ரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: திரைப்பிரபலங்கள் வாழ்த்து! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0
388

ரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: திரைப்பிரபலங்கள் வாழ்த்து! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காமன் டிபியை மோகன்லால், ஏ.ஆர்.ரஹ்மான், பிருத்வி ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். சினிமாத் துறையில் அவர் கால் பதித்து 45 ஆண்டுகள் நிறைவடைவதால், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் #45YearsOfRAJINISM எனும் ஹேஷ்டேக்கில் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படமான அபூர்வ ராகங்கள் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீவித்யா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெளியாகி 45 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் சினிமாவுக்குள் வந்து 45 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக உருவாக்கப்பட்ட காமன் டிபியை பிரபல மலையாள டாப் நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன்லால்,  கலைப்புலி எஸ்.தாணு, ஏ.ஆர்.ரஹ்மான், பிருத்விராஜ், கார்த்திக் சுப்ராஜ், லாரன்ஸ் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அதனையடுத்து, ரஜினிகாந்த் ரசிகர்கள், #45YearsOfRajinismCDP என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றி என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.