செங்களம் வெப் தொடர் விமர்சனம்:  அரசியல் சதுரங்க ஆட்டத்தை அடித்தளமாக அமைத்து த்ரில்லிங் அனுபவத்தை தந்து அசத்துகிறது | ரேட்டிங்: 3/5

0
461

செங்களம் வெப் தொடர் விமர்சனம்:  அரசியல் சதுரங்க ஆட்டத்தை அடித்தளமாக அமைத்து த்ரில்லிங் அனுபவத்தை தந்து அசத்துகிறது | ரேட்டிங்: 3/5

அபினேஷ் இளங்கோவன் தயாhரித்து அபி அண்ட் அபி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் வெளிவந்திருக்கும் செங்களம் வெப் தொடரை எழுதி எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கியுள்ளார்.

இதில் வாணி போஜன், கலையரசன், வேலா ராமமூர்த்தி, மானசா ராதாகிருஷ்ணன், விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், ஷரத் லோஹிதாஷ்வா, பிரேம், டேனியல் அனி போப், லகுபரன், கஜராஜ், அர்ஜய், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் ஆகியோர் இந்தத் தொடரில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இணை தயாரிப்பாளர் – இர்பான் மாலிக், இசை: தரன்,எடிட்டிங்: பிஜு. வி. டான் போஸ்கோ, ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன், மக்கள் தொடர்பு : சதீஷ் – சதீஷ் குமார் – சிவா (எய்ம்).

ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட தொடரானது. ஒவ்வொரு அத்தியாயமும் அன்று, இன்று என்ற இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. செங்களத்தின் சதி ஆரம்பத்தில் சிவஞானத்தை (ஷரத் லோஹிஸ்தாஷ்வா) சுற்றி வருகிறது, அவருடைய குடும்பம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விருது நகர் மாவட்ட நிர்வாகத்தில் தலைவர் பதவியை வகிக்கிறது. சிவஞானத்திற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மூத்த மகன் ராஜமாணிக்கம் (பவன்) ஒரு சாதுரியமான அரசியல்வாதிகாக இருந்து தற்போது விருதுநகர் தலைவர் பதவியில் செல்வாக்குடன் இருக்கிறார். அவரது இளைய மகன் நடேசன் (பிரேம்) அரசியலில் ஆர்வம் காட்டாமல் வியாபாரத்தில் ஆர்வம் கொண்டவர். அதே சமயம் ராஜமாணிக்கத்தின் புகழ் மற்றும் அவரது குடும்பம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியை வகித்து வருவது மாவட்ட எம்.எல்.ஏ கணேசமூர்த்திக்கு (வேல ராமமூர்த்தி) எரிச்சலைக் உண்டாக்குகிறது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வும், அவரது ஆதரவாளர்களும், ராஜமாணிக்கத்தை எப்படியாவது பதவியிலிருந்து இறக்கி,  கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வாய்ப்பை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தான் ராஜமாணிக்கம், தனது முதல் மனைவி இறந்த பிறகு, மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பணக்கார தொழிலதிபரின் மகளான சூர்யகலாவை (வாணி போஜன்) மணக்கிறார். சூர்யகலா அரசியலில் சிறிதும் விருப்பம் இல்லாமல் அர்ப்பணிப்புள்ள இல்லத்தரசியாகவும் அடக்கமான மருமகளாகவும் இருக்கிறார். ராஜமாணிக்கமும் சூர்யகலாவும் விடுமுறையில் கொடைக்கானலுக்கு செல்ல  ஒரு விபத்து ஏற்பட்டு ராஜமாணிக்கம் இறந்து விடுகிறார். சூர்யகலா காயம் அடைந்தாலும் உயிர் பிழைக்கிறார். மகனின் இறப்பால் சிவஞானம் மனம் உடைந்து போயிருந்தாலும், தலைவர் பதவியை நீண்ட காலமாக காலியாக இருக்க அனுமதிக்க முடியாது என்பதையும் அறிந்து தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மகன் நடேசனா, அவரது திருமணமான மகள் மரகதமா (பூஜா வைத்தியநாதன்) அல்லது அவரது மருமகள் சூர்யகலாவா? என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திலும் குழப்பத்திலும் இருக்கிறார். இந்த சமயத்தில் சூர்யகலாவிற்கு அரசியல் பற்றி தெரிந்த கொள்வதற்கு தன் தோழி நாச்சியார் (ஷாலி நிவேகாஸ்)வரவழைக்கிறார். நாச்சியார் சிவஞானத்திடம் சூர்யகலாவிற்கு அரசியலில் வர ஆசை இருப்பதை தெரிவிக்க, இதைக் கேட்டு சிவஞானம் அதிர்ச்சியாகிறார். உள்@ர் மற்றும் மாநில அளவிலான அரசியல்வாதிகளின் எதிர்ப்பை எதிர்கொண்டு இந்த இரண்டு பெண்களும் வெற்றி பெற்றார்களா? அதன் பின் என்ன நடந்தது? இரண்டாவது பகுதியில் ராயர் யார்? அவரது இரண்டு சகோதரர்களை போலீசார் ஏன் தேடுகிறார்கள்?  நாச்சியாரின் பின்பலம் என்ன? அரசியல் அதிகார ஆட்டத்தில் இறுதிக் கட்டுப்பாட்டைப் பெற்று ஆட்சிக்கு வருபவர் யார் என்பதை விறுவிறுப்பான 9 அத்தியாயங்கள் கொண்ட செங்களம் வெப் தொடரின் க்ளைமேக்ஸ் விடை சொல்கிறது.

