ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயார் – கமல்

0
39

ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயார் – கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘விக்ரம்’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க கமல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஹாட்ரிக் வெற்றிகளைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய்சேதுபதி, சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அதில் ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கமல் அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது.

கமல் கூறுகையில், ‘ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினியிடம் கூற வேண்டும். பின்னர் லோகேஷ்யிடம் கூற வேண்டும். நாங்கள் மூன்று பேரும் பேசிய பின்னரே உங்களிடம் கூற முடியும். ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போது தயார்’ என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.