ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள்.! அவதார்-2 படத்தின் டிரைலர் வெளியானது..!

0
327

ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள்.! அவதார்-2 படத்தின் டிரைலர் வெளியானது..!

‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது.

படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.

படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், அவதார் 2 டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காடுகளை தொடர்ந்து தண்ணீரை பற்றிய படமாக இந்த படம் உருவாகியுள்ளது இந்நிலையில்,’ அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படத்தின் டிரைலர்  வெளியாகியுள்ளது.

ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட இந்த டிரைலர் ரசிர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.