முதல் முறையாக பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படும் ஒத்த செருப்பு

0
116

முதல் முறையாக பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படும் ஒத்த செருப்பு

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது. ஆஸ்காருக்கும் சென்று வந்தது. இப்படத்தின் தமிழ் மொழி வெற்றியை தொடர்ந்து நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.

இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேசிய ‘பஹாசா’ மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் பார்த்திபன் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தோனேஷியா- பஹாஸா மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ஒத்த செருப்பு திரைப்படம் பெற்றுள்ளது.