பழம்பெரும் நடிகை ராஜ சுலோச்சனாவின் 10வது நினைவுத்தினத்தை ஒட்டி ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பாடல்கள் பாடி அஞ்சலி செலுத்தினர்

0
219

சென்னை மயிலாப்பூரில் பழம்பெரும் நடிகை ராஜ சுலோச்சனாவின் 10வது நினைவுத்தினத்தை ஒட்டி ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பாடல்கள் பாடி அஞ்சலி செலுத்தினர். 

 என்ஜிஎல் அறக்கட்டளை மற்றும் சூர்யா ஸ்கூல் ஆஃப் மியூசிக் ஆகியோர் இணைந்து மயிலாப்பூரில் உள்ள ஏ எம் எஸ் மகிளா வித்யாலயாவில் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், பிரபல பின்னணி பாடகி எல்.ஆர் ஈஸ்வரி மற்றும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 சூர்யா ஸ்கூல் ஆஃப் மியூசிக்கின் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு திரையுலக முன்னோடி டி.ஆர். மகாலிங்கத்தின் பேத்தி  பிரபா குருமூர்த்தி பயிற்சியளித்து பாடல்களை பாடச் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் கலந்து கொண்டு கலைமாமணி ராஜ சுலோச்சனாவிற்கு  அஞ்சலி செலுத்தினர். இசை, நடனம், கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் பணிகளை மேம்படுத்துவதற்காக 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட NGL அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீமதி தேவி கிருஷ்ணா இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.