லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் விமர்சனம் : லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் மர்மங்கள் நிறைந்த கண்ணமூச்சி ஆட்டத்தில் நடக்கும் சதுரங்க வேட்டை | ரேட்டிங்: 3/5

0
226

லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் விமர்சனம் : லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் மர்மங்கள் நிறைந்த கண்ணமூச்சி ஆட்டத்தில் நடக்கும் சதுரங்க வேட்டை | ரேட்டிங்: 3/5

லேசி கேட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அனுப் காலித் தயாரிப்பில் லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுனிஷ்குமார்.

இதில் பரத், அனூப் காலித், விவியா சந்த், அடில் இப்ராஹிம்,அனு மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-கைலாஷ் மேனன், ஒளிப்பதிவு-சினு சித்தார்த், எடிட்டிங்-பிரவீன் பிரபாகர், சண்டை-தினேஷ் காசி, ஒலி வடிவமைப்பு-அருண் ராமவர்மா, லைன் புரொட்யுசர்-சக்திவேல் கல்யாணி, பிஆர்ஒ-குமரேசன்.

தனி பங்களாவில் ஒரு சிறுமி மட்டும் தனியே மாடியில் படித்துக் கொண்டிருக்க, திடீரென்று மின்சாரம் நின்று போகிறது. அந்த சமயத்தில் ஆறு பேர் கொண்டஒரு திருட்டு கும்பல் உள்ளே நுழைகிறது. இவர்களின் சத்தத்தை கேட்டு வெளியே வரும் சிறுமி, அவர்களை தன் செல்போனில் படம் எடுப்பதை பார்த்து, அவளை துரத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து சுட்டுக் கொன்று விடுகின்றனர்.அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை கொள்ளையடித்து விட்டு வெடி வைத்து தகர்த்து சென்று விடுகின்றனர். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு கேரளாவில் இருக்கும் ஒரு வீட்டில் கோடிக்கணக்கான பணம் இருப்பதாதகவும், கொள்ளையடித்து விட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்று தகவல் கிடைக்க அதே குழு பெரிய திருட்டைத் திட்டமிடுகிறது. அந்த பங்களாவிற்குள் இருக்கும் பழைய லாக்கர் தங்களுடைய பணப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் என்று நம்பி கொள்ளையடிப்பதற்காக குழு உள்ளே நுழையும் போது, அங்கே பார்வையற்ற பரத் இருப்பதை பார்க்கின்றனர். பரத்திற்கு தெரியாமல் திருட்டை நடத்த லாக்கர் அறைக்கு செல்கின்றனர்.திருடர்களால் பரத்தை மீறி பணத்தை கொள்ளையடிக்க முடிந்ததா? யார் இந்த பார்வையற்றவா?;, அவர் ஏன் கோபப்படுகிறார்? சில மாதங்களுக்கு முன் நடந்த திருட்டு சம்பவத்திற்கும் பரத்திற்கும் என்ன சம்பந்தம்? பரத்திற்கு உதவும் மறைமுக நபர் யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் பார்வையற்றவராக பரத் கட்டுக்கோப்பான உடல் கட்டுடன், எதிரிகளை தைரியமாகவும், தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகள் யதார்த்தமாகவும் மற்றும் படத்தின் முக்கிய காட்சிகளில் இடையூறு இல்லாமல் நம்பகத்தன்மையோடு காட்சிப்படுத்தி நடித்துள்ளார் பரத்.

படம் முழுவதும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவியா சந்த் திருடர்களில் ஒருவராக அவரது நடிப்பு மிகவும் சுவாரஸ்யமாகவும்,குறிப்பாக, அவர் தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தும் காட்சி கவனிக்க வேண்டிய ஒன்று.

மற்ற நடிகர்களான அடில் இப்ராஹிம், அனு மோகன், அனூப் காலித் ஆகியோர் கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு தங்களால் இயன்றதை செய்துள்ளனர்.

சினு சித்தார்த்தின் காட்சிகள் நேர்த்தியாக உள்ளன. இரு தரப்பிற்கும் நடக்கும் ஆபத்தான கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடப்படும் ஒரு இருண்ட பூட்டிய வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பார்வையாளர்களுக்குத் தெரிவிக்க ஒளிப்பதிவாளர் காட்சிக் கோணங்களை சுவாரஸ்யமாக அமைத்துள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாக, படத்தின் எடிட்டர் பிரவீன் பிரபாகர் ஒரு அழகான இறுக்கமான எடிட்டிங் உங்களை கணிசமான நேரம்; இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும்.

கைலாஷ் மேனனின் பின்னணி இசை இந்த த்ரில்லருக்கு மிகவும் பொருத்தமான இசை மனநிலையை வலியுறுத்தி படம் வழங்கும் சிலிர்ப்பை அதிகரிக்கிறது.

டோன்ட் பிரீத் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலுடன் சில பல மாற்றங்கள் செய்து முதல் பாதியில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவம் அதன் பின் முற்றிலும் மாறுபட்ட கோணங்களில் காட்சிகளை அமைத்து இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் ஆறு மணி நேரத்தில் திருட்டை நடத்த எடுக்கும் முயற்சிகள் முழுவதும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனர் சுனிஷ் குமாருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் லேசி கேட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரிப்பில் லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் மர்மங்கள் நிறைந்த கண்ணமூச்சி ஆட்டத்தில் நடக்கும் சதுரங்க வேட்டை.