ரஜினிக்குப் பிறகு, நான் அதிகம் ரசிக்கும் நடிகர் தனுஷ் – மனம் திறந்து பேசிய சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன்

0
192

ரஜினிக்குப் பிறகு, நான் அதிகம் ரசிக்கும் நடிகர் தனுஷ் – மனம் திறந்து பேசிய சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன்

கேப்டன் மில்லர் படத்தைப் பற்றி எல்லோரும் நிறையச் சொல்லி விட்டார்கள். என்னுடைய சினிமா ஜர்னியில் நான் அட்மையர் பண்ணியது என்றால் ரஜினி சார் தான். அவருடன் 5 படங்கள் செய்தோம், அதற்குப் பிறகு, நான் அதிகம் ரசிக்கும் நடிகர் தனுஷ். அவருடன் 3 படங்கள் செய்துவிட்டோம், இன்னும் பயணம் தொடர்கிறது. அருண் பற்றி முதலில் என் மகன் தான் சொன்னார். அவர் படம் ராக்கி பார்த்தேன், என்னைப் பிரமிக்க வைத்தது. பாரதிராஜா சாரை சந்தித்தபோது, அருண் மிகப்பெரிய திறமைசாலி என்றார். அந்த நம்பிக்கையில் தான் தனுஷ் சாரை அணுகினோம். அருண் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தைத் தந்துள்ளார். எங்கள் நிறுவனத்திலிருந்து பொங்கலுக்கு வந்த, விஸ்வாசம் படம் போல, இப்படமும் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். தனுஷ் சார் மிகக்கடின உழைப்பைத் தந்துள்ளார். சிவராஜ்குமார், சந்தீப், பிரியா அனைவருக்கும் நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

ALSO READ:

கேப்டன் மில்லர் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்
https://kalaipoonga.net/news/கேப்டன்-மில்லர்-உங்கள்-எ

அசுரத்தனமான உழைப்பை, அனைவரும் தந்து உருவாக்கிய படம் ‘கேப்டன் மில்லர்’ – தனுஷ் ஓப்பன் டாக்!
https://kalaipoonga.net/cinema/அசுரத்தனமான-உழைப்பை-அனை/

‘கேப்டன் மில்லர்’ ஒரு புதிய அனுபவமாக இருக்கும் – ஜீவி பிரகாஷ்
https://kalaipoonga.net/cinema/கேப்டன்-மில்லர்-ஒரு-புதி/