காதம்பரி விமர்சனம்

0
224

காதம்பரி விமர்சனம்

அரோமா ஸ்டுடியோஸ் சார்பில் காதம்பரி படத்தை தயாரித்து, நடித்து, எழுதி இயக்கியிருக்கிறார் அருள்.
இதில் அருள் (அருள்), காஷிமா ரஃபி ( லின்ஸி), அகிலா நாராயணன் (ருத்ரா), சர்ஜுன் (விக்டர்), நின்மி (ஸ்டெல்லா), பூஷிதா (அனாமிகா), மகாராஜன் (பீம்சிங்), முருகானந்தம் (போலீஸ் கேசவன்) ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இசை : ப்ரித்வி, ஒளிப்பதிவு : வி.டி.கே.உதயன், பிஆர்ஒ- அஸ்வத்.
அருள் தன் காதலி, தங்கை மற்றும் நண்பர்களுடன் ஆவணப்படம் எடுக்க காட்டுப்பகுதிக்கு செல்கின்றார். அங்கே அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாக அனைவரும் சிறு காயங்களுடன் தப்பி காட்டுப்பகுதிக்குள் இருக்கும் தனிமையான வீட்டில் அடைக்கலமடைகின்றனர்.அந்த வீட்டில் இருக்கும் வாய் பேச முடியாத பெரியவர் உதவி செய்கிறார். ஆனால் அவரின் நடவடிக்கை மட்டும் விசித்திரமாக இருக்கிறது. சந்தேகத்தின் பேரில் அனைவரும் வீட்டை சோதனை செய்ய அங்கே பெரியவரின் மகள் ஒரு பெரிய மரப் பெட்டியில் அடைக்கப்பட்டிருக்க, அவளை விடுவித்து அழைத்து வருகின்றனர்.அதன் பின் ஒருவர் பின் ஒருவராக இறக்க அதற்கு காரணம் என்ன? காதம்பரி யார்? என்பதே க்ளைமேக்ஸ்.
கதாநாயகனாக அருள், கதாநாயகியாக காஷிமா ரஃபி, தங்கையாக அகிலா நாராயணன்,அகிலாவின் காதலனாக சர்ஜுன், மற்றொரு தோழியான நின்மி ,பூஷிதா, மகாராஜன், முருகானந்தம் ஆகியோரில் சிலர் புதுமுகங்களாக இருந்தாலும் படத்தின் திகில் நிறைந்த கதைக்கேற்ப தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
ப்ரித்வி இசையும், வி.டி.கே.உதயன் ஒளிப்பதிவும் பதற்றமான காட்சிகளை தூக்கி நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.
எழுத்து, இயக்கம்:- அருள். ஆரவாரமில்லாத வீட்டிற்குள் மாட்டிக் கொள்ளும் நண்பர்கள் காதம்பரி என்ற ஆமானுஷ்ய சக்தி இவர்களை என்ன செய்தது? என்பதே படத்தின் திரைக்கதை என்றாலும் திகிலும், திரில்லும் சில இடங்களில் இருந்தாலும் சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாததால் படத்தின் விறுவிறுப்பை குறைத்து விடுகிறது. இருந்தாலும் புதுமுக இயக்குனரின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள்.
மொத்தத்தில் காதம்பரி பயமுறுத்தவில்லை.