வாணி போஜன் சூரியகலாவாக அரசியல் ஞானம் இல்லாவிட்டாலும் அதை தெரிந்து கொள்ள எடுக்கும் முயற்சிகளில் கவனிக்க வைக்கிறார். ஒரு பணிவான, கீழ்ப்படிதலுள்ள, எளிமையான மருமகளாக இருந்து, லட்சியம், அதிகார ஆசையால் மாறும் பெண்ணாகிறார். அழகு மட்டுமல்ல பெண்கள் தங்கள் வசம் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் அனுதாபத்தை வைத்து அரசியலில் தங்களுக்குச் சாதகமாக எப்படி ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் முதன்மையான கதாபாத்திரத்தில் சாமர்த்தியசாலியாக முன்;னின்று தான் எண்ணியதை அடைய எடுக்கும் முடிவுகளில் தனித்துவமாக நிற்கிறார்.

ராயர் வேடத்தில் கலையரசன்,  தைரியமான, வலிமையான மற்றும் தெளிவான சிந்தனையுடன் சமமான  நடிப்பை வழங்கி ஒரு நடிகராக ஒரு அற்புதமான வேலையைச் செய்வது முற்றிலும்; மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.

அறிமுக நடிகையான ஷாலி நிவேகாஸ் நாச்சியாராக ஒரு சக்திவாய்ந்த மற்றும் உறுதியான நடிப்பை வழங்கி அந்தத் தொடரின் மையக் கதாப்பாத்திரமாக திகழ்ந்து நெருங்கிய நம்பிக்கைக்குரியவளாக ஷாலியின் அப்பாவி மற்றும் பாரம்பரிய தோற்றம் அவரது நவீன மற்றும் உலகளாவிய தெளிவான சிந்தனைக்கு முற்றிலும் மாறுபட்டு போடும் திட்டங்கள்; அதிர்ச்சி கொடுத்தாலும் வெறுப்பு ஏற்பட்டாலும் புத்திசாலித்தனத்தால் மனதை கவர்கிறார்.

குடும்ப அரசியல் கை விட்டு போகக்கூடாது என்று துடிக்கும் சிவஞானமாக ஷரத் லோஹிஸ்தாஷ்வா, வேலாயியாக விஜி சந்திரசேகர், நாச்சியாராக ஷாலி நிவேகாஸ், மதியரசியாக மானஷா ராதா கிருஷ்ணன், கணேசமூர்த்தி எம்எல்ஏவாக வேல ராமமூர்த்தி,எம்.எல்.ஏ தனிப்பட்ட உதவியாளராக பக்ஸ்,ரவி செல்லப்பாவாக முத்துக்குமார்,வீராவாக டேனியல் அன்னி போப்,ஜெயராஜ் வேடத்தில் அர்ஜி, ராஜமாணிக்கமாக பவன்,நடேசனாக பிரேம்,செந்தமிழனாக கஜராஜ்,மரகதமாக பூஜா வைத்தியநாதன் என்று செங்களத்தில் நடிகர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உணர்;ந்து கச்சிதமாக அளவாக திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

செட்டிநாட்டின் வாசனைகள் பேச்சுவழக்கில் சுழல்கின்றன, பழங்கால வீடுகள், குக்கிராமங்கள் வழியாக வளைந்த பாதைகள் மற்றும் பரந்த மற்றும் வறண்ட காடுகளின் எல்லைகள் ஒளிப்பதிவாளர் வெற்றிவேலின் காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் அழகாகவும் துடிப்பாகவும் உள்ளன.

தரனின் இசை மிகச் சரியாக த்ரில்லருக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்த்து கதையில் ஈடுபாடோடு வைக்கிறது. குறைந்த பட்சம் சொல்லும்படியாக பின்னணி இசையையும் கொடுத்திருக்கிறார்.

செங்களம் வெப் தொடர்  9 அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் 30-40 நிமிடம். வெப் தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் கண்டு களிக்கலாம். இந்த தொடரில் , பெண்களை ஆண்களின் கைகளில் வெறும் பொம்மைகளாகக் காட்டவில்லை. மாறாக அவர்கள் எப்படி திறமையான அரசியல்வாதிகள் என்பதை சித்தரிக்கிறது. ஆண்களைப் போலவே பெண்களும் லட்சியம் கொண்டவர்கள் என்ற உண்மையை இது எடுத்துக்காட்டுகிறது. முதலாவதாக, அரசியல் குடும்பங்களில் பெண்கள் பாதிக்கப்படுவதில்லை என்பதும் அரசியலில் விசுவாசம் என்பது தனிப்பட்ட நோக்கத்திற்கு மட்டுமே அரசியல் அதிகாரம் என்பது ஆற்றல் போன்றது அதை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது, ஒரு அரசியல் தலைவரிடமிருந்து இன்னொருவருக்கு மட்டுமே மாற்ற முடியும். ஆரம்ப அத்தியாயங்கள் கதாபாத்திரங்களை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துகின்றன, மேலும் கதை விளக்கத்தால் மெதுவாக நகர்வது போல்  தோன்றினாலும் இறுதியில் சில அத்தியாயத்திற்குப் முன் சூரியகலா உச்சிக்கு வியூகம் வகுக்கும் போது செங்களம் வேகம் பெறுகிறது. வர்க்கம் மற்றும் சாதியின் தாக்கம் இல்லாமல் அரசியல் இருக்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, மேலும் செங்களம் இந்த கோணங்களை நுட்பமாக கொண்டு அப்பாவி தனிநபர்கள் எவ்வாறு அடிக்கடி வஞ்சக சதிகளின் குறுக்குவெட்டில் சிக்குகிறார்கள் என்பதை ஆராய்ந்து பதிவிடப்பட்டிருக்கிறது. காட்சிகளின் கலவை குறித்து சிந்தனையை இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் தனது மனதில் எப்படி காட்சிப்படுத்துகிறாரோ அதை இந்த வெப் தொடரில் சிறப்பாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்கிறார். முன்பு தமிழக அரசியலில் கண்ட நட்பும் பகைமையையும் மையமாக வைத்து இந்த வெப் தொடரை கொடுத்துள்ளார். இரு வேறு திசைகளில் பயணிக்கும் தொடர் இறுதியில் ஒரே புள்ளியில் வந்து முடித்துள்ளார் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன்.

மொத்தத்தில் அபினேஷ் இளங்கோவன் சார்பில் அபி அண்ட் அபி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் இர்பான் மாலிக் இணைந்து தயாரித்து ஜீ5ல் வெளிவந்துள்ள 9 அத்தியாயங்கள் கொண்ட செங்களம் வெப் தொடர் அரசியல் சதுரங்க ஆட்டத்தை அடித்தளமாக அமைத்து த்ரில்லிங் அனுபவத்தை தந்து அசத்துகிறது.