திரையுலக மார்க்கண்டேயனுக்கு இன்று வயது 80!

0
230

திரையுலக மார்க்கண்டேயனுக்கு இன்று வயது 80!

‘‘100 வயது தொட்ட மொரார்ஜி தேசாயிடம், இவ்வுலகில் நிலையானது எது என்று கேட்டார்கள். மாறுதல்கள் என்றார் அவர்.

மாறுதல்கள் தான் நிலையானது. நதியிலே ஓடும் வெள்ளத்தில் ஒரு விநாடியில் நீங்கள் பார்த்த நீர், அடுத்த வினாடி அங்கில்லை, முன்னால் போய்விடுகிறது.

40 ஆண்டு கால திரையுலகில் கிட்டத்தட்ட 200 படங்களில் 175-ல் கதாநாயகனாக நடித்தேன். அவற்றில் கதை அமைப்பு, நடிப்பு, இசை என்ற அளவில் மிகச் சிறந்த படங்கள் 20 ஆவது நிச்சயம் தேறும். நடிப்புத்துறையில் பணம்,புகழ் இரண்டிலும் நான் உச்சம் தொட்டவனில்லை. செய்யாத வேடங்களும் மிச்சம் இருக்கின்றன.

இப்போது பெரிய திரை,சின்னத்திரை நடிப்புக்கு தற்காலிக கும்பிடு போட்டு படிப்பு, எழுத்து, மேடை என்று புதுப் பயணம் துவங்கியுள்ளேன். ஓராண்டு முழுக்க ஒதுக்கிக் கற்ற கம்பராமாயணத்தை 100 பாடல் வழி 2 மணி 10 நிமிட நேரத்தில் பேசிய உரை, பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறது.

‘என் கண்ணின் மணிகளுக்கு’ உரை இன்றைய இளைய தலைமுறையை சிந்திக்க வைத்திருக்கிறது. ஆகவே புது அவதாரம் புத்துணர்ச்சி தரும் அவதாரமே.’

நான் 80 வயதை அடுத்த ஆண்டு தொடவிருக்கிறேன். என்னைவிட இளமையாக உடல் ஆரோக்கியத்திலும், முகத் தோற்றத்திலும் நிறையப் பேர் நம்மிடையே இருக்கிறார்கள். ஆனால் இன்றைய முகவசீகரத்திற்கு 1958 முதல் யோகாசனத்தோடு எனக்கு உள்ள தொடர்பும் முக்கிய காரணம் என்பதை அடித்துச் சொல்வேன். மூளை சுறுசுறுப்பாக இயங்க யோகா பெரிதும் உதவுகிறது.

40 வயதுக்குப் பிறகு சைவத்துக்கு மாறுவது நல்லது.

உடல் உழைப்பு குறையும் போது சைவ உணவு எளிதாக ஜீரணமாகும்.நோய்களைத் தவிர்க்க உதவும்.’’
– சிவகுமார் சொன்னதிலிருந்து!!