டி பிளாக் திரைப்பட விமர்சனம்: டி பிளாக் பல வேகதடைகளோடு பயணிக்கிறது |மதிப்பீடு: 2.5/5

0
271

டி பிளாக் திரைப்பட விமர்சனம்: டி பிளாக் பல வேகதடைகளோடு பயணிக்கிறது |மதிப்பீடு: 2.5/5

எம்.என்.எம் பிலிம்ஸ் தயாரிப்பில் டி பிளாக் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய்குமார் ராஜேந்திரன்.
இதில் அருள்நிதி, அவந்திகா, உமா ரியாஸ், ஆதித்யா கதிர், விஜய்குமார் ராஜேந்திரன், சரத் ரவி, தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, கரு.பழனியப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை: ரான் ஏதன் யோகன், ஒளிப்பதிவு: அரவிந்த் சிங், எடிட்டிங்: கணேஷ் சிவா, பிஆர்ஒ- சுரேஷ்சந்திரா, ரேகா.

வெள்ளிங்கிரி காட்டுக்குள் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் அருள்நிதி. அந்தக் கல்லூரியில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் இரவு ஏழு மணிக்கு மேல் அனைவரும் வெளியே வரக்கூடாது என்று கண்டிஷன் போடுகின்றனர் கல்லூரி நிர்வாகத்தினர்.ஹாஸ்டலில் தங்கி படிக்கும் அருள்நிதி அங்கே படிக்கும் அவந்திகாவை காதலிக்க தொடங்குகிறார். டி பிளாக்கில் பெண்கள் ஹாஸ்டலின் வெளியே முட்புதரில் கல்லூரி மாணவி ஒருவர் இரவில் இறந்து கிடக்கிறார்.கல்லூரி நிர்வாகம் சிறுத்தை அடித்து தான் இறந்தார் என்று போலீசிடம் சொல்லி  கேஸை மூடி விடுகின்றனர். அதன் பின் அருள்நிதியின் வகுப்பில் படிக்கும் தோழியும் ஒருநாள் இறந்து கிடக்க. இந்த மர்மத்தை கண்டுபிடிக்க அருள்நிதி முயல்கிறார். அங்கே மர்மமான நபரின் நடமாட்டம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த மர்ம நபர் யார்?  ஹாஸ்டலில் பெண்களை ஏன் கொல்கிறார்? என்பதே மீதிக்கதை.

கல்லூரி மாணவராக அருள்நிதி சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.காதலியாக அவந்திகா,ஹாஸ்டல் வார்டனாக உமா ரியாஸ், நண்பராக ஆதித்யா கதிர், விஜய்குமார் ராஜேந்திரன், சரத் ரவி, தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, கரு.பழனியப்பன் ஆகியோர் பக்கமேளங்களாக அவரவர் கதாபாத்திரங்களுக்கு திறம்பட செய்துள்ளனர்.

அர்விந்த்சிங்கின் ஒளிப்பதிவு தான் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. கல்லூரி அமைப்பு, சுற்றியுள்ள காடுகள், ஹாஸ்டல் காட்சிகள், மர்ம மனிதனின் பயமுறுத்தல்கள் என்று திகிலுடன் த்ரில்லுடன் கொடுத்துள்ளார்.

ரான் ஏதன் யோகனின் இசை, பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது.

கணேஷ் சிவா எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பெரும்பாலான கல்லூரி கதைகள் காதல் சம்பந்தப்பட்டவைகளாக இருக்கும், ஆனால் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சைக்கோ கில்லர் திரைக்கதையாக அமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் விஜய்குமார் ராஜேந்திரன். இதில் முதல் பாதி எதிர்பார்ப்பை இரண்டாம் பாதியில் சுவாஸ்யமாக காட்சிகளை அமைத்திருந்தால் கொஞ்சம் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் எம்.என்.எம் பிலிம்ஸ் டி பிளாக் பல வேகதடைகளோடு பயணிக்கிறது.