்பிரசாதமாகும், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தடையாகவும் இருக்கின்றன.
தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரும் சவாலாக விளங்கிய பைரசி இணையதளமான ‘தமிழ் ராக்கர்ஸ்’ கூட்டத்தைக் கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியான அருண் விஜய் முயற்சிப்பதுதான் இத் தொடரின் கதை. அவர்கள் எப்படியெல்லாம் ஒரு படத்தை இணையதளத்தில் பதிவேற்றுவார்கள் என்பதை கற்பனை கலந்த கதையாகக் கொடுத்திருக்கிறார்கள்.

சட்டவிரோத திருட்டு நடவடிக்கையை நடத்தும் கும்பல் சில சமயங்களில் திட்டமிட்ட ரிலீசுக்கு ஒரு நாள் முன்னதாக படத்தை வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்களை மிரட்டுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

ஒரு பெரிய நட்சத்திர வெளியீட்டின் காலை 4 மணி நிகழ்ச்சியில்  படம் வெளியான சில நிமிடங்களில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஆன்லைனில் கசிகிறது, படத்தின் தயாரிப்பாளர் தற்கொலைக்கு வழிவகுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது, குறிப்பாக இது 10 நாட்களில் வெளிவரவிருக்கும் ‘அதிரடி ஸ்டார்’ ஆதித்யாவின் 300 கோடி படமான கருடாவையும் அச்சுறுத்துவதாகவும், திட்டமிட்ட வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாகவே படத்தை வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்ததும் இந்த மிரட்டல் உண்மையாகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்ட டிஐஜி சந்தீப் மேனன், சைபர் தடயவியல் அதிகாரி சந்தியா (வாணி போஜன்), சைபர் கிரைம் எஸ்ஐ பானு (வினோதினி வைத்தியநாதன்) மற்றும் இன்ஸ்பெக்டர் நெல்சன் (வினோத் சாகர்) ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவைத் தலைவராக ஏசிபி ருத்ரா (அருண் விஜய்) நியமிக்கப்படுகிறார். தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடித்து கருடா ஆன்லைனில் கசிவதை தடுத்தாரா ஏசிபி ருத்ரா?  என்பதை 8 எபிசோட் தொடர் தமிழ்  SonyLiv –  இல்  முழு HD யில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

அருண் விஜய் புதிய அவதாரமான வெப் தொடரில் ஏசிபி ருத்ரா கதாபாத்திரத்தில் காவல் துறை அதிகாரிக்குரிய உடல்மொழியும், பேச்சிலும் கம்பீரத்துடன் வலம் வருகிறார்.

குறைவான காட்சிகளில் தோன்றும் ஐஸ்வர்யா மேனன் ருத்ராவின் மனைவியாகவும்,

அருண் விஜய்க்கு உதவி செய்யும் முக்கிய சைபர் கிரைம் அதிகாரியாக வாணி போஜன்.  வினோதினி, வினோத் சாகர், அழகம் பெருமாள், ஜி மாரிமுத்து, வில்லனாக நடித்திருக்கும் தருண் குமார்,  ‘காக்கா முட்டை’ ரமேஷ், ‘காக்கா முட்டை’ விக்னேஷ், எம்எஸ் பாஸ்கர், ஆகியோரும் தொடர் முழுவதுமே இடம் பெற்று அவர்களுடைய பங்கையும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக அழகப் பெருமாள் சிறப்புற குறிப்பிடத் தக்கவர் ஏனென்றால் இறுதி காட்சியில் அவருக்கு ஏற்படும் நிலை தயாரிப்பாளர்களின் அவல நிலை கண்முன்னே தெரிகிறது.

கலை இயக்குநர் பி.பி.சரவணன் தத்ரூபமாக போட்ட பல செட்டுகள், பி ராஜசேகரின் ஒளிப்பதிவு, விகாஸ் பின்னணி இசையும் கதையுடன் பயணிக்க வைத்து விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

இயக்குனர் அறிவழகன் மற்றும் அவரது குழுவினர் திருட்டு உலகத்தைப் பற்றி சில திடமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் தொடரின் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்து க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்றவாறு தமிழ்ராக்கர்ஸை மனோஜ் குமார் கலைவாணன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத் எழுதிய எட்டு எபிசோடுகள் கொண்ட தொடர்களை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன்.

மொத்தத்தில் ஓடிடி ரசிகர்களை தமிழ் ராக்கர்ஸ் கவரும்