மும்பையில் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு: சிம்பு வெளியிட்ட புகைப்படம்
‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியான நிலையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று மும்பையில் துவங்கியுள்ளது. தொடர்ச்சியாக 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில், புல்லட்டில் செம்ம ஸ்டைலிஷாக காலில் கறுப்பு கயிறுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிம்பு. அதேபோல, இயக்குநர் கெளதம் மேனனும் படப்பிடிப்புத்தள புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
On the sets of #VTK #VendhuThanindhathuKaadu 🎥 🎬 pic.twitter.com/3j5lB4AKq2
— Silambarasan TR (@SilambarasanTR_) February 9, 2022