காஃபி வித் காதல் விமர்சனம் : காஃபி வித் காதல் அவசரமில்லாமல் நிதானமாக ஆரஅமர பருகலாம்  | ரேட்டிங்: 3/5

0
210

காஃபி வித் காதல் விமர்சனம் : காஃபி வித் காதல் அவசரமில்லாமல் நிதானமாக ஆரஅமர பருகலாம்  | ரேட்டிங்: 3/5

அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண் குமார் தயாரித்திருக்கும் காஃபி வித் காதல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.

இதில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி (டிடி), சம்யுக்தா ஷண்முகம், ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:- இசை – யுவன் ஷங்கர் ராஜாஇ ஒளிப்பதிவு- கிருஷ்ணசாமிஇ வரிகள் செல்வபாரதி குமாரசாமிஇ படத்தொகுப்பு -ஃபென்னி ஆலிவர்இ சண்டை பயிற்சி -தளபதி தினேஷ்இ கலை -குருராஜ், நடனம் -ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி, தீனாஇ நிர்வாக தயாரிப்பு- பால கோபி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே. அஹ்மத்

பிரதாப் போத்தனுக்கு மூன்று மகன்கள் ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் மற்றும் ஒரு மகள் நிறைமாத கர்ப்பிணி டிடி. ஸ்ரீகாந்திற்கு மனைவி சம்யுக்தா மற்றும் ஒரு மகள் உண்டு. இவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாததால் ரைசாவை விரும்பி ஊர் சுற்றுகிறார். ரைசாவோ நாகரீக யுவதி என்பதால் ஸ்ரீகாந்தை கழட்டி விட்டு விட்டு ஜீவாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார். ஜீவாவோ தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா தத்தாவின் நினைவில் வேண்டா வெறுப்பாக ரைசா வில்சனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். அதே சமயம் ஊட்டியில் இருக்கும் ஒரு இடத்தை வாங்க நினைக்கும் ஜெய்யிற்கு அந்த நிலத்தின் உரிமையாளரின் மகள் மாளவிகா சர்மாவை திருமணம் செய்து கொண்டால் கிடைக்கும் என்ற ஆசையில் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.இருந்தாலும் ஜெய்யிற்கு தன்னுடைய நீண்ட கால தோழி அம்ரிதா மீது காதல் இருக்கிறது. ஜெய்யுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாளவிகா சர்மாவோ ஜீவாவை காதலிக்கிறார். இப்படி ஒருவருக்கு ஒருவர் தங்கள் நினைப்பை வேறொவர் மீது வைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க இறுதியில் யாருடைய காதல் வெற்றி பெற்றது? யாருடைய காதல் பிரிந்தது? அனைவருமே தங்களை விரும்புபவர்களை திருமணம் செய்து கொண்டார்களா? என்பதே க்ளைமேக்ஸ்.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி (டிடி), சம்யுக்தா ஷண்முகம், ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி என்று அனைவருமே தங்கள் பாத்திரங்களை உணர்ந்து குழப்பமில்லாமல் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம்.

ஊட்டியின் அழகையும், வீட்டின் அமைப்பையும் சிறப்பாக படம் பிடித்து காட்சிக்கோணங்களில் ரிச் லுக்கை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி.

படத்தொகுப்பு -ஃபென்னி ஆலிவர், சண்டை பயிற்சி -தளபதி தினேஷ், கலை -குருராஜ் ஆகியோரின் பங்கு படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களின் திருமணத்தில் ஏற்படும் குழப்பங்களை ராம் காம் பாணியில் கொடுக்க நினைத்த இயக்குனர் அதை இன்னும் சுவாரஸ்யத்தோடு கொடுத்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.இடையிடையே பஞ்ச் வசனங்கள் மட்டும் கவனத்தை ஈர்க்கின்றது. இதில் பலவித குணாதியங்களை கொண்ட தொகுப்பாக அவரவர் தங்கள் வாழ்க்கையில் கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்குவதும், கிடைத்த ஒன்றை வைத்து வாழ நினைக்காமல் தவறவிடுவதும் என்று பல கோணங்களில் கதை தாறுமாறாக சென்று பின்னர் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து சுபமாக முடித்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.

மொத்தத்தில் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண் குமார் தயாரித்திருக்கும் காஃபி வித் காதல் அவசரமில்லாமல் நிதானமாக ஆரஅமர பருகலாம்.