எண்ணித் துணிக விமர்சனம் : எண்ணித் துணிக பழி வாங்கும் ஆக்ஷன் களம் | ரேட்டிங்: 2.5/5

0
176

எண்ணித் துணிக விமர்சனம் : எண்ணித் துணிக பழி வாங்கும் ஆக்ஷன் களம் | ரேட்டிங்: 2.5/5

ரெயின் ஆஃப் எரோஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதி தயாரித்து க்ரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் வழங்க படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.கே.வெற்றிச் செல்வன்.

இதில் ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணாh, வித்யா பிரதீப் சுனில் ஷெட்டி, சாம் சுரேஷ், சரண்யா ரவி நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – சாம் சிஎஸ், ஒளிப்பதிவு -தினேஷ் குமார் , படத் தொகுப்பு -சாபு ஜோசப், சண்டை- முருகன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா.

சுரேஷ் சுப்ரமணியம் சர்வதேச கொள்ளைக் கும்பல் தலைவனாக இருந்து அமெரிக்காவில் இருந்து செயல்படுகிறார். அங்கிருக்கும் 2000 கோடி மதிப்புள்ள வைரத்தை வாங்கி வரும் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் தான் பினாமியாக நடத்தும் நகைக்கடையில் வைத்திருக்கிறார். இதனை கேள்விப்படும் சுரேஷ் சுப்ரமணியம் தமிழகத்தில் மதன் (வம்சி கிருஷ்ணா) மூலம் அதனை நகைக்கடையிலிருந்து கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார். கொள்ளை நடக்கும் நாளன்று, காதலர்களான கதிரும் (ஜெய்) நர்மதாவும் (அதுல்யா ரவி) தங்கள் திருமணத்துக்கு நகை வாங்க அமைச்சரின் நகைக்கடைக்கு வருகின்றனர். அந்த நகைக்கடையில் நகையை மகளின் வைத்திய செலவிற்காக அடகு வைக்க வரும் ஒரு கணவன், மனைவியும் அடங்குவர். அப்போது நடக்கும் தாக்குதலில் நர்மதா மற்றும் அந்தக் கணவர் உயிரிழக்க, அந்தப் பெண்ணும் கதிரும் நிலைகுலைகின்றனர். குழந்தையை காப்பாற்ற போராடும் பெண், காதலியை பறிகொடுக்கும் கதிர் இருவரும் என்ன செய்தனர்? கொள்ளையர்களை பிடிக்க முடியாமல்  திணரும் காவல்துறையை மீறி கதிர் அந்தக்கொள்ளை கும்பலை எப்படி கண்டுபிடித்து பழி வாங்கினார்?என்பது ‘எண்ணித் துணிக’ படத்தின் கதை.

காதலியை கொன்றவர்களை கண்டுபிடித்து பழி தீர்க்கும் ஆக்ஷன் களத்தில் ஜெய், சமூக சேவகி போராளி, காதலியாக அதுல்யா ரவி, குழந்தையின் நலனுக்குகாக போராடும் தாயாக அஞ்சலி நாயர், ஸ்டைல், ஆக்ஷன்,மிரட்டல் வில்லன் வம்சி கிருஷ்ணாh, அமைச்சரை ஏமாற்றும் காதலியாக வித்யா பிரதீப், அமைச்சராக சுனில் ஷெட்டி, முதல் காட்சியிலும், இறுதிக் காட்சியிலும் வந்து போகும் சர்வதேச கொள்ளையானாக தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியம், சாம் சுரேஷ், சரண்யா ரவி ஆகியோர் படத்திற்கான பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

இசை – சாம் சிஎஸ், ஒளிப்பதிவு -தினேஷ் குமார் , படத் தொகுப்பு -சாபு ஜோசப், சண்டை- முருகன் ஆகியோர் படத்தின் நம்பகத்தன்மையை குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

கொள்ளை சம்பவத்தையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு, பழி வாங்க புறப்படும் காதலன் என்று திரைக்கதைமைத்து இயக்;கியுள்ளார் எஸ்.கே.வெற்றிச் செல்வன். ஆரம்ப காட்சியில் வித்தியாசமாக தொடங்க அதன் பின் எப்பொழுதும் போல கொள்ளை, கொலை, சண்டை என்று எதிர்பார்த்த சம்பவங்களால் படத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது. பல திருப்பங்கள் இருந்தாலும் சரியாக பயன்படுத்த தவற விட்டதாக நினைக்க தோன்றுகிறது. இயக்குனர் எஸ்.கே.வெற்றிச் செல்வன் திரைக்கதையில் இன்னும் அழுத்தம் கொடுத்து இயக்கியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் ரெயின் ஆஃப் எரோஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரித்திருக்கும் எண்ணித் துணிக பழி வாங்கும் ஆக்ஷன் களம்.