வலிமை அப்டேட் கேட்ட ரசிகருக்கு ‘குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கி சொன்ன பதில் என்ன தெரியுமா?

0
375

வலிமை அப்டேட் கேட்ட ரசிகருக்கு ‘குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கி சொன்ன பதில் என்ன தெரியுமா?

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வலிமை தொடர்பான தகவல்களை படக்குழு எப்போது வெளியிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே பிரதமர் தொடங்கி அனைவரிடமும் அப்டேட் கேட்டு சொல்லுமாறு கோரிக்கை வைத்தனர். இதைப்பார்த்த நடிகர் அஜித், சிலர் செய்து வரும் செயல்கள் தன்னை வருத்தமடைய செய்வதாகவும், அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதுவரை பொறுமை காத்திருங்கள் என்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் அப்டேட் கேட்க, எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. ஒரு வேலை எனக்கு தெரிந்தால் சொல்கிறேன் என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார்.