முதல் நீ முடிவும் நீ – திரைவிமர்சனம்: ‘முதல் நீ முடிவும் நீ” பள்ளி நாட்களை இழக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும்
முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தை தர்புகா சிவா இயக்கியுள்ளார். இப்படத்தை சமீர் பாரத் ராம் தயாரித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் தர்புகா சிவாவே இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.
முதல் நீ முடிவும் நீ படத்தில் அம்ரிதா மேன்டரின், பூர்வா ரகுநாத், ஹரிஷ் குமார், ஷரன் குமார் என பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சுஜித் சாரங்
எடிட்டிங் – ஸ்ரீPஜித் சாரங்
பாடல் வரிகள் – தாமரை-கீர்த்தி-காபர் வாசுகி
கலை – வாசுதேவன்
இணை இயக்குனர் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் – ஆனந்த்
சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ளார்.
ப்ளஸ் ஒன் படிக்கும் பள்ளி வாழ்க்கையில் தொடங்குகிறது கதை. அனு, கேத்ரின், சைனீஸ், வினோத், துரை, பிரான்சிஸ், ரேகா, ரிச்சர்ட், உள்ளிட்ட சிலர் ஒரே பள்ளியில் படிக்கும் நண்பர்கள். பள்ளி சேட்டைகள், முதல் காதல், இசை, கிட்டார், கால்பந்து, வீடியோ கேசட்டுகள், கொண்டாட்டம், ஜாலியாக பள்ளி வாழ்க்கை. வினோத்தும் அவரோடு பள்ளியில் படிக்கும் ரேகாவும் (மீதா ரகுநாத்) காதலர்கள். அமைதியாகச் செல்லும் இவர்களது காதல் வாழ்க்கையில் நுழையும் சக மாணவியான விக்டோரியா என்ற பெண்ணால் சந்தேகம், மோதல் வெடிக்கிறது. இருவரும் பிரிகிறார்கள். இவர்களிடம் புரிதல் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை தடம் மாறுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் மீதிக் கதை.
வினோத் என்ற கதாபாத்திரத்தில் வரும் கிஷன் தாஸ், மீத்தா ரகுநாத், அம்ரிதா மேண்டரின், சரண்குமார் ராகுல் கண்ணன், மஞ்சுநாத், வருண் ராஜன், சச்சின் நாச்சியப்பன், கௌதம் ராஜ், நரேன், ஹரிணி ஆகியோர் கூட்டணியில் பள்ளி வாழ்க்கை, நண்பர்களோடு அரட்டை, காதல், எனத் தனது கதாபாத்திரத்திற்கு சிறப்பு செய்துள்ளார்கள்.
மற்றொரு கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு பேசப்படும் சைனீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷ், படத்திற்குப் நகைச்சுவைப் பொறுப்பை ஏற்று கூடுதல் பலம்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்கின் கலர் டோன்களும், கோணங்களும், கையால் பிடிக்கும் காட்சிகளும் திரைக்கதைக்கு நன்றாக துணை புரிந்துள்ளன.
தர்புகா சிவாவின் இசையும், பின்னணி இசையும் படத்தின் பிற்பாதியில் உணர்ச்சிகளை உயர்த்துகிறது.
ஸ்ரீஜித் சரங் எடிட்டிங்கில் முன்பாதி மற்றும் பின்பாதி இரண்டிலும் கொஞ்சம் வெட்டி இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்
ராஜதந்திரம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி … இசையமைப்பாளராக “என்னை நோக்கி பாயும் தோட்டா”,கிடாரி, படங்கள் மூலம் கவனிக்கப்பட்டு… தற்பொழுது இயக்குனராகவும் களம் கண்டிருக்கும் தர்புகா சிவா இயக்கத்தில் அவரது முதல் படமான “முதல் நீ.. முடிவும் நீ. டீன் ஏஜ் வாழ்க்கையின் வழக்கமான கடுமையைக் கடந்து செல்லும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஒரு கூட்டத்தின் எளிமையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் கதை. வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் சில விஷயங்கள் சமரசம் செய்யப்பட்டால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதையும், 90கால கட்டத்தின் பள்ளிப் பருவத்தை இனிமையாக கோர்த்து சுவாரஸ்யம் கலந்து சினிமாவாக்கியிருக்கிறார் இயக்குனர் தர்புகா சிவா.
மொத்தத்தில் ‘முதல் நீ முடிவும் நீ” பள்ளி நாட்களை இழக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும்.