வீரபாண்டியபுரம் விமர்சனம்: வீரபாண்டியபுரம் கிராமத்து அடிதடி கலாட்டாவை ஒரு முறை பார்க்கலாம்

0
340

வீரபாண்டியபுரம் விமர்சனம் : வீரபாண்டியபுரம் கிராமத்து அடிதடி கலாட்டாவை ஒரு முறை பார்க்கலாம்

லென்டி ஸ்டுடியோ சார்பில் வீரபாண்டியபுரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுசீந்திரன்.
இதில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், அகன்ஷா சிங், பாலசரவணன், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட், சரத் லோகிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜெய், ஒளிப்பதிவு-வேல்ராஜ், மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா, ரேகா
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்கும் இடையே அரசியல் தகராறும் தீராத பகையும் எப்போழுதும் இருந்து வருகிறது. வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த சரத் லோகிதாசஸின் மகள் மீனாட்சிக்கும் அனாதையான ஜெய்க்கும் காதல் ஏற்பட, திருமணம் வரை சென்றாலும் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் திருமணம் நடைபெறக்கூடாது என்று மனம் மாற நின்று விடுகிறது. பிறகு ஜெய்,மீனாட்சியின் தந்தை சரத்திடம் உண்மையைச் சொல்லி சம்மதம் வாங்க முற்படுகிறார்.இதனிடையே நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் குடும்பத்திற்கும் ஏற்கனவே தீராத பகை இருந்து வருவதால் சரத்தையும் அவரது தம்பிகளையும் கொல்ல தருணம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு குடும்பத்துக்கும் உள்ள பகையால் ஜெய்யின் திருமணம் நடந்ததா? பகைக்கான காரணம் என்ன? சமரசம் ஆனதா? அடிதடியில் முடிந்ததா? என்பதே மீதிக்கதை.
சிவாவாக ஜெய் கிராமத்து இளைஞராக சண்டை காட்சிகளில் அதிக கவனம் செலுத்தி முடிந்தவரை ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகாக வளைய வந்தும், அகன்ஷா சிங் கொடுத்த வேலையை சிறப்பாக செய்தும் இருவரும் சமமாக நடித்துள்ளனர்.
காமெடி என்ற பெயரில் சில இடங்களில் சிரிக்க வைத்துள்ளார் பாலசரவணன். வில்லனாக சரத் லோகிதாஸ், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பு சிறப்பு.
இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கும நடிகர் ஜெய் ஒரு பாடலில் சிறப்பாக செய்து, பின்னணி இசையில் இயல்பாக கொடுத்துள்ளார்.
கிராமத்து அழகையும், சண்டை சச்சரவுகளையும், பகையையும் எப்போழுதும் போல் தன் காமிரா கோணங்களால் சிறப்பாக படம் பிடித்துள்ளார் வேல்ராஜ்.
பழிவாங்கும் கிராமத்து பகையை பல படங்களில் பார்த்திருப்பதை திரும்பவும் நினைவுபடுத்தி இன்னொரு திரைக்கதையில் தன் பாணியில் ஆக்ஷன் கலந்த காதல் கதையுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
மொத்தத்தில் லென்டி ஸ்டுடியோ சார்பில் வீரபாண்டியபுரம் கிராமத்து அடிதடி கலாட்டாவை ஒரு முறை பார்க்கலாம்.