வதந்திகளை நம்ப வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன்

0
170

வதந்திகளை நம்ப வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன்

சென்னை, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவர் குறித்த பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

இதுகுறித்து விளக்கும் அளிக்கும் வகையில் தற்போது பவர்ஸ்டார் சீனிவாசன் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அந்த பேட்டியில், ஏற்கெனவே, சர்க்கரை நோய் உள்ள நிலையில், முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

இணையதளத்தில் நான் இறந்துவிட்டதாக கூறி பொய்த் தகவல்களை பரப்பி வருகின்றனர், இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் உயிருடன் தான் இருக்கிறேன் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பவர்ஸ்டார் சீனிவாசன் கூறினார்.

மேலும் அவர், சினிமாதான் என்னுடைய வாழ்க்கை, உயிர் எல்லாமே. தற்போது ஓய்வில் இருக்கிறேன் விரைவில் திரும்பவும் நடிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.