முன்னா விமர்சனம்

0
634

முன்னா விமர்சனம்

ஸ்ரீதில்லை ஈசன் பிச்சர்ஸ் சார்பில் ராமுமுத்துச்செல்வன் தயாரித்திருக்கும் முன்னா படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கியிருக்கிறார் சங்கை குமரேசன்.

இதில் சங்கை குமரேசன் நடிக்க உடன் நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, கென்னடி, சண்முகம், வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-டி.ஏ.வசந்த், பின்னணி இசை-சுனில் லாசர், ஒளிப்பதிவு-ரவி, நடனம்-கென்னடி, எடிட்டிங்-பத்மராஜ், மக்கள் தொடர்பு – புவன்.

முன்னா(சங்கை குமரேசன்) முதுகில் சாட்டை அடித்து பிழைப்பு நடத்தும் நாடோடி சமூகத்தில் பிறந்தவர்.பெற்றோர்கள் படும் கஷ்டங்களை பார்த்து அந்த பிழைப்பை நடத்தாமல் காது குடையும் தொழிலை செய்யும் தாத்தா மூலம் வேலையை கற்றுக்கொண்டு அதை செய்கிறார். அதனால் முன்னாவின் தந்தை கோபப்பட்டு துரத்தி விடுகிறார். எப்படியாவது கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாலும் செய்யும் வேலையில் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் முன்னாவிற்கு அதிர்ஷ்டவசமாக 2 கோடி பணம் லாட்டரி சீட்டில் கிடைக்கிறது. அந்த பணத்தை வைத்துக் கொண்டு கார், பங்களா என்று வாங்கும் முன்னாவிற்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை வருகிறது. அதன் பின் நடந்தது என்ன? திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்தாரா? அல்லது பணத்தை இழந்தாரா? என்பதே மீதிக்கதை.

முன்னாவாக சங்கை குமரேசன் தன்னால் முடிந்தவரை சிறப்பாக செய்திருக்கிறார். தங்கையாக நியா கிருஷ்ணா, சங்கீதாவாக ரம்யா, அப்பாவாக ராஜு, சக்குவாக சிந்து, தண்ணிபாம்பு முருகனாக கென்னடி, சண்முகம், வெங்கட் ஆகியோர் படத்தின் பக்க மேளங்கள்.

டி.ஏ.வசந்த் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், சுனில் லாசரின் பின்னணி இசை நன்றாக உள்ளது. ரவியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஏற்றாற்போல் காட்சிக்கோணங்களை வைத்துள்ளார்.

கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள்-சங்கை குமரேசன். நாடோடி கூட்டத்திலிருந்து வெளியேறும் இளைஞர் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அதிர்ஷ்டம் இருந்தும் அதை பயன்படுத்த தெரியாமல் வழி தவறி போவதே படத்தின் கதைக்களம். கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற லட்சியம் மட்டுமே வைத்துக்கொண்டு அதற்கான முயற்சிகள் எடுக்கமால் சுற்றித் திரியும் கதாபாத்திரம் இருந்தாலும் பணம் வந்த பிறகு அதை வைத்து உபயோகமாக தொழில் செய்யாமல் ஏமாற்றுப்பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு கொலைகாரானாக மாறுவதால் படத்தில் எந்தவொரு அனுதாப தன்மையும் ஏற்படாமல் போகிறது. பணத்தை வைத்து தன் சமூகத்திற்காகவது ஏதாவது செய்ய முற்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் முன்னாவின் ஆசை நிராசையானது.