தமிழிலும் சாதனைப் படைத்து வரும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம்

0
172

தமிழிலும் சாதனைப் படைத்து வரும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம்

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி தமிழில் வெளியான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டகாவிய படைப்பான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி, விசேடமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. ‘ஆதி புருஷ்’ படத்தில் பான் இந்திய நட்சத்திர நாயகனான பிரபாஸ், சயீப் அலி கான், கிருத்தி சனோன், சன்னி சிங்,  தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனை பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியிருக்கிறார். இந்திய திரையுலக வரலாற்றில் முதன்முறையாக இப்படத்தின் முன்னோட்டம் எழுபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டது.

‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம், இராமாயணத்தை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் காணும் போது, பக்தி உணர்வும், ஆன்மீக உணர்வும் கிளர்ந்தெழுகிறது. பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நட்சத்திர நடிகர்கள் திரையில் தோன்றுவதால், இந்த பிரம்மாண்டமான படைப்பு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. அதிலும் ‘பாகுபலி’ மூலம் இன்றைய தலைமுறை தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு  அமர்ந்திருக்கும் நடிகர் பிரபாஸ் ஸ்ரீராமபிரானாக தோன்றி நடித்திருப்பது பார்வையாளர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசீகரமிக்க கதைக்கு நம்பகத் தன்மையுடன் கூடிய பிரம்மாண்டத்தை இணைத்து.. இந்திய வரலாற்றில் மறக்க இயலாத ஒரு அத்தியாயத்தை ‘ஆதி புருஷ்’ படைத்திருக்கிறது. முன்னோட்டத்தில் ‘அற வாழ்க்கை’ குறித்து ராமபிரானாக நடித்திருக்கும் பிரபாஸ் பேசும் வசனங்கள், தமிழ் ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்வையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக ‘ஆதி புருஷ்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

‘ஆதி புருஷ்’ படத்தை டி சீரீஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் மற்றும் யுவி கிரியேசன்ஸின் பிரமோத்- வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.