ஆன்லைன் ரம்மிக்குத் தடை… அவசரச் சட்டம் அரசிதழில் வெளியீடு

0
201

ஆன்லைன் ரம்மிக்குத் தடை… அவசரச் சட்டம் அரசிதழில் வெளியீடு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு கடந்த வாரம் தமிழக அரசு தடைவிதித்தது. இதற்கான அவசரச்சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்ததையடுத்து, தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இனி எங்கு ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்றாலும், சென்னை சிட்டி போலீஸ் சட்டத்திற்கு பதில் தமிழ்நாடு விளையாட்டு தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎஸ்பி பதவிக்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்றும், கணினி செல்போனில் ரம்மி, போக்கர் ஆகியவற்றை விளையாடினால் குற்றம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தடையை மீறி விளையாடுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.