வைரலாகும் அஜித் எழுதிய கடிதம்

0
114

வைரலாகும் அஜித் எழுதிய கடிதம்

வினோத் இயக்கி அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். சமீபத்தில் அஜித்-ஷாலினியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

அதன்பின் கேரளாவில் உள்ள கோயிலுக்கு சென்று அங்கு எடுத்துக்கொண்ட அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டது. இந்நிலையில் அஜித் தன் கைப்பட எழுதிய கடிதம் வைரலாகிறது. அந்த கடித்ததில் கேரளாவில் அஜித்துக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.