அடுத்த இரண்டு படம் லைக்காவிற்கு தான்.. ரஜினி..

0
196

அடுத்த இரண்டு படம் லைக்காவிற்கு தான்.. ரஜினி..

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்த இரண்டு படங்களை தற்போது உறுதி செய்துள்ளார்.

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பாக லைக்கா நிறுவனம் தலைவர் சுபாஷ்கரன், தமிழ் குமரன், பிரேம் சிவசாமி ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர். இப்படங்களின் பூஜை வரும் நவம்பர் 5-ஆம் தேதி பிரமாண்டமாக சென்னையில் நடைபெறவுள்ளது.

இத்தகவலை லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்தார்