இன்ஷா அல்லாஹ் விமர்சனம்

0
245

இன்ஷா அல்லாஹ் விமர்சனம்

நேசம் எண்டர்டெயின்;மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் சாகுல் ஹமீது தயாரித்து படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.

இதில் மோகன், மேனகா, நம்பிராஜன், பகவதி அம்மாள், அப்துல் சலாம், நரேன் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- கதை-தோப்பில் முகம்மது மீரான், பிர்தவுஸ் ராஜகுமாரன், ஒளிப்பதிவு-டி.எஸ்.பிரசன்னா, ஒலிப்பதிவு-செந்தில் குமரன் சண்முகம், கலை-இளங்குமரன், ஆடை-தக்சா அமுதன், இணைதயாரிப்பு-கோவை இப்ராஹ{ம், மக்கள் தொடர்பு-ஏய்ம் சதீஷ்.

இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடிக்காத கதாநாயகனின் பெரியப்பா, சொத்துக்களை தம்பியிடமிருந்து ஏமாற்றி பறித்து செல்வந்தராக வாழ்கிறார். இதனால் தம்பி மகனாக கதாநாயகன் குடும்பத்தை கஷ்டப்பட்டு கடன்பட்டு நடத்துகிறார். அந்த பெரியப்பா கடைசி காலத்தில் நோய்வாய்பட்டு மரண படுக்கையில் இருக்க, அவரை பார்த்து விட்டு வருமாறு அனைவரும் கதாநாயகனிடன் சொல்கின்றனர். ஆனால் கதாநாயகனோ பெரியப்பா செய்த துரோகத்தை மறக்க முடியாமல் அவரை பார்க்க செல்வதை தவிர்க்கிறார். அதே சமயம் கதாநாயகன் வீட்டை விட்டு ஒடி வரும் இந்து சமுகத்தை சேர்ந்த பணக்கார காதலியை கைபிடிக்கிறார். இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்த, ஒரு சிறு விபத்தில் மனைவியின் கர்ப்பம் கலைகிறது. அந்த சோகத்திலும், வறுமையிலும் இருவரும் இன்பமாக வாழகற்றுக்கொள்கின்றனர். இதன் கிளைக்கதையாக முதிய இஸ்லாமிய தம்பதியின் அன்பையும், அழகைப் பார்க்காமல் உள்ளத்தை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதி, இஸ்லாமிய இளைஞரை கைபிடித்து இஸ்லாமிய பெண்ணாக வாழும் ஒரு இந்துப்பெண்ணின் மகிழ்ச்சியான வாழ்க்கை, இவர்களுடன் வாழ்விற்கும், சாவிற்கும் உறுதுணையாக செல்லும் இஸ்லாமிய அறக்கட்டளைகள் என்று படம் முழுவதும் பல கதாபாத்திரங்கள் நிரம்பியிருக்க, இறுதியில் கதாநாயகன் நோய்வாய்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் தன் பெரியப்பாவை பார்க்க சென்றாரா? இல்லையா? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை சொல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இஸ்லாமிய மதத்தில் ஐந்து கடமைகளை கடைபிடித்த ஒருவரும், அதனை கடைபிடிக்காக ஒருவரும் இறந்த பிறகு சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்வதை தன் காட்சிக் கோணங்களின் மூலமே சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன். ஐந்து கடமைகளை கடைபிடித்தவர் அனைவராலும் வாழ்த்தி சொர்க்கத்திற்கு வழியனுப்பப்படுகிறார். ஆனால் ஐந்து கடமைகளை கடை பிடிக்காதவர் இறக்கும் போது துன்பப்பட்டு, இன்னல்களை அனுபவித்து நரகத்திற்கு செல்கிறார் என்பதை முதல் காட்சியிலும், இறுதிக்காட்சியிலும் சொல்லி அதனுடன் இஸ்லாமிய வாழ்வியலில் நடக்கும் சம்பவங்கள், காதல், நட்பு, கலகலப்பு, பெண்களின் சந்தோஷம், துக்கத்தையும் சரிவர கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.

முகம்மது மீரான், பிர்தவுஸ் ராஜகுமாரன் ஆகிய இருவரின் கதையை டி.எஸ்.பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய பல இடங்களில் காட்சிகள் துண்டு துண்டாக ஒன்றொடென்று தொடர்புடையதாக தெரியவில்லை என்றாலும், அதனை நாமே யூகித்து கொள்ள வேண்டும், பல முறை பார்த்தால் தான் புர்pயும் என்று சொல்லாமல் சொல்லி விட்டு செல்கிறார் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.

மொத்தத்தில் சர்வதேச பட விழாவில் கலந்து கொண்டு ஒன்பது தொழில்நுட்ப துறையில் விருதுகளை வென்று முப்பத்திரண்டு சர்வதேச படவிழாக்களில் கலந்து கொண்டு தேர்வாகியிருக்கிறது என்பது இப்படத்தின் சிறப்பம்சம்.