சமூக அவலங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தீர்வும் சொல்லும் ‘வா பகண்டையா’

0
173

சமூக அவலங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தீர்வும் சொல்லும்

‘வா பகண்டையா’

புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் ஹீரோவாகவும், நிழன் வில்லனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில், ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி ராம் இன்னொரு வில்லனாக நடிக்கிறார்.

இவர்களோடு ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ நிதிஷ் வீரா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், மனோபாலா, ‘காதல்’ சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளது என்பதும், அவை அவரது கடைசிப் பாடல்கள் என்பதும் முக்கியச் செய்தி!

உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து கதை – திரைக்கதை – வசனம் எழுதி, இயக்கி, தனது ‘ஒளி ரெவிலேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார் ப.ஜெயகுமார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டால், ”பெண்கள் மீதான பாலியல் வன்முறை, ஆணவக் கொலை, சாதி – இன மோதலைத் தூண்டி மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சின்னு நம்மைச் சூழ்ந்திருக்கிற சமூக அவலங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, அதுக்கெல்லாம் தீர்வு என்னன்னு அலசிருக்கேன்” என்கிறார்.

எஸ்.ஏ. ராஜ்குமார் பாடல்களை எழுதி, இசையமைத்துள்ள இந்த படத்துக்கு, ஆரி ஆர்.ஜே.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். சிவசங்கர், அக்‌ஷை ஆனந்த், விஜி ஆகியோர் நடனம் அமைக்க, இடி மின்னல் இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

வா பகண்டையா இசை வெளியீட்டு விழா முடிந்த நிலையில் விரைவில் வெளியாகவுள்ளது.