மருத யதார்த்தத்தை மீறா கிராமத்து மதுரை விருந்து

0
232

மருத திரை விமர்சனம்: மருத யதார்த்தத்தை மீறா கிராமத்து மதுரை விருந்து

நடிப்பு: ராதிகா சரத்குமார், விஜி, சரவணன், வேல ராமமூர்த்தி, ஜி ஆர் எஸ், லவ்லின் சந்திரசேகர், மாரிமுத்து, கஞ்சா கருப்பு
இசை: இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு: பட்டுக்கோட்டை ரமேஷ் பி.
தயாரிப்பு: பிக்வே பிக்சர்ஸ் சபாபதி
இயக்கம்: ஜி ஆர் எஸ்

தென் மாவட்டங்களில் பிரபலமான செய்முரை வழக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. இது குடும்ப நிகழ்வில் மொய்ப்பணம் கொடுப்பது போன்றது, ஆனால் இங்கே பரிசு (பெரும்பாலும் ரொக்கமாக) வழங்குபவருக்கு குடும்ப நிகழ்வை நடத்துவதற்காக வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை எப்படி நடைமுறைக்கு வந்திருக்கும், ஒரு சமூகம் ஒன்று சேர்ந்து சக உறுப்பினருக்கு உதவுவது மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெருமைக்குரிய விஷயமாக அது எவ்வாறு உருவானது என்பதற்கான ஒரு சுருக்கமான எபிலோக் உடன் படம் தொடங்குகிறது.

பருத்திவீரன் சரவணன், ராதிகா இருவரும் சகோதர சகோதரிகள். உறவு விட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக சொந்தத்தில் ஒருவரைத் (மாரிமுத்து) தங்கைக்கு மணமுடித்து வைக்கிறார். தங்கை மகன் (நாயகன்) காதுகுத்து நிகழ்வில் பிரிந்த உறவினரிடம்; (வேல ராமமூர்த்தி) கௌரவத்தை விட்டுத்தரமாட்டேன் என்ற ஆவேசத்தோடும் வீராப்போடும் தங்கையின் பொருளாதாரத்தை மனதில் கொள்ளாமல் செய்முறை செய்கிறார் தாய் மாமன் சரவணன். சரவணனின் மனைவி விஜி தாங்கள் செய்த செய்முறை பணத்தை ராதிகா திரும்ப செய்தே ஆகவேண்டும் என்று ராதிகாவை பார்க்கும்போதெல்லாம் அவமதிக்கிறார். சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர் ராதிகாவின் கணவர் மாரிமுத்துவை அவமானப்படுத்த, மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால், வறுமைக்கு தள்ளப்படுகிறார் ராதிகா. இந்நிலையில் ஊதாரித்தனமாக சுற்றி திரியும் ராதிகாவின் ஒரே மகன் ஜிஆர்எஸ், விஜி சந்திரசேகரின் மகளும், காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.இதனிடையே விஜி சந்திரசேகர் தன் மகளை வசதியான மாப்பிள்ளைக்கு மணமுடித்துவைக்க செய்முறை நிகழ்வு ஏற்பாடுகள் செய்கிறார். அப்போது ராதிகாவீட்டுக்கு வரும் விஜி இம்முறை செய்முறை பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் ஊர் நடுவில் வைத்து அவமானப்படுத்துவேன் என்று கடுமையாக எச்சரிக்கிறார். இறுதியாக ராதிகாவின் குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

படத்தின் இயக்குனர் ஜி.ஆர்.எஸ் படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார். அழகான கதாபாத்திரத்தை வீணடித்துள்ளார். கிராமங்களில் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து நிகழ்ச்சிகளில் நடக்கும் செய்முறையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். தொடர்ந்து நடித்து வெற்றி பெற ஆசை இருந்தால் அதற்காக நிறைய மெனக்கெட வேண்டும்.

தாய்க்கே உரிய குணத்துடன் சாந்தமாக அமைதியாக ராதிகாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

வில்லியாக விஜி சந்திரசேகர் மிரட்டலான நடிப்பு வெளிப்படுத்தி ராதிகாவுடன் போட்டிப்போட்டு அதகளப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் ஒரு சில இடங்களில் அவரது நடிப்பின் பங்களிப்பு கொஞ்சம் அதிகம் தான்.
பருத்திவீரன் சரவணன் கம்பீரமான மீசையுடன் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வேல ராமமூர்த்தி, மாரிமுத்து இருவரும் திரைக்கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள்.

புதுமுகமாக அறிமுகமாகி இருக்கும் லவ்லின் சந்திரசேகர் அசல் கிராமத்து சாயல் பெண்ணாக தோற்றமளிக்கிறார்.

பட்டுக்கோட்டை ரமேஷின் ஒளிப்பதிவு நன்று. கிராமத்து காட்சியை மிக அழகாக காட்சிபடுத்தியிருக்கிறார்.

இளையராஜா இளையராஜாதான்.

மொத்தத்தில் மருத யதார்த்தத்தை மீறா கிராமத்து மதுரை விருந்து